JULY28

Date:28 Jul, 2017

JULY28

                                                                                                                                                                                                   

                                     We Shine Daily News

                                                 தமிழ்

                                              ஜூலை 28

                                          தேசிய செய்திகள்

 • ஓவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துகளில் சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் பலியாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றியது போல நீட் தேர்வுக்கும் அவசரச் சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • கீழடியில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டுகள் பழைமையானது என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

 

 • ஆதார் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் உரிமை(பிரைவசி) என்பது பன்முகத்தன்மை வாய்ந்ததால் அதனை அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • பெரம்பலூர் நகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்களுக்கு மாதந்தோறும் 60 காஸ் சிலிண்டர்கள் தேவைப்படுவதால் செலவை குறைக்கும் வகையில் நவீன இந்திரங்கள் மூலம் மனிதக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் “பயோ காஸ்” தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

 

 • ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்களின் பெயரை அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக சூட்டியுள்ளது.

 

 • கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தரம் சிங் மாரப்படைப்பால் மரணம் அடைந்தார்.

 

 • தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போல் ஆந்திர மாநிலத்தில் அண்ணா கேண்டீனை அமைச்சர் நாராயணா தொடங்கி வைத்தார்.

 

                                                                                                                     பன்னாட்டு   செய்திகள்

 • உலகின் மிகப்பெரும் பணக்காரார் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பில்கேட்சை(90 மில்லியன் டாலார்கள்), அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ்(90.60 மில்லியன் டாலர்கள்) பின்னுக்கு தள்ளினார்.

 

 • பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 • அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பதவியில் இருந்த போது, ஏழை எளிய மக்களும் மருத்துவ காப்பீடு செய்துகொள்ள,குறைந்த பிரிமியத்தில் ‘ஒபாமா கேர்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். சுமார் 2 கோடி மக்கள் இத்திட்டத்தால் பலன் அடைந்திருக்கின்றனர். தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை கைக்கொண்டார், அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

 

 • அமெரிக்காவில் அரசுக்கு தெரியாமல் துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் சைலன்சர்கள் விற்ற மொஹித் சவுகான் என்ற இந்தியர் அந்நாட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

 • சீனாவுடன் இந்திய அரசு கொண்டுள்ள உறவு பன்முகத்தன்மை வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் பக்குவமான முறையில் கையாளப்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்க மாணவர்கள் மிக உயர்தரமான கல்வியைப் பெற வேண்டும் என்று மாணவர்களின் நலன் கருதி அமெரிக்க கல்வித் துறைக்கு தனது மூன்று மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

 

 • ஆசிய நோபல் பரிசு – என்று அழைக்கப்படும் “மகஸேஸே விருதுக்கு” இலங்கையைச் சேர்ந்த தமிழ் சமூக சேவகர் ஞானதீபம் ஷன்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 • மலேசியாவில் தொழிலாளர்கள் மத்தியில் குடிவரவுத்துறை சோதனையை மேற்கொண்டது இதில் முறையாக பதிவு செய்யாத வெளி நாடுகளிலிருந்து வந்த 5065 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் முஸ்தாபர்அலி தெரிவித்துள்ளார்.

 

                                                                                                             விளையாட்டு செய்திகள்

 

 • இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேபில் நடந்தது இதில் இந்திய அணி 600 ரன்கள் குவிப்பு.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி அணி வெற்றி பெற்றது.

 

 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 10 வீராங்கனைகளுக்கு தலா ரூ.13 லட்சம் பரிசளிக்கவுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி சுபாஷ் பிரபு அறிவித்துள்ளார்.

 

 • 5வது சீசன் புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் 28.07.2017(இன்று) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுகு டைட்டன் அணியும் மோதுகின்றன.

 

 • ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை ஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக நியமனம் செய்ய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு வழங்கியுள்ளார்.

 

 • எம்.சி.சி.முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் முதல் நாளில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணி வெற்றி பெற்றது.

 

 • 2017 – ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது – இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • ஸ்நாப்டீல் குழுமத்தை சேர்ந்த பிரீசார்ஜ் நிறுவனத்தை 385 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஆக்ஸிஸ் வங்கி முடிவெடுத்துள்ளது.

 

 • செக்யூரெட்டி அண்ட் இன்டெலிஜன்ஸ் சர்வீஸ்(எஸ்ஐஎஸ்) நிறுவனம் பொதுப்பங்கை(ஐபிஓ) ஜுலை 31ம் தேதி வெளியிடுகிறது.

 

 • சென்னையைச் சேர்ந்த கால்டாக்சி நிறுவனமான பாஸ்ட் டிராக், செயலி மூலமான சேவைகளுக்கு குறைவான கட்டணத்தை அறிவித்துள்ளது.

 

 • மாருதி சுசூகியின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 4.4 சதவீதம் உயர்ந்து ரூ.1,556 கோடியாக உள்ளது.

 

 • சென்னை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் ரூ.206.58 கோடியாக உள்ளது.

 

 • நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நிறுவனமாகத் திகழும் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.2,171 கோடி லாபம் ஈட்டியது.

 

 • டியூப் இன்வெஸ்ட்ஸ் ஆப் இந்தியாவின் (டிஐஐ), துணை நிறுவனமான சாந்தி கியர்ஸ் விற்றுமுதல் ஏப்ரல் – ஜுன் காலாண்டில் 22 சதவீதம் அதிகரித்தது.

Current Affairs

 

 • The  Ocean in which a group of scientist recently discovered a new species of glow in the dark shark is – pacific ocean

 

 • The codex Alimentarus commission recently adopted three spices. They are – black pepper, white cumin and green thyme.

 

 • The country that will host the 2018 AFC U-19 championship is Indonesia

 

 • Maharashtra has successfully brought down child trafficking rate from 40 percent to 5 percent

 

 • Amazon Fonder Jeff Bezos surpasses Bill Gates as World’s Richest person

 

 • PM Modi inaugurated APJ Abdul Kalama’s Memorial in Rameswaram in Tamilnadu on July 27

 

 • Mumbai metro launches India’s first mobile ticketing system     “On Go”

 

 • Punjab National Bank and Bajaj Alliaz General Insurance have signed an agreement for the distribution of insurance products

 

 • National centre for seismology launches ‘India Quake’ – An app for Earthquake parameter Dissemination

 

 • Uttarakhand records second highest tiger count in India.

Call Now
Message us on Whatsapp