June 13

Date:14 Jun, 2017

June 13

We Shine Daily News

தமிழ்

 ஜூன் 13

 

தேசிய செய்திகள் :

 

 • கோழிக்கோடு மாவட்டத்தில் கினலூர் எனுமிடத்தில் பிரபல விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஸ்கூல் ஆஃப் ஆதலெடிக்சின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தடகளத்தை பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தடகளம் உஷாவின் பள்ளியின் மூலம் தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ரூ 8.5 கோடி நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் கினலூர் எனுமிடத்தில் பிரபல விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஸ்கூல் ஆஃப் ஆதலெடிக்சின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தடகளத்தை பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தடகளம் உஷாவின் பள்ளியின் மூலம் தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ரூ 8.5 கோடி நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

 

 • தொழில்நுட்ப வல்லுநரான சசி வேம்பதி அரசு ஊடக நிறுவனமான பிரச்சார் பாரதியின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வானொலி, தூர்தஷன் ஆகியவற்றை நடத்தும் பிரச்சார் பாரதிக்கு குடிமைப்பணி சாராத முதல் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 • குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருநாள் பயணமாக ஜூன் 13 இன்று காஞ்சிபுரம் வருகிறார்.

 

 • பழங்களின் விலை அதிகரித்த போதிலும் காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகிய உணவுப் பொருள்களின் விலைவாசி குறைந்ததால் கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதம் 2.18மூஆகக் குறைந்துள்ளது.

 

 • அடல் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் மட்டுமே மத்திய அரசின் பங்களிப்பு நிதி கிடைக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • மேகாலயா சட்டப் பேரவையில் அந்த மாநில சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

 

 • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மூவர் குழுவை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார். இந்தக் குழுவில் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி மற்றும் வெங்கய்யா நாயுடு உறுப்பினர்களாக உள்ளனர்.

பன்னாட்டு செய்திகள் :

 

 

 • இந்தியச் சிறையிலிருந்து 11 பாகிஸ்தானியக் கைதிகளை மத்திய அரசு விடுதலை செய்தது. சிறைத் தண்டனை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.இந்தியச் சிறையிலிருந்து 11 பாகிஸ்தானியக் கைதிகளை மத்திய அரசு விடுதலை செய்தது. சிறைத் தண்டனை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

 

 • அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா தலைநகரில் உள்ள அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில் குடியேறினார்.

 

 • விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இலங்கையில் வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரை திருக்குறள் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்பட 8 இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் திறக்கப்பட உள்ளன.

 

 • இரண்டு நாள் பயணமாக ஜூன் 25, 26ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் Nபுச இருக்கிறார். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்த பிறகு மோடி அவரை முதல் முறையாக சந்தித்துப் பேச இருக்கிறார்.

 

 • பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார்.

 

 • கிரீஸில் ஏஜியன் கடற்கரையொட்டிய பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானது.

 

 • கத்தாருக்கு விமானங்கள், கப்பல்கள் மூலம் உணவுப் பொருள்களை ஈரான் வழங்கியது. ஐந்து விமானங்கள் மூலம் உணவுப் பொருள்களை வழங்கியதாக ஈரான் ஏர் விமான நிறுவனம் தெரிவித்தது.

 

 • ஐ.எஸ்.தீவிரவாதிகளின் முக்கிய நகரான சிரியாவின் ராக்கா நகரில் அமெரிக்க ஆதரவு படை முன்னேறி வருகிறது.

விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • பிரெஞ்சு ஓபனில் 10வது சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரஃபேல் நடால், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 31 வயதான நடால் பிரெஞ்சு ஓபனில் 10வது பட்டத்தை வென்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் 10 பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.பிரெஞ்சு ஓபனில் 10வது சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரஃபேல் நடால், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 31 வயதான நடால் பிரெஞ்சு ஓபனில் 10வது பட்டத்தை வென்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் 10 பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

 

 • ரிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

 • கனடா கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி, 33 நிமிடம், 5.154 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.

 

 • ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் அணி பிரிவில் இந்தியாவின் ஜிது ராய்-ஹீனா சித்து ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

 

 • அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டானின் ஷ_ ரூ 1 கோடியே 22 லட்சத்துக்கு ஏலம் போனது.

 

 • தென் ஆப்ரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் யூசுப் லோர்கட் ஜூன் 12 அன்று மரணமடைந்தார்.

 

 • கும்பNகுhணத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியில் கும்பகோணம் சாய் அணி முதலிடம் பிடித்தது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து சென்ற மே மாதத்தில் முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ 41000 மதிப்பிலான தொகையை விலக்கிக் கொண்டுள்ளனர்.பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து சென்ற மே மாதத்தில் முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ 41000 மதிப்பிலான தொகையை விலக்கிக் கொண்டுள்ளனர்.

 

 • டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய வகை ‘ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ்’ என்ற மோட்டார் சைக்கிளை புதுதில்லியில் அறிமுகப் படுத்தியது.

 

 • சர்வதேச செல்லிடப்பேசி விற்பனையில் ஐ-போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த ஹ_வாவே நிறுவனம் விஞ்சியுள்ளது.

 

 • இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.1 சதவீதமாக குறைந்தது.

 

 • கடலில் உள்ள கனிம சுரங்கங்களுக்கான ஏலத்தை விரைவில் நடத்துவதற்கு புதிய சட்ட வழிமுறைகளை சுரங்கத்துறை அமைச்சகம் உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

 • புதிய வருமான வரி சட்டத்தின் படி ஆதார் அட்டை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற பிரிவானது தவறான முடிவாகும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 

 • கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. 

 

English News

 • Government launches Tele-law initiative

                The scheme will be launched as a pilot across 500 CSCS in Uttar Pradesh and Bihar.

 

 • GST Council Lowers Tax Rate for 66 Items small biz gets relief.

 

 • Tax rate on insulin and cashew has been lowered to 5% from the earlier 12%

 

 • Indian Railways to induct 40,000 refurbished coaches by 2023, earmarks Rs.8,000 Crore.

 

 • Council of Scientific and Industrial Research (CSIR) signs Agreement with the Metal Industries Development Institute (MIDI), Ethiopia.

 

 • Pema Khandu, the Chief Minister of Arunachal Pradesh, has demanded a separate time zone for Arunachal Pradesh to improve work efficiency and save electricity in the state.

 

 • Meghalaya passes resolution opposing centre’s notification on cattle sale.

 

 • World’s largest floating solar farm launched in China consisting 160000 planets. The plant has been built in Huainan city, Anhui province.

 

 • India emerges as 7th largest exporter of agri-products globally-commerce secretary Mrs.Rita Teaotia.

 

 • Indian girl Padmalaya Nanda bags Little Miss Universe Internet 2017 crown at Little Miss Universe in Georgia.

 

 • Calcutta High Court Judge C S Karnan who was sentenced six months of Imprisonment by Supreme Court.

 

 • The world’s smallest & cheapest private jet ‘vision Jet’ launched in USA.

 

 • Young Lions Win England’s first World title in 51 years.

 

 • Vietnam Grand Master Nguyen Ductioa has bagged a decisive win against Indian GM Neelotpal Das on Mumbai Mayor’s cup. International open chess tournament.

 

 • Rafeal Nadal moves up to No.2 in ATP ranking Novak Djokovic slides to fourth.

 

 • India’s Jitu Rai and Heena Sindhu have won the gold Medal in mixed team 10m air pistol event of the ISSF world cup at Gabala, Azerbaijan.

 

 • International Albinism Awareness Day – June 13.

Call Now
Message us on Whatsapp