JULY26

Date:26 Jul, 2017

JULY26

                                                                                                                                                                                                   

                                     We Shine Daily News

                                                 தமிழ்

                                              ஜூலை 26

                                         தேசிய செய்திகள்

 

 

 • ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வின்போது அவர்கள் உடல் தகுதியையும் கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வின் போது அவர்கள் உடல் தகுதியையும் மத்திய அரசு கவனிக்கும் என்று மக்களவையில் உள்துறை இணையமைச்சர்  கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

 

 • பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள ரவீந்திரநாத்தாகூரின் படைப்புகள் எதுவும் நீக்கப்படமாட்டாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

 

 • தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவாக ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை(வியாழக்கிழமை) திறந்து வைக்கின்றார்.

 

 • சிறந்த விஞ்ஞானியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவருமான யஷ் பால்(90) உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை(24-07-17) காலமானர்.

 

 • புது டெல்லியில் செயல்படாத ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மீது மத்தியப் பணியாளர் நலத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 • தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய லோகோவுக்கு பதிலாக, புதிய சின்னத்தை வடிவமைக்கும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும், புதிய சின்னங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 13-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

 

 • நக்லஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் 2.753 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கூறியுள்ளார்.

 

 • சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கர்நாடக கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

 

 • கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

 

                                                                                                         பன்னாட்டு   செய்திகள்

 

 • அமெரிக்க குடியுரிமையின்றி, அங்கு தங்கி வேலை செய்பவர்களுக்கு ‘எச்1பி’ விசா, “பிரிமியம் பிராசசிங்” முறையில் வழங்கப்படுகிறது.

 

 • ‘ஆல்ஃபபெட்’ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஒ) சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ஃபபெட் நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமாகும்.

 

 • அமெரிக்கர்கள் வடகொரியாவுக்கு வருவதற்கு அமெரிக்க அரசு தடை செய்துள்ளதால் வடகொரியாவின் சுற்றுலா துறைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றும், இந்த தடைக் குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

 • கொரிய போர் 1953-ம் ஆண்டு ஜுலை 27-ம் தேதி முடிந்தது. இந்த வெற்றி தினத்தை முன்னிட்டு வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 • ஆசிய பசிபிக் பகுதியில் தனது இலக்குகளை அடைவதற்கும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தவும் பல்வேறு தந்திரமான உத்திகளை சீனா பயன்படுத்தி வருகிறது என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ தெரிவித்துள்ளது.

 

 • உலகின் தொலைத்தூரப் பகுதிகளில் கீரின்லாந்தும் ஒன்று. அங்குள்ள உறைப்பனியின் நிறம் கருப்பாக மாறிவருகிறது. கருப்பு நிற பனி அதிக அளவு சூரிய கதிர்களை உட்கொள்வதால் மிக வேகமாக கரையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து பிரிட்டன் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

 • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முகமுடியை அணிந்து கொண்டு இத்தாலியில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 1லட்சம் யூரோவைக் கொள்ளையடித்த இருவர் அந்நாட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

 

 • உலகின் மிகப் பரப்பரப்பான கப்பல் பாதையான இலங்கையில் புதிய துறைமுகம் அமைக்கும் சீனாவின் ஒப்பந்தத்தில் சிறிசேனா மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி சீனா இத்துறைமுகத்தை வர்த்தக பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தலாம் மேலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

                                                                                                             விளையாட்டு செய்திகள்

 • இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணியின் வீரர் ஷிகர் தவான் சதம் விளாசினார்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

 • 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி வருகிற நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.

 

 • பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2018 டெல்லியில் நடைபெறும்.

 

 • மகளிர் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கௌர் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங் உட்பட 55 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரருக்கும் ரூ.35 லட்சம் வரை வழங்கப்படவுள்ளது.

 

 • ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் 2021ம் ஆண்டில் நடைபெறும்.

 

 • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கணைகள் அனைவருக்கும் தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் இவர்களை கௌரவிக்கும் பொருட்டு பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் ரூ.1500 கோடி தொகையை செப்டம்பர் 7ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • வங்கி கடன் வழங்குவதை 10 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் ஜி.ராஜ்கிரண் ராய் தெரிவித்தார்.

 

 • காலாண்டு நிகர லாபம் 9 சதவீதம் உயர்ந்து ரூ.66.12 கோடியாக உள்ளது என லஷ்மி விலாஸ் வங்கி நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி தெரிவித்தார்.

 

 • கரூர் வைஸ்யா வங்கியின் விற்றுமுதல் ரூ.95,135 கோடியாக உயர்ந்துள்ளது என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் கே.வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

 

 • இந்திய இரு சக்கர வாகனத் துறையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 3.5 சதவீதம் அதிகரித்து ரூ.914.04 கோடியாக உள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 • கடந்த 1952ம் ஆண்டு ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர் காஷாபா ஜாதவ் வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது தற்போது இப்பதக்கம் ஏலத்துக்கு வந்துள்ளது.

 

 • 2 தனியார் நிறுவனத்தின் பால் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

Current Affairs

 

 • Billion Ables a Delhi based startup has launched this app to assist people with disabilities to find accessible place

 

 • India won maximum gold medals in the Tennis category at the 6th youth common wealth games

 

 • England has eon the maximum number of medals in the youth commonwealth games 2017 – England

 

 • Indian Oil corporation will operates India’s first Petroleum R&D facility for testing high-end BS-VI quality full emission

 

 • Raveesh Kumar appointed as spokesperson of the ministry of Extanal Affairs

 

 • Haryana to set up vegetable price Stability fund

 

 • Iran and Iraq has signed on accord to boost military co-operation recently

 

 • Dubai has been selected as the Local Data Hub for middle East, North Africa and South Asia region

 

 • Central Road fund Amendment Bill, 2017 introduced in Lok  Sabha , a bill providing for allocation of about RS 2000 Crore from CRF developing national water ways

 

 • Union home minister Rajnath Singh oh airs first meeting of Islands Development Agency (IDA)

 

 • Bolivia declared total independence from World Bank and IMF

 

 • West Bengal Cm Mamta Banarjee conferred this year’s “Mahanayak Samman 2017” to actress Sakuntala Barua.

 

 • Janalakshmi finance services appoints Ajay Kanwal as CEO

 

 • Reliance Defence launches first two naval patrol vessels ‘Shachi’ and ‘Shruti’ 

   

   

 

Call Now
Message us on Whatsapp