June 2

Date:02 Jun, 2017

June 2

We Shine Daily News

jkpo;

 ஜூன் 2

தேசிய செய்திகள் :

 • ஹரியானா மாநிலம் ரேடாக் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவாகியுள்ளது.

 

 • எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

 • மத்திய அரசின் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்;போம் என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடப்பதாகவும், மற்றும் இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல தொண்டு நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கான (2010-11 முதல் 2014-15) வருடாந்திர வரவு செலவு கணக்கை 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம்; ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சென்றடைந்தார். இந்நிலையில் கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகள் அமைக்க இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

 • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திடம் உள்ள மீத்தேன் துரப்பன குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு தமிழக அரசிடம் ஜெம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 • தேசிய தலைநகர் டெல்லியல் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவாகியுள்ளது.

 

 • பாகிஸ்தானில் புகுந்து தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் 81சதவீத நிதியுதவியை ஜப்பான் அரசு கடனாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

 

 • பொது விவகாரங்கள், சிவில் சேவை, கலை, மருத்துவம், கல்வி, இலக்கியம், அறிவியல், தொழில், வர்த்தகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு பத்மவிபூஷன், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கௌளரவிக்கிறது. இந்நிலையில் இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை ஆன்லைன் மூலம் அளிக்க வரும் செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டெனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

 • கருணை மனு உரிமையை குல்பூஷண் ஜாதவ் நிறைவேற்றிக் கொள்ளும் வரையில் அவரைத் தூக்கில் போட மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

 

 • பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது நடத்திய குண்டுவீச்சில் சிக்கி ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.

 

 • அமெரிக்காவின் பொது கொள்கை வரைவாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளரான நிருபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
 • அமெரிக்கா விசா கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 5 ஆண்டு சமூக வலைதள பயன்பாடு குறித்த விவரங்கள், 15 ஆண்டு வாழ்ச்கை தகவல் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

 • இந்தியா – ரஷ்யா இடையே சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 • சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா “பார்க்கர்” என்ற சூரிய ஆய்வுக் கலத்தை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் கால் இறுதிக்கு முன்னேறினர்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா உக்ரைனைச் சேர்ந்த அலெக்சாண்டர் டோல்கோபோலாவை வீழ்த்தி 3 சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • சென்டர் கோர்ட் டேபிள் டென்னிஸ் கிளப் சார்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆதரவுடன் முதலாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் 4ம் தேதி வரை நடக்கிறது. ஜூனியர், சப் – ஜூனியர் உள்பட 12 வகையாக நடத்தப்படும் இந்த போட்டியில் சர்வதேச வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

 

 • அமெரிக்காவின் ஓஸோன் ஹில் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய எழுத்துக்கூட்டுதல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனன்யா விஜய் என்ற 12 வயது சிறுமி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • எட்பாஸ்டனில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் விற்பனை 11.5சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மே மாதத்தில் அந்நிறுவனம் 1,36,962 கார்களை விற்பனை செய்துள்ளது.

 

 • நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் வேகமாக வளரும் பொருளாதார அடையாளம் இந்தியாவுக்கு மீண்டும் கிடைக்கும் என நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.

 

 • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மேலும் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 132.12 புள்ளிகள் உயர்ந்து 31269.71 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.64.34 காசுகளாக உள்ளது.

 

 • பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததற்கு செல்லாத நோட்டு காரணமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • 2020ம் ஆண்டுக்குள் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாயை ரூ.6000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிராமணி நாரா கூறியுள்ளார்.

English News

 • Ministry of drinking water and sanitation has launched a nation wide campaign titled ‘Darwaza Band. The aim of the campaign titled promote toilet use and freedom from open defecation across the country’s village

 

 • India has emerged as the third largest aviation market in the world with a passenger traffic of over 10 crore reported for 2016-2017

 

 • To boost port infrastructure, shipping minister Nitin Gadkari laid foundation stone of eight connectivity projects

 

 • UN has appointed an Indian human rights lawyer and 2 other experts to lead a probe into alleged rape, torture and killings by security forces against Rohingya muslims. The mission will be led by supreme court advocate Indira Jaising

 

 • Prime minster Narendra Modi has become the first Indian prime minister to visit the spain country since 1988.

 

 • Scientist are building the world’s first wind farm powered by giant kites in Britain. The farm can generate enough electricity to run 5,500 homes

 

 • World observed No Tobacco day which is observed annually on may 31. The draw is observed to draw attention to wide spread prevalence of tobacco use to negative health effects.

                        Theme :         Tobacco – A  threat to development

 

 • Health Minister JP Nadda is chosen for this year’s WHO DG Special Recognition Awards for accelerating India’s tobacco control initiatives.

 

 • Lionel Messi has won the European Golden shoe for record fourth time

 

 • The Government has expanded the Banks Board Bureau by adding two more members Shubhalaxmi panse and pradip shah have been inducted in the board. The bureau is headed by former comptroller and auditor general vinod Rai

 

 • Marmanpreet Kaur has become the first Indian woman to play in kia super league

 

 • The Swedish film ‘The Square’ has won the palme d ‘or,the top prize at 70th cannes flim festivel

 

 • The flim 120 beats per minutes ‘won the grandprix, the minner up prize

 

 • Google on I June 2017 marked the beginning of the eight – nation ICC champions trophy 2017 with an addictive doodle game

 

 • Indian captain virat Kohli Is the only Indian cricket to feature in the top 10 of the ICC player Rankings for ODI’s

 

 • ITT Kharagpur develops new tech to make cheaper pollution – free biofuel.

 

 • world bank has approved $240 million audit to Andhra Pradesh Government’s project to provide 24 X 7 power to its people

Call Now
Message us on Whatsapp