June 11

Date:11 Jun, 2017

June 11

We Shine Daily News

jkpo;

 ஜூன் 11

தேசிய செய்திகள் :

 • வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக ஜூலை 1ம் தேதி வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்றிருக்கிறவர்கள் தங்களது ஆதார் எண்ணை வருமான வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

 

 • நாடு முழுவதும் அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரியை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சரக்கு, சேவை வரியை அமல்படுத்த உயர் அதிகாரிகள் அடங்கிய 8 நிலைக்குழுக்களையும் மற்றும் 18 பிரிவு குழுக்களையும் ஜிஎஸ்டி வரி கவுன்சில் அமைத்துள்ளது.

 

 • ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மாலயா நந்தா குட்டி பிரபஞ்ச அழகியாக தேர்வாகி சரித்திரம் படைத்துள்ளார். மேலும் இந்தப் போட்டியில் பத்மாலயா நந்தா பட்டம் வென்ற முதல் இந்திய சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியள்ளது.

 

 • ராணுவ காவல் படை பிரிவில் விரைவில் பெண்கள் பணி அமர்த்ப்படுவார்கள் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

 

 • சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட 4 நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை கடந்த 5ம் தேதி முறித்தன. இதையடுத்து வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று அந்த நாடுகள் உறுதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

 

 • ஆதார் எண் இல்லாதவர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளதால் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் எண் ரத்து செய்யப்படாது என்று வருமான வரித்துறையின் நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

 

 • பருவநிலை மாற்றத்தால் கடற்கரையை ஒட்டியுள்ள சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மாநகரங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

 

 • கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைப்பதற்கு ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்நிலையில், அங்கு ஏற்கனவே இயங்கி வரும் 2 அணு உலைகளால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. எனவே அந்த ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 • இந்தியா மற்றும் மோரீஷஸ் நாடாளுமன்றங்களின் சிறந்த மரபுகளையும், நடைமுறைகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.

பன்னாட்டு செய்திகள் :

 • ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா அறிவித்துள்ளார்.

 

 • பிலிப்பைன்ஸ் நாட்டின் மாராவி நகரை மீட்பதற்காக பயங்கரவாத குழுவுடன் பிலிப்பைன்ஸ் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 • பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கத்தார் நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 • டெக்ரானில் உள்ள ஈரான் பாராளுமன்றத்திலும், நவீன ஈரானின் நிறுவனமான கொமேனியின் நினைவிடத்திலும் கடந்த 7ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அரசு நேற்று அறிவித்துள்ளது.

 

 • ஆப்கானிஸ்தான் ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் தவறுதலாக நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தான் போலீசார் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

 • பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததற்குப் பொறுப்பேற்று பிரதமர் தெரசா மேவின் இரு ஆலோசகர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

 

 • மத்திய தரைக்கடல் பகுதியில் தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட எட்டு மீட்பு நடவடிக்கைகளின் போது இத்தாலிக்கு புகலிடம் தேடி அகதிகளாகச் சென்று நடுக்கடலில் தத்தளித்த 900 பேரை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள் :

 • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதி வாய்ப்பைப் பெறுவதற்கான ஆட்டத்தில் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

 

 • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் நேற்று நடந்த 10வது லீக்கில் ஆஸ்திரேலியா அணி போட்டியை விட்டு வெளியேறியது.

 

 • ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பவுலர் ரஷித்கான் 7 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி லாத்வியா விராங்கனை ஆஸ்டாபென்கோ சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ரபெல் நடாலும், 3ம் நிலை வீரர் வாவ்ரிங்காவும் கோதாவில் இன்று மோதுகின்றனர்.

 

 • உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லாத்வியா அணியை வீழ்த்தியது.

 

 • வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நீடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 26ல் நடைபெறும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

 

 • கோவை டி.வி.எஸ் லேடீஸ் ஒன்-மேக் சீரிஸ் 2017 மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றில் பெங்களுரு வீராங்கனை ஐஸ்வர்யா முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக விளையாட்டு அறிவியல் மையத்தின் சிஎஸ்எஸ் வாட்மோர் கிரிக்கெட் மையம் சார்பில் வரும் 16ம் தேதி முதல் 2018 மார்ச் மாதம் 17ம் தேதி வரை பயிற்சியாளர்களுக்கான முகாம் நடைபெற உள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படாத பொருட்களுக்கான வரியை நிர்ணயம் செய்ய, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது.

 

 • இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் துவரை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் துவரம் பருப்பு விலை தொடர்ந்து சரிந்து தற்போது கிலோ ரூ.55க்கு விற்கப்படுகிறது.

 

 • ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பணியை தொடங்கியுள்ள நிலையில் இந்த நிறுவனம் கோரிய சில வரிச்சலுகைகளை வழங்குவதற்கு முன்பாக இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதிக்க திட்டமிட்டுள்ளது.

 

 • நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடந்தது. அப்போது முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை 380 காசுகளில் இருந்து 390 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

 • ராஜஸ்தானில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ராஜஸ்தான் மாநில கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5லட்சம் மதிப்பில் ‘ராஜ் சாகர்’ என்ற பெயரில் தனிநபர் விபத்து காப்பீடு திட்டத்துக்கு ராஜஸ்தான் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

 • மாருதி சுசுகியின் விட்டாரா பிரஸ்ஸா கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அந்நிறுவனம் விரைவில் பல புதிய மாடல் எஸ்.யூ.வி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) கார்களை சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

 

 • ஜிஎஸ்டி விதிமுறைகளைப் பின்பற்ற ஒன்பது மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி) ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கேட்டுள்ளது.

Call Now
Message us on Whatsapp