June 21

Date:21 Jun, 2017

June 21

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 21

                                                                                                         தேசிய செய்திகள் :

 • தில்லியில் நிகழாண்டு தொடக்கம் முதல் இதுவரை 146 பேருக்கு சிக்கன்குனியாவும், 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தில்லியில் கடந்த ஆண்டு டெங்குவால் 4431 பேரும், சிக்கன்குன்யாவால் சுமார் 12200 பேரும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தியாவில் யோகா பயிற்சி அளிப்பதற்கு சுமார் 5 லட்சம் பயிற்றுநர்கள் தேவைப்படும் நிலையில், சுமார் 3 லட்சம் பயிற்றுநர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அஸோசேம்) தெரிவித்துள்ளது.

 

 • இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் மூன்றாவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்திரப்பிரதேசத் தலைநகர் லக்னௌவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று “சர்வதேச யோகா தினம்” கொண்டாடுவது என ஐ.நா.சபை கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி முடிவு செய்தது. முதலாவது சர்வதேச யோகா தினம் தில்லியின் ராஜபாதையில் 2015ம் ஆண்டு ஜூன் 21ல் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 37000 பேர் பங்கேற்றனர்.

 

 • இந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 1430 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 25 குழுக்களாக பிரிக்கப்பட்டு தனிதனியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 

 • வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியாவில் வசிக்க விசா பெற்றார். அவரது விசா காலம் ஜூலை 22ல் முடிவடைகிறது. இந்நிலையில் அவரது விசா காலத்தை ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

 

 • திரிபுராவில் ஹைட்ரோசெபாலஸ் (மூளையில் நீர் கோர்ப்பு) என்கிற குறைபாட்டால் 94 செமீ சுற்றளவு கொண்ட மிகப்பெரிய தலையுடன் பிறந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்த ஐந்தரை வயது சிறுமி ரூனா பேகம் ஜூன் 18 அன்று உயிரிழந்தார்.

 

 • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்காக 20 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

 

 • சரக்கு- சேவை வரி மசோதாவை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரி இழப்பீட்டு நிதி அளிக்கப்பட மாட்டாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 

 • இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்வில் பெரியதொரு யோகா பயிற்சியை இஸ்ரேல் நடத்தவுள்ளது. இப்பயிற்சியை புகழ் பெற்ற யோகா குரு ரோஹித் சபர்வால் நடத்த உள்ளார். மேலும் இந்திய -இஸ்ரேல் உறவு துவங்கி 25 வருடங்கள் கடந்து விட்டன. இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  1955ம் ஆண்டில் தூதரக உறவு துவங்கப்பட்டதிலிருந்து சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர். இரு நாடுகளும் பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையில் நட்புறவு கொண்டுள்ளது. சமீபத்தில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோட் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது நேபாளம்.

 

 •  பிரிட்டனில் மெர்ஸிசைட் மாகாணம் ஆக்ஸ்டன் கிராமத்தைச் சேர்ந்த லெஸ்லி ரெய்த் அவர்களின் கோழி பந்து வடிவில் முட்டை இட்டது. அந்த பந்து வடிவ முட்டை ரூ 8000க்கு ஏலம் போனது.

 

 •  பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதிகளில் இஸ்ரேல் ஆக்ரமித்துள்ள பகுதியில் புதிதாக யூதக் குடியிறுப்புகளை அமைக்க இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

 

 •  வங்காள தேசத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலியாகினர். கடந்த வாரம் வங்காள தேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 160க்கு மேற்பட்டோர் பலியாகினர்.

 

 •  அமெரிக்காவில் சுமார் 20 கோடி பேரின் ரகசிய தகவல் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு கட்சியின் ஒரு அங்கமான குடியரசு தேசியக் குழுவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட டீப் ரூட் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இத்தகவல் கசிந்துள்ளதாக செய்தி இணையதளமாக கிஸ்மோடா தெரிவித்துள்ளது.

 

 •  வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான தேர்தலில் இப்போதைய நீதிபதி தல்வீர் பண்டாரி இந்தியா சார்பில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • விவோ புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களிலிருந்து 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளது.

 

 •  கனடாவில் நடந்த குத்துச் சண்டை போட்டியின் போது காயமடைந்த முன்னாள் சாம்பியன் டிம் ஹாக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 

 •  ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.

 

 •  இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் மோதுவதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  ஹிமாசல பிரதேசத்தில் முதல் முறையாக நடைபெறவுள்ள மாநில ஒலிம்பிக் போட்டிகளை சர்வதேச மல்யுத்த வீரரான “கிரேட் காளி” என்று அழைக்கப்படும் தலிப் சிங் ராணா தொடங்கி வைக்க உள்ளார்.

 

 •  சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதற்கு பதிலாக, 4 ஆண்டுகளில் 2 டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

 

                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • நெல் மற்றும் பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கரீப் பருவத்தில் மேற்கொள்ளப்படும் 14 வகையான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஜூன் 7ம் தேதி ஒப்புதல் அளித்தது.

 

 •  தனிப்பட்ட முறையில் கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து நிதி திரட்ட உள்ளதாக ஹெச்.டி.எ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 •  அடுத்த நிதியாண்டு முதல் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட்களுக்கு 10 சதவீத வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

 

 •  வீட்டிலிருந்த படியே முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக சொந்த தொழில் புரியும் பெண் தொழில் முனைவோரை விரு வழங்கி கவுரவிக்க பிராமாண்ட அவதார் என்னும் நிறுவனம் முடிவு செய்துள்ளதுஃமொத்தம் 14க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் 50 தொழில் முனைவோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ‘சுயசக்தி 2017’ எனும் விருது வழங்கப்பட உள்ளது.

 

 •  பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது என தரச்சான்று நிறுவனமான பிட்ச் குறிப்பிட்டுள்ளது. 

                                                                           ENGLISH NEWS

 • United Nations children’s fund (UNICEF) announced the appointment of Muzoon Almellehan a lays old education activist and Syrian refugee as its youngest goodwill ambassador.

 

 • The world refugee day was observed on 21 June

 

 • India has become the 71st country to ratify the United Nations International convention on Road Transports that will boost trade and regional integration across south asia and beyond to become strategic trade hub.

 

 • India decided to re-nominate Dalveer bhandari by India as the judges of International court of Justice

 

 • A Joint naval exercise has been commenced recently at strait of Hormuz between Iran and China.

 

 • Chief minister captain Amarinder singh has announced free education for girls from nursery to the doctorate level in government institutions in Punjab.

 

 • The scandinarian country that recently committed to become a net-zero carbon emission emitter by 2045 –sweden

 

 • Lockheed marlin and Tata advanced systems limited recently signed an agreement for making 70-F 16 block fighter aircrafts

 

 • South korea has vowed to end the dependence on nuclear power amid concerns over a fukushima style disaster in future

 

 • Afghanistan president inaugurated the first air corridor that will directly connect it with India

 

 • Hamirpur the town in Himachal Pradesh would be hosting the state Olympic game 2017

 

 • The theme for 2017 International yoga day which is celebrated on 21June is yoga for health

 

 • Amitabh Bachan to promote goods and service Tax as its ambassador.

Call Now
Message us on Whatsapp