JULY31

Date:31 Jul, 2017

JULY31

                                                                                                                                                                                             

                                             We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஜூலை 31

                                          தேசிய செய்திகள்

 • புதுடெல்லி முன்சிபல் கவுன்சில் – ஒரே நாளில் 56 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டியது.

 

 • நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நகரங்களில், மாநில அரசுகள் மூலம் உலகத் தரத்திலான பேருந்து நிலையங்களை அமைக்கவும் அத்திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதியை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளர்.

 

 • மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று(31.07.2017) வெளியிடப்பட்டது, இதில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 6வது இடத்தையும், கோவை வேளாண் பல்கலைக்கழகம் 20வது இடத்தை பிடித்துள்ளது.

 

 • கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனிக் கட்டாயமாக்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கும், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும் ஒரு வேலை வாய்ப்பு திட்டத்தை அளிக்க மத்திய அரசு திட்மிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் “இயற்கை வழிகாட்டி” என்னும் பயிற்சி அளிக்கப் பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • சென்னையை சேர்ந்த, கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஜனார்த்தனன் ஓவியம், வரைகலை, எடிட்டங் என பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று நூற்றுக்கும் அதிகமான விருதுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

 

 • போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு தொடர்பாக காணாமல் போன அனைத்து கோப்புகளையும் கண்டுபிடித்து தாக்கல் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொது கணக்குக் குழு(பிஏசி) உத்தரவிட்டுள்ளது.

 

 • “எய்ம்ஸ் இந்தியா” அமைப்பின் மூலம் தமிழகத்தில் வறட்சி மற்றும் விவசாயக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்கவும், நீர்நிலைகளை மீட்டு உதவிடும் வகையில் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு நடத்தப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.

 

 • தமிழகத்தின் சுற்றுலாத் தளமான இராமமேஸ்வரத்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு, முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி(24.கி.மீ) வரை புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

 

                                                                                                             பன்னாட்டு   செய்திகள்

 • உலகிலேயே மிக நீளமான தொங்கும் நடைபாதை : ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் – 500 மீட்டர்(1,640 அடி) நீளம்.

 

 • பாதசாரிகள் சாலையை கடக்கும் போது மொபைல் போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவில் உள்ள ஹொனொலுலு நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

 • இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாடு தொடர்பாக இலங்கை – சீனா இடையே 99 ஆண்டுக்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டன.

 

 • இராணுவ தளவாடங்களையும், வீரர்களையும் சுமந்து செல்வதற்காக ரஷியாவிடமிருந்து அதிநவீன 48 எம்ஐ – 17 ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

 

 • ரஷியாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் வெளியேற வேண்டும என ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் உத்தரவிட்டுள்ளர்

 

 • தைவானில் ‘நேவாட்’ என்னும் புயல் நேற்று(30.07.2017) தாக்கியது. இதனால் 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பல்லாயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.

 

 • அமெரிக்கா, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை துல்லியமாக குறி வைத்து இடைமறித்து தாக்கி அழிக்கும் “தாட்” என்ற ஏவுகணையை கண்டுபிடித்து சோதனையை மேற்கொண்டது இச்சோதனை வெற்றியில் முடிந்தது.

 

 • பல்வேறு துறைகளில் முன்னேறி வரும் இந்தியாவிற்கு, ஜப்பான் எப்போதும் ஆதரவு தரும் என்று இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் ரியோஜி நோடா கூறியுள்ளார்.

 

 • பிரான்ஸ் நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 1966ம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பெண்ணின் சிதைந்த கை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

                                                                                                           விளையாட்டு செய்திகள்

                                                                                     

 • ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டி சீனாவின் பன்ஜின் நகரில் நடந்தது, இதில் 10 நாடுகளை சேர்ந்த 26 வீரர்கள் களந்து கொண்டனர். 7 மற்றும் 9 வயதிற்குள்ளான சிறுமிகளுக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆதித்யா மற்றும் சுஹானி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று(30.07.2017) நடந்த ஆட்டத்தில் விருவள்ளூ வீரன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

 

 • 2017ம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 11வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரியில் ஜெர்மணியை சேர்ந்த வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

 • ஹங்கேரியின் புரோபெஸ்ட் நகரில் நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் சாதனைப் படைத்துள்ளார்

 

 • 5வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று(30.07.2017) நடந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை மும்பை அணி வீழ்த்தியது.

 

 • டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ‘ஹாட்ரிக்’ அணி வெற்றி பெற்றது.

 

 • 91வது எம்சிசி-முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் 4வது நாளாக நடைபெற்ற ஆட்டங்களில் பஞ்சாப் நேஷனல் அணி, ராணுவ லெவன் அணி மற்றும் ஹாக்கி பெங்களுர் அணிகள் வெற்றி பெற்றனர்.

 

 • ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற ஜோர்டான் ஜுனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா 7 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என்று மொத்தம் 24 பதக்கங்களைக் கைப்பற்றியது.

 

 • தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ், தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளர்.

 

                                                                                               பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம், பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்க முடிவு செய்துள்ளது.

 

 • ஐஐஎம் நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்ங்கப்பட்டுள்ளது. இனி டிகிரியும், முனைவர் பட்டமும் அந்நிறுவனங்களே வழங்கும்.

 

 • தொடர்ந்து 4வது வாரமாக இந்தியப் பங்கு சந்தை புதிய உச்சத்துடன் நிறைவடைந்திருக்கின்றன.

 

 • அடிப்படைக் கட்டிடங்களில் மத்திய அரசு கொண்டுள்ள சீர்த்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்று எல் மற்றும் டி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஆர்.சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

 • கலைநயமிக்க இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

 

 • கார் தயாரிப்பு நிறுவனங்கள் உயிர் காக்கும் ஏர் பேக், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டியாகோ இவி என்ற பெயரில் பேட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.

Current Affairs

 

 • The Punjab government launched “Apni Gaddi Apni Rozgar” scheme the state government will be providing commercial two wheeler and four wheeler to generate job opportunities for youth and providing better mobile transport in Punjab

 

 • The 7th edition of SAARC Artist camp and Exhibition of painting has begun at Kathmandu

 

 • Canara bank launched its first digital branch “Candi” in bangaluru

 

 • Ramon Magsaysay Award winners
  • Yoshiaki Ishizawa(japan) restore Cambodia’s culture monument such as Angkor Wat
  • Gethsie Shanmugam (srilanka): Worked on rebuilding war- scarred lives, especially women and children.Abdon Nababan (Indonesia) – Advocacy on behalf of adapt or Indigenous communities of his country.
  • Tony Tay (Singapore) , Ms. Lila de Lima (Philippines)

 

 • Caeleb Dressel becomes first ever swimmer to win three gold medals in one night at Worlds Championship.

 

Call Now
Message us on Whatsapp