June 19

Date:19 Jun, 2017

June 19

                                             We Shine Daily News

                                                           தமிழ்

                                                        ஜூன் 19

                                                                                                         தேசிய செய்திகள் :

 

 • திட்டமிடப்பட்டபடி ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்தார்.

 

 •  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மத்திய அரசின் நடைமுறைப்படி பணிக்கு வந்த 15 ஆண்டுகளுக்கு பின்னரும், 25 ஆண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் செயல்திறன்கள் மதிப்பிடப்படுவது வழக்கமான நடைமுறை ஆகும்.

 

 •  கேரளா, காசர்கோடு நகராட்சியின் துருதி வார்டில் உள்ள காசா தெரு உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் உள்ளது. காசா என்பது பாலஸ்தீனிய சுய ஆட்சியின் கீழ் இஸ்ரேலுக்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள நிலப்பகுதி ஆகும். துருதி ஜூம்மா மஸ்ஜித் அருகிலுள்ள சாலை கடந்த மாதம் காசா எனப் பெயரிடப்பட்டது.

 

 •  நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பிறந்த குழந்தைக்கு ஆயுள் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

 

 •  பணியின்போது 100 சதவீத அளவுக்கு உடல் ஊனம் அடைகிற துணை ராணுவ வீரர்களுக்கான கருணைத் தொகை ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்கிறது. 2016ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

 •  பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது. புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

 

                                                                                       பன்னாட்டு செய்திகள் :

 

 

 • ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணத்தை டெபாசிட் செய்வது கடந்த சில ஆண்டுகளாக குறைந்து விட்டது என ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. 2006ம் ஆண்டு ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் ரூ 23000 கோடியாகும். இதுவே இந்தியர்களின் அதிகபட்ச டெபாசிட் ஆகும். 2015ம் ஆண்டு ரூ 8392 கோடியாகும். இது குறைந்த பட்ச டெபாசிட் தொகையாகும்.

 

 •  ஜப்பான் கடற்பகுதியில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர் கப்பல் மோதிய விபத்தில் மாயமான 7 அமெரிக்க மாலுமிகளின் உடல் இன்று மீட்கப்பட்டது.

 

 •  உலகிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தானாகவே இசையமைக்கும் ‘ஷிமோன்’ என்ற இசையமைக்கும் ரோபோவை அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள ஜார்ஜியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 7 ஆண்டுகள் உழைத்து உருவாக்கியுள்ளனர். சுமார் 5000 பாடல்கள் மூலம் ஷிமோனுக்க பயிற்சி அளிக்கப்பட்டது. 4 கரங்களையும் 8 மரக்குச்சிகளையும் உடைய ஷிமான் ‘மரிம்பா’ (கம்பிகளால் இணைக்கப்பட்ட மெல்லிய மரக் கட்டைகளை தட்டுவதன் மூலம் ஒலியெழுப்பும் கருவி) மூலமான இசையில் தேர்ச்சி பெற்றுள்ளது.

 

 •  சீனாவின் ஜியான்மர் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக பிரிக்ஸ் அமைப்பு வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு பெங்ஜிங்கில் இரு நாள்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துக் கொள்ள சென்ற வி.கே.சிங், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்துப் பேசினார்.

 

 •  சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டிலும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. இதன்படி இந்த ஆண்டில் ஜூன் 18ல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டது.

 

 •  கிரீஸ் நாட்டில் லெஸ்போஸ் தீவுக்கு தெற்கே இரவு 10.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.2 புள்ளிகளாக பதிவாகின.

 

                                                                               விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். சூப்பர் சீரிஸ் போட்டியில் ஸ்ரீகாந்த் வென்ற 3வது பட்டம் இது.

 

 •  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரி;க்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

 

 •  கோவையில் நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் திருநெல்வேலி அணியும், மகளிர் பிரிவில் சென்னை 1 மண்டல அணியும் பட்டம் வென்றன.

 

 •  உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி தனது 3வது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

 

 •  ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016ல் இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. 2018ல் நடைபெற இருந்த 7வது டி20 உலககோப்பை ரத்தாகிறது.

 

                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்துவரும் சூழலில் அதற்கு தயாராக இருக்கிறோம் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்திருக்கிறது.

 

 •  கோவையைச் சேர்ந்த ஏர் கார்னிவெல் நிறுவனத்தின் பறக்கும் அனுமதியை விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ ரத்து செய்துள்ளது. கடந்த 8 மாதங்களில் அனுமதி ரத்து செய்யப்படும் மூன்றாவது மண்டல விமான நிறுவனம் இதுவாகும்.

 

 •  வாராக்கடன் பட்டியலில் உள்ள 12 நிறுவனங்களின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க வங்கியாளர்கள் இன்று கூடுகின்றனர். இந்த 12 நிறுவனங்களும் ரூ 2.50 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக்கு செலுத்த வேண்டும். மொத்த வாராக்கடனில் இது 25 சதவீதமாகும்.

 

 •  வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் வர உள்ளது. இந்த யோசனையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் ரிசர்வ் வங்கியிக் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா முன்வைத்தார்.

 

 •  மத்திய அரசு தற்போதுள்ள பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சமச்சீரான வரிவிதிப்பை நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஜிஎஸ்டி அமலாக்கத்தால் பிஸ்கட் உள்ளிட்ட வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களின் விற்பனை தற்காலிகமாக குறையும் என பிரிட்டானியா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

 

Call Now
Message us on Whatsapp