JULY29

Date:29 Jul, 2017

JULY29

                                                                                                                                                                                                   

                                     We Shine Daily News

                                                 தமிழ்

                                              ஜூலை 29

                                       தேசிய செய்திகள்

 • விமானப்படை, கடற்படை, தரைப்படைகளின் தளபதிகளுக்கு முக்கியமான ‘சிவில்’ பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்கும் வகையில் ஆண்டுக்கு தலா ரூ.800 கோடி வரை செலவிட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • வரதட்சணை புகாருக்கு உடனே கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • கர்நாடகாவில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் பெயர்ப் பலகைகளில் ஹிந்தி வார்த்தைகளை நீக்கி விட வேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாநில முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.

 

 • இந்திய நதிகளின் வெள்ளப் பெருக்கை அறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள 375 தொலைத் தொடர்பு நிலையங்களில் 222 நிலையங்கள் இயங்கவில்லை என மத்திய கணக்கு தணிக்கை குழு(சிஏஜி) கூறியுள்ளது.

 

 • உலகளவில் தமிழாய்வுக்கு சிறந்து விளங்கும் நூலகம் – மதுரை பாண்டியன் நூலகம்

 

 • மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு உதவும் வகையில் ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் இரயில் பெட்டிகளின் மேற்க்கூரை, கண்ணாடியால் தயாரிக்கப்பட பெரம்பூர் ஐசிஎப்.க்கு இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

 • 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் – மாற்று திறனாளிகள் நலனுக்காகச் சிறப்பாக பணிபுரிந்த திண்டுக்கல் ஆட்சியர் ந.வெங்கடாசலம், கிருஷ்ணகிரி ஆட்சியர் த.பொ.ராஜேஷ், மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி ஆகியோர்க்கு தமிழக அரசு சார்பில் “மாநில விருது” வழங்கப்பட்டது.

 

 • திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்,மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பழங்கால பொருள்கள் மற்றும் பணத்தாள்கள் குறித்த கண்காட்சி தொடங்கியது.

 

                                                                                                                     பன்னாட்டு   செய்திகள்

 • பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியா அரசு, தற்போது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் எங்களால் தாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

 

 • பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராஜினமா செய்தார். இவரின் இளைய சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

 

 • புதிய பொருளாதார தடை விதிக்கும் மசோதா, அமெரிக்காவில் நிறைவேறியதால் அதற்கு பதிலாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு ரஷிய வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

 • வெனிசூலா, தலைநகர் கராக்கஸில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களின் குடும்பத்தினர் நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

 • அமெரிக்கா – மெக்ஸிகோ இடையே எல்லைச் சுவர் எழுப்ப தனி நிதி ஒதுக்கிடு ரூ.78,960 கோடி டாலருக்கான (சுமார் ரூ51.32 லட்சம் கோடி) பட்ஜெட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • செயற்கைக் கோளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட சிமோர்க் ரக ஏவுகணையை விண்ணில் செலுத்தி புதிய சோதனையை ஈரான் மேற்கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது

 

 • தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் ‘பாண்டேசன் அல்கராமா’ எனும் தொண்டு நிறுவனம் மனித உரிமை ஆணையத்திற்கு ஆலோசனை வழங்குவதை ஐ.நா தடை செய்துள்ளது.

 

 • உலகில் முதன் முறையாக ஊழியர்களின் உடலில் மைக்ரோசிப் பொருத்தியது – ஸ்வீடன் நிறுவனம் ஏப்ரல் – 3, 2017                                                                                               

 

 

    விளையாட்டு செய்திகள்

 • செக் நாட்டில் நடக்கும் கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் 69 கிலோ எடைப் பிரிவில் மனோஜ் குமார், 81 கிலோ எடைப் பிரிவில் மணிஷ் பன்வார், 91 கிலோ எடைப் பிரிவில் சதிஷ் குமார், ஆகிய மூன்று இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

 

 • 91-வது எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் பொட்டியின் 2-வது நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ரயில்வே, ஓஎன்ஜிசி,பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிகள் வெற்றி பெற்றன.

 

 • விராட்கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் தனியார் நிறுவன பதவியை ராஜினாமா செய்ய பிசிசிஐ வற்புறுத்தியுள்ளது.

 

 • இலங்கையில் நடைபெற்றுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா முதல் போட்டியிலே அதிக சிக்சர் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருவள்ளுர் வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

 

 • சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 6 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

 • புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று(28.07.2017) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

 

 • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற கேரளாவைச் சேர்ந்த பி.யூ. சித்ராவை உலக தடகள போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி முதல் காலாண்டில் ரூ.2,604.73 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • பங்குகளை பரிமாற்றம் செய்தது தொடர்பாக வழக்கில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு ரூ.579 கோடி வழங்க வேண்டும் என்று உச்ச நிதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 1 சதவீதம் உயர்ந்து ரூ.147.97 கோடியாக உள்ளது.

 

 • இந்தியாவில் இயற்கை வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று வருவதாக ஸ்ரெஸ்டா நேச்சுரல் பயோபுராடெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர ரெட்டி சீலம் தெரிவித்துள்ளார்.

 

 • ஐடிசி நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் ரூ.2560.50 கோடியாக உள்ளது.

 

 • இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜுன் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.26 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

 

Current Affairs

 

 • Lok Sabha passed companies Bill 2016, a bill to amend the Companies Act 2013, seeking to straight corporate governance.

 

 • The Punjab health minister Brahm Mahindra has launched a flagship are companion health scheme.

 

 • Bangalore has ranked 40th out of 50 cities on Women Entrepreneur (WE) cities Index 2017 study released by Dell.

 

 • BRICS nations sign memorandum to establish a mechanism for taxation cooperation which held in Xiamen, china.

 

 • Union Minister of science & Technology Dr.Harshvardhan launched “sagar Vani” on the occasion of Foundation day of Ministry of earth sciences.

 

 • Iran has successfully launched a satellite-carrying rocket ‘Simorgh’ that is capable of carrying a satellite weighing 250 kilograms.

 

 • Indian shuttler HS Prannoy climbed to 17th position in the BWF world ranking.

 

 • World Hepatitis day – July -28 (Theme:  “Eliminate Hepatitis”)

Call Now
Message us on Whatsapp