June 14

Date:14 Jun, 2017

June 14

We Shine Daily News

தமிழ்

 ஜூன் 14

தேசிய செய்திகள் :

 • காஷ்மீரில் புல்வமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

 

 • நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை கொண்டு வரப்படுகிறது. இந்த வரி திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

 

 • மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனில் 196 சம்பள படிகள் 53 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சம்பள படிகளை குறைப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 • “நாடு முழுவதும் 800 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் 2 ஆண்டுகளுக்குள் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும் என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

 

 • உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில போக்குவரத்து துறைகளுக்கு இடையே புதிய உடன்பாடு லக்னோவில் கையெழுத்தானது. அப்போது முதல்வர் ஆதித்யநாத் போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்துகள் அதிகமாகின்றன. மேலும் போக்குவரத்து விதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பாடப் புத்தகங்களில் சாலை விதிகளை சேர்க்க உ.பி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

 • இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அதில் இத்தாலி நாட்டிற்கான இந்திய தூதராக ரீனட் சாந்து, டென்மார்க் நாட்டிற்கான இந்திய தூதராக அஜித் வி குப்தே, மற்றம் பெல்ஜியம் நாட்டிற்கான இந்திய தூதராக காயத்ரி குமாரி ஆகியோரை நியமித்துள்ளது.

 

 • புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதில் ஆங்கில எழுத்தான ‘ஏ’ வரிசையில் தொடங்கும் எண்களுடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 

 • இலங்கையில் நடந்த இறுதிகட்ட உள்நாட்டு போரின் போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி அளித்துள்ளார்.

 

 • ரஷ்யாவின் தேசிய தினம் ஜூன் 12ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் சக்தி வாய்ந்த ரஷ்யாவை உருவாக்குங்கள் என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் போர் ஆயத்த நிலையில் இல்லாதது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் நாடாளுமன்ற அமைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

 

 • ஜப்பான் நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குமமாட்டோ மாவட்டத்தில் உள்ள கென்காய் அணு மின் நிலையத்தில் 3, 4வது அணு உலைகளை இயக்க மாகாண உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 • இரண்டு நாள் பயணமாக வரும் 25, 26ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டெனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச இருக்கிறார். மேலும் இந்த சந்திப்பால் இந்திய – அமெரிக்க உறவு வலுவடையும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 

 • 8வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

 

 • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 3ம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

 • ஆசிய கால்பந்து போட்டி 2019ம் ஆண்டு அமீரகத்தில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெங்களுருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 10 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வீழ்த்தியது.

 

 • பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் லண்டனில் நடைபெறும் உலக டூர் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முதல் வீரராக தகுதி பெற்றுள்ளார்.

 

 • ஜகர்தாவில் நடந்து வரும் இந்தோனேஷியா ஒபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

 

 • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவின் ஜிதுராய் ஹீனா சித்து ஜோடி 76 என்ற கணக்கில் ரஷ்யா இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.

 

 • பெடரேஷன் கோப்பை தேசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் எம்.விஷ்ணு 7.40 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 • 2018ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஈரான் அணி தகுதி பெற்றுள்ளது.

 

 • ரியல் மாட்ரிட் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியோனா ரெனால்டோ ₹100 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஸ்பெயின் வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

 

 • தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்த கேரளாவைச் சேர்ந்த தங்க மங்கை பி.டி.உஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஐஐடி கான்பூர் முடிவு செய்துள்ளது. 

 

 • நார்வே செஸ் போட்டியின் 6வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் பாபியானோ கருணாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

 

 • இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் 13 பேருக்கு ஒரு முறை நிதிப் பலனாக தலா ரூ.35 லட்சம் வழங்கும் நிர்வாகக் குழுவின் (சிஒஏ) முடிவுக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 • கறுப்புப் பணம் வைத்திருப்போர் பற்றிய தகவல் தெரிவிப்பதற்கு மத்திய அரசு ஒரு இணைய தளத்தை உருவாக்கியிருந்தது. இதில் தகவல் தெரிவிப்பவர் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 45 ஆயிரம் மின்னஞ்சல்கள் வருமான வரித்துறைக்கு வந்துள்ளது. ஆனால் இதில 6 ஆயிரம் மின்னஞ்சல் மட்டுமே உண்மையானவை என்பது தெரியவந்துள்ளது.

 

 • கடந்த 18 மாதங்களில் டிவிஎஸ் எக்ஸ்.எல் வாகனம் 10 லட்சத்துக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.வைத்தியநாதன் கூறியுள்ளார்.

 

 • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டால் முக்கிய மருந்துகளின் விலை 2.29 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • வரும் 16ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இந்த விலை விவரங்களை பெட்ரோல் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புதிதாக செயலியை (ஆப்) இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • எச்.எம்.டி குளோபல் நிறுவனம், நோக்கியா பிராண்டில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை புது தில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து சென்ற மே மாதத்தில் முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ.41000 மதிப்பிலான தொகையை விலக்கியுள்ளனர்.

 

 • டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய வகை ‘ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ்’ என்ற மோட்டார் சைக்கிளை புது தில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது.

 

English News

 

 • Union Home Minister, Rajnath Singh decided to set up an expert committee to examine committee to examine the rules which allows free movement of Indian and Myanmrese citizens within 16kms for the border.

 

 • Sikkim govt signs MoU with British council to improve the educational structure of the schools of Sikkim.

 

 • According to the Minister of State for AYUSH. Shripad Yesso Naik approved proposals for setting up of 100 Ayurveda, Unani, Siddha and Homeopathy hospital across the country.

 

 • Group of Seven (G7) Environment Ministers Meeting was held in Bologna, Italy.

 

 • Panama has established formal diplomatic ties with china and broke with Taiwan.

 

 • The Reserve Bank of India (RBI) has announced on 13th June that it has issued Rs.500 denomination notes with inset letter A.

 

 • India has imposed an anti-dumping duty on import of ceramic table and kitchen ware items from china.

 

 • Water conservation Model ‘Project Jal Sanchay’ in Nalanda District of Bihar has been selected for the National award for excellence in the Mahatma Gandhi Rural Employment Gurantee Programme (MGNREGO) by the Ministry of Rural development.

 

 • The Insurance Regulatory and development Authority of India (IRDAI) has appointed the RK Sharma as administrator of the Sahara India Life Insurance company.
 • The state-run power NTPC has energized 150kwp canal top solar PV system on cooling water (CW) channel inside power station premises at its 2320 MW, Mouda Thermal power project.

 

 • According to the latest MRF Tyres ICC ODI player Rankings Indian captain Virat Kholi has reclaimed the world number one position in the ODI batting rankings.

 

 • Lewis Hamiltonwon the Canadian Grand Prix for the sixth time.

 

 • World day against Child Labour – June 12 2017.

            Theme : Conflicts and disasters, protect children from child labour.

 

Call Now
Message us on Whatsapp