June 22

Date:22 Jun, 2017

June 22

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 22

                                                                                                         தேசிய செய்திகள் :

 

 • திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், காச நோயாளிகளுக்கு நிதியுதவியும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் காசநோயாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

 

 •  மத்திய புலனாய்வுத் துறை பணியில் இந்திய காவல் பணி தமிழகப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக நியமிக்க மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது.

 

 •  அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சமூக நிதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே தெரிவித்தார்.

 

 •  மத்திய ஊரக வளர்ச்சித் துறைச் செயலராக இருக்கும் ராஜூவ் கௌபா புதிய மத்திய உள்துறைச் செயலாராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய உள்துறைச் செயலராக உள்ள ராஜூவ் மகரிஷி ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

 

 •  ஆந்திர மாநிலம் சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்விசி 38 ராக்கெட் வெள்ளிக் கிழமை (ஜூன் 23) காலை 9.29 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் இன்று வியாழக் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 நானோ செயற்கைக் கோள்களையும், இந்தியாவின் சார்பில் கார்டோசாட் 2 செயற்கைக் கோளை இந்த ராக்கெட் சுமந்து செல்லவுள்ளது.                                 பூமியை துல்லியமாக கண்காணிக்கவும் தொலையுணர்வு வசதிகளை மேம்படுத்த கார்டோசாட் வகை செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இப்போது கார்டோசாட் 2 இ செயற்கை கோளை இஸ்ரோ அனுப்புகிறது. கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டது.

 

 •  சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஆறு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

 

 •  அமில வீச்சு, ஆட்டிஸம், மனநலக் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவுக் கொள்கையை மத்திய பணியாளர் நலத்துறை வகுத்துள்ளது.

 

 •  வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவை தங்களிடம் உள்ள பழைய ரூ. 500, ரூ 1000 நோட்டுக்களை ஜூலை 20ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) செலுத்த வேண்டுமென்று மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

 

 •  இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 

 • மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் 100 பேர் உயிரிழந்ததாக தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

 •  பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் மருத்துவச் சங்கத்தின் கௌரவத் துணைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் கைலாஷ் சந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

 

 •  அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு, ஐ.நா சார்பில் தபால் தலை வெளியீடு, தண்ணீர் பூஜை மற்றும் அமைதிக்காக தியானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதன் ஆசிரமத்தின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதிஜி ஆகியோர் தலைமையில் தண்ணீர் பூஜை நடைபெற்றது.

 

 •  பலுசிஸ்தான் மாகாணத்தில் பஞ்ச்குர் மாவட்டத்தில் பரோம் அருகே பறந்த இரானிய ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

 •  சவூதி அரேபியாவின் புதிய மன்னராக சவுதி நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மன்னர் சல்மானின் மகனுமான முகமது பின் சல்மான் (31) நியமிக்கப்பட்டுள்ளார். முகமது பின் சல்மான் தீவிரமான பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை கொண்டவர். மேலும் அமெரிக்காவுடனான சவுதியின் நட்புறவுக்கு அடையாளமாகவும் அறியப்படுகிறார்.

 

 •  இந்தியா, ஆப்கானிஸ்தானின் மிகவும் நம்பகமான கூட்டாளியாக உள்ளது என பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2016 முதல் மே 2017 வரையிலான காலப்பகுதியில் இந்தியா பல்வேறு பாதுகாப்பு உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக நான்கு ஆi-35 விமானங்களை கொடுத்துள்ளது. 2016ம் ஆண்டு மே மாதம் இந்தியா, ஈரானும் ஆப்கானிஸ்தானும், சபாஹார் துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 221 கோடி ரூ நிதியுதவி வழங்கியுள்ளது.

 

 •  அதிநவீன பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ரஷிய நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்துள்ளார்.

 

 •  இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிரின்ஸ் ஃபிலிப் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளவரசர் பிலிப்புக்கு கடந்த 2013 ஜூன் மாதம் வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்தது.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இன்று (ஜூன் 22) நடைபெறும் காலிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதுகின்றன.

 

 •  ஒவ்வொரு வருடமும் கால்வாய் நீச்சல் அசோசியேஷன் சர்வதேச அளவில் நீச்சல் போட்டி நடத்தி வருகிறது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த வருடம் சிஎஸ்ஏ நடத்திய நீச்சல் போட்டியில் ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பட் ஹலண்ட் ஷார்டீ (66) வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

 •  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது.

 

 •  ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்கள் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

 

 •  நீச்சலில் ஜாம்பவானாக உலக அளவில் கொண்டாடப்படும் தடகள வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 23 தங்கப் பதக்கங்களை பெற்று 2016 ரியோ ஒலிம்பிற்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ளார். மைக்கேல் பெல்ப்ஸ் தற்போது ‘அதிக தங்கமகன் ஏள பெரிய வெள்ளை சுறா’ என்கிற தலைப்பிலான டிஸ்கவரி சானல் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய வெள்ளை சுறாவுடன் போட்டி போட உள்ளார்.

 

                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • இந்தியாவின் 2-வது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் மீது இந்நிறுவனத்தின் முன்னாள் குடியேற்றப்பிரிவின் தலைவர் எரிக் க்ரீன் தெற்காசிய ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கைத் தொடர்ந்த எரிக் க்ரீன் 2011 அக்டோபரில் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து 2016, ஜூன் 28 வரை பணியாற்றினார்.

 

 •  உபெர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிராவிஸ் கலாநிக் நிறுவனத்திலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். 2009ம் ஆண்டு இவர் உபெர் நிறுவனத்தைத் தொடங்கினார்.

 

 •  பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, பி-நோட் விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது. ஒவ்வொரு பி-நோட்களுக்கும் 1000 டாலர் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்திய சந்தையை சோதனை செய்வதற்கு பி-நோட்கள் பயன்படும் என்பதால் பி-நோட்களுக்கு தடை விதிக்க முடியாது என செபி தலைவர் அஜய் தியாகி தெரிவித்தார்.

 

 •  இரு சக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஹோண்டா நிறுவனம் கிராமப்புற தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ‘க்ளிக்’ என்ற பெயரிலான ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ 42499.

 

                                                                          English Current Affairs

 

 • The Russian in which China’s largest power project recently started operation is – Yaroslavl

 

 • 6 medals won by Indian Wushu Team at the BRICS games held in Guangzhou china

 

 • Brooks koepka won the US open 2017 Golf tournament

 

 • Air Asia has been named the world’s best low cost airline at the 2017 skytiak world airline award.

 

 • The defence minister Arun Jaitley co-chaired the first meeting of the India –Russia high level committee on science and technology with Russian deputy prime minister Dmitry Rogozin in Novosibirsk, Russia

 

 • Petroleum and Natural gas ministry has established the GST facilitation cell to facilitate the implementation of new indirect tax regime for the stake holders.

 

 • Qatar Airways has been adjudged the world’s best airline of 2017.

 

 • Mohammed bin salman has been appointed as the new crown prince of Saudi Arabia by king salman.

 

 • The union government launched Energy Conservation Building Code (ECBC) 2017 for new commercial buildings.

 

 • Taj mahal palace hotel of Mumbai had recently acquired an image trademark under the trademark Act of 1999

 

 • A mobile app has been launched to connect people through yoga for scientific healthy living – “Celebrating Yoga”

 

 • According t0 Mercer’s 23rd annual cost of living survey Mumbai is placed 57th on the list.

 

 • Anil kumble stepped down from the position of Indian cricket team’s head coach.

 

 • Ramamani Iyengar memorial Yoga Institute Pune has been selected as the first receipient of PM award for outstanding contribution for promotion and development of Yoga.

Call Now
Message us on Whatsapp