JULY25

Date:25 Jul, 2017

JULY25

                                                                                                                                                                                                   

                                     We Shine Daily News

                                                 தமிழ்

                                              ஜூலை 25

                                         தேசிய செய்திகள்

 

 

 

 • மும்பை சிறைகளில் நிலவும் நெரிசலை குறைக்க 7 ஆயிரம் விசாரணை கைதிகளை வெளியில் விட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியுள்ளார்.

 

 • பண மதிப்பு நீக்கத்தை ஒட்டி டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை “பீம் செயலி” இதுவரை 16 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என பணபரிமாற்ற வாரியம் தெரிவித்துள்ளது.

 

 • மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் மெழுகு சிலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உருவாக்கப்பட்டு ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது, தற்போது அச்சிலை அப்துல்கலாம் அவர்களின் குடும்பத்தாரின் விருப்பத்திற்கிணங்க இராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அருங்காட்சியக நிறுவனர் கூறியுள்ளார்.

 

 • கங்கையை சுத்தப்படுத்தம் பணியை செய்யும் “நவாமி கங்கே திட்டத்தை” விரைவு படுத்தும் நோக்கத்தில் புதிய சட்டம் தயாராகி இருப்பதாக அமைச்சர் உமாபாரதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

 • தலைநகர் டெல்லியில் டெங்கு, சிக்கன்குன்யாவைவிட மலேரியாவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளதாகவும் இந்நோயால் இதுவரை 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 • மத்திய அரசின் பெண் ஊழியர்கள் பணியிடத்தில் நேரக் கூடிய பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார் அளிக்க “ஷீ– பாக்ஸ்” வலைதளத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

 

 • அரபு நாடுகளுக்குப் வேலைத் தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்நாடுகளின் ஒருங்கிணைப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

 

 • தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம் என்ற பாடலைப் பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

                                                                                                         பன்னாட்டு   செய்திகள்

 

 • பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கனிமங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டுடர்டே தெரிவித்துள்ளார்.

 

 • பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சீன தூதரகத்தின் உதவியோடு பாகிஸ்தான் ஆசிரியர்களுக்கு சீன மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் சீன அரசாங்கத்தால் நடத்தபட்டு வருகிறது.

 

 • மியான்மரில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்தியிலுள்ள பௌத்த தேவாலயம் ஒன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

 

 • இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா அறிவுரை கூறி உள்ளதாக பாகிஸ்தானின் “தி நேஷன்” பத்திரிக்கை, செய்தி வெளியிட்டுள்ளது.

 

 • சீன மக்கள் “விடுதலை இராணுவ படையை” அசைக்கக்கூட முடியாது என இந்தியாவுக்கு நேரடியாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • துருக்கியில் அரசுக்கு எதிரான தினசரி நாளிதழில் பணியாற்றி வந்த 17 பத்திரிக்கையாளர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 • ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய மொசூல் நகரை ஈராக் இராணுவப்படையினர் கைப்பற்றியப்பின் அங்குள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்கள் போன்று வேஷமிட்டு அந்நகரை விட்டு தப்பி செல்ல முயற்சி செய்த போது ஈராக் இராணுவப் படையிடம் சிக்கி கொண்டனர்.

 

 • தென் சீனக் கடலின் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை சீனாவின் 2 போர் விமானங்கள் இடைமறித்ததால் பதற்றம் ஏற்பட்டு அமெரிக்க விமானம் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது.

 

 • இஸ்ரேல் அல்-அக்ஷா மசூதியில் பொருத்தப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர்களை அகற்றுமாறு நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக இஸ்ரேல் அரசு மசூதியின் மெட்டல் டிடெக்டர்களை அகற்றியுள்ளது.

 

                                                                                                             விளையாட்டு செய்திகள்

 • ஆசிய யூத் மற்றும் ஜுனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் கொன்சாம் ஊர்மிளா தேவி தங்கப் பதக்கம் வென்றார்.

 

 • காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டையில் இந்திய வீரர் சச்சின் சிவாச் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

 • இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளரான மலின்டா புஷ்பகுமாரா இடம் பெற்றுள்ளார்.

 

 • மாற்று திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று லண்டனில் நிறைவடைந்தது. இப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

 

 • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஹர்மான் பிரித் கவுருக்கு பஞ்சாப் காவல் துறையில் டிஎஸ்பி பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளுர் வீரன்சை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

 

 • அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாய் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

 

 • தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டிலும் அடுத்துவரும் நிதியாண்டிலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை முந்தும் என்று சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது

 

 • வோடாஃபோன் – ஐடியா நிறுவனத்தின் இணைப்பிற்கு தொழில் தாவாக்களை விசாரிக்கும் அமைப்பான காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவின் அனுமதி கிடைத்துள்ளது.

 

 • எண்ணெய் வினியோகம் செய்யும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு சொந்தமான 51 சதவீத பங்குகளையும் ஒ.என்.ஜி.சி.க்கு (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎப்சி வங்கியின் முதல் காலாண்டு லாபம் ரூ.3,893.84 கோடியாக உள்ளது என வங்கி கூறுகிறது.

 

 • ர்pலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் லாபம் முதல் காலாண்டில் 56 சதவீதம் அதிகரித்தது.

 

 • இந்திய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 10000 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ{ம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

 • அசோக் லேலண்ட்டு நிறுவனம் கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்திடமிருந்து (கேஎஸ்ஆர்டிசி) ரூ.650 கோடிக்கு ஆர்டரை பெற்றுள்ள செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது

 

 

Current Affairs

 

 • Mithali Raj named captain of ICC women’s world cup 2017 team

 

 • Union government launches mobile app “Aarambh” for road maintenance

 

 • The winner of 2017 ICC women’s world cup is England

 

 • The theme of 2017 Global conference on cyber space, which will be held in New Delhi Cyber 4 All : An Inclusive, Sustainable  Development safe and Secure cyber space

 

 • Person appointed as the Joint secretary in the Prime Minister’s office – Gopal Baglay

 

 • The Indian boxer who clinched gold in common wealth youth games being held in bahames is – Sachin Siwach

 

 • Banking Regulation (Amendment) Bill, 2017 introduced in Lok Sabha . The Bill authorizes the RBI to Direct the banking companies to resolve the problem of stressed assests

 

 • The online platform ‘She – box” (Sexual harassment Electronic Box) that will enable women employs of central government to file complaints  against sexual harassment at work place

 

 • Kerala host literacy fest host the 5th edition of South India Writers Ensemble(SIWE) at Chengannur“THEME: Tolerance”

 

 • India and Bangladesh signed a pact to  connect both the countries by water ways

 

 • World’s Ist floating wind farm starts to take shape off coast of Scotland

 

 • International Monetary fund keep’s India’s growth forecast at – 7.2% for 2017 – 2018

 

 • HS Prannoy Indian shuttler has won the US open Grand prix Gold badminton tournament 

   

Call Now
Message us on Whatsapp