JULY27

Date:27 Jul, 2017

JULY27

                                                                                                                                                                                                   

                                     We Shine Daily News

                                                 தமிழ்

                                              ஜூலை 27

                                         தேசிய செய்திகள்

 

 

 • பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமார் ஆறாவது முறையாக பதவியேற்றார்.

 

 • முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு தினமான(27.07.17) இன்று, ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவு மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

 

 • ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தங்களது வீரர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு உலோகத் தகடுகள், மரம் மற்றும் கான்கீரீட் பலகை மூலம் பாதுகாப்பு கவசம் அமைக்கும் முயற்சியை மத்திய ரீசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மேற்கொண்டுள்ளது.

 

 • இனம், மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்படும் வன்முறை அல்லது தாக்குதல் போன்றவற்றைக் கையாள்வதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் (ஐபிசி) புதிய ஷரத்துக்களை சேர்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • திருமணத்தைப் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • மாற்றுத் திறனாளி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக மனநலம் குன்றிய இளைஞருக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தமிழ்மொழியின் மேன்மையை ஆராய்சி மூலம் உலகுக்குத் தெரிவிக்கும் இந்த நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றம் செய்யக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

 • அண்ணா பல்கலைக்கழகம் ‘அரியர்’ முறையை கைவிட்டு பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு (விருப்பப் பாடத் தேர்வு முறை) புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

                                                                                                         பன்னாட்டு   செய்திகள்

 

 • அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

 • ரஷியா, ஈரான், வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க பாராளுமன்ற மசோதாவில் நிறைவேறியது.

 

 • அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தீர்மானமான ரஷிய பொருளாதார தடை ரஷ்யாவுக்கும் அமெரிக்காக்கும் இடையேயான உறவுகளை சிதைக்கும் என்று ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளர்.

 

 • பெட்ரோல், டீசல் கார்களை 2040 ஆம் ஆண்டிற்குள் தடை செய்ய வேண்டும் என்றும் அதைதொடந்து 2050 ஆண்டிற்குள் படிம எண்ணெய் வகைகளான பெட்ரோல், டீசலை தடை செய்ய வேண்டும் என்றும் ஜெர்மன் திட்டமிட்டுள்ளது.

 

 • ஜெர்மனியை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் (1951ம் ஆண்டு 72வது) பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்துள்ளது.

 

 • அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘த்ரீ ஸ்கொயர் மார்கெட்’ என்ற தொழில்நுட்ப நிறுவனமானது பல்வேறு அலுவலக பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில், தனது ஊழியர்களின் உடலில் ரேடியோ அதிர்வெண் அடிப்படையில் இயங்கும் ‘சிப்’ ஒன்றை பொருத்த முடிவு செய்துள்ளது. அதற்கான விழா ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறுகிறது.

 

 • சனிக் கிரகத்தில் ஹெக்சாகன் வடிவிலான ரகசிய நுழைவு வாயில் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை ஏலியன்கள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

 • பூமிக்கு அடியில் மிக ஆழமாக(31மாடி) – மெட்ரோ இரயில் நிலையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

 

 • ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் இருந்து, இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பினை நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 • ஜப்பானில், வெளிநாட்டு சுவை கொண்ட கிட்கேட் சாக்லெட்டிற்கு ஏற்பட்டுள்ள தேவையால் 25 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக நெஸ்லே நிறுவனம் அங்கு தொழிற்சாலையை திறக்கவுள்ளது.

 

                                                                                                             விளையாட்டு செய்திகள்

 • உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100மீ பேக்ஸ்ட்சோக் பிரிவில் கனடா வீராங்கனை கைலீ மாஸோ உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

 

 • 10 அணிகள் பங்கேற்கும் 91-வது எம்.சி.சி-முருகப்பா தங்ககோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று(27.07.17) முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும்.

 

 • இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினர் 503 ரன்கள் குவித்தனர்.

 

 • பெண்களுக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி அணி திருச்சி வாரியர்சை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறை வெற்றி பெற்றது.

 

 • தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் (27.07.17) இன்று தொடங்குகிறது.

 

 • நியூஸிலாந்தின் டௌரங்கா நகரில் நடைபெற்ற உலக ஜுனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • தனியார் வங்கியான யெஸ் வங்கியின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 32 சதவீதம் உயர்ந்து ரூ.731 கோடியாகவும் மொத்த வருமானம் ரூ.5,785 கோடியாக உயர்ந்துள்ளது.

 

 • பொதுத்துறை நிறுவங்களான எம்எஸ்டிசி மற்றும் நீப்போ நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான நிதி ஆயோக் சில குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்ற தனியார் ஆலோசனை நிறவனங்களான யர்னஸ்ட் அண்ட்யங், மெக்கென்ஸி, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆகியவற்றின் சேவையைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

 

 • நிரந்தர கணக்கு எண்(பான்) வைத்துள்ள வரி செலுத்தாத நிறுவனங்களின் எண்ணிக்கை 6.83 லட்சமாக உள்ளது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

 

 • ஸ்நாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.95 கோடி டாலர் நிர்ணயம் செய்துள்ளது.

 

 • இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டைக்கு இதுவரை ரூ.9,055 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளதாக மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பி.பி சௌத்ரி தெரிவித்துள்ளார்.

 

 • தமிழகத்தில் மின்சார நுகர்வு குறித்து மாநில மின்சுமை பகுப்பு மையம்(எஸ்எல்டிசி) நடத்திய ஆய்வில் வடசென்னையில் தான் அதிகமாக மின்நுகர்வு செய்யப்பட்டதாகவும் இதுவரை 2 ஆயிரத்து 100 மொவாட் அளவு மின்சாரம் நுகரப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Current Affairs

 

 • The GST council recently constituted a selection committee to identify members & head of the National Anti – Profiteering Authority. The chairman of the committee is PK Sinha.

 

 • The country that extended martial law on restive  Mindanao Island until 31 December 2017 is  – Philippines

 

 • The country that will host the men’s World Boxing Championship in 2021 – India

 

 • The rank of India in the new global commitment to reducing Inequality index – 132

 

 • The high court that ruled made “Vande Mataram” compulsory in education institutes and offices of the state is Madras High Court

 

 • The book titles “India : India’s most powerful prime minister” has been written by Sagarika Ghose

 

 • Kylie Masse the Canadian women swimmer who won the 100m backstroke gold in a new world record time at the  Aquatics Championships in Budapest

 

 • Zimbabwe parliament has passed a bill giving its president the power to appoint the country’s top judges without consulting any institution.

 

 • Lucknow Metro India’s first metro to have its own FM radio station.

 

 • Srilankan cabinet recently revised the agreement for Hambantota port built by – China 

Call Now
Message us on Whatsapp