JULY22

Date:22 Jul, 2017

JULY22

                                                                                                                                                                                                   

                                         We Shine Daily News

                                                      தமிழ்

                                                 ஜூலை 22

                                               தேசிய செய்திகள்

 • நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குறைந்தப்பட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை, மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் சுகாரத்துத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளர்.

 

 • பொது மக்களின் அந்தரங்க தகவல்கள், வாழ்வுரிமையின் அங்கம் ஆகியவை சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ள முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 

 • மூத்த குடிமக்களுகக்கான ஓய்வூதியத் திட்டம் – இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

 

 • இரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள், கரப்பான் மற்றும் எலிகள் சுற்றித்திரியும் சுகாதார சீர்கேடான இடத்தில் தயாரிக்கப்படுவதாகவும் தரகுறைவான இத்தகைய உணவுகள் மனிதர்கள் உண்ணுவதற்கு உகந்தல்ல என்று தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) குற்றஞ்சாட்டுகிறது.

 

 • நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தின் புதிய செயலாளராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன்,புகைப்படத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 • தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் 4 குடும்ப நலக் கோர்ட் – தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

                                                                                                            பன்னாட்டு   செய்திகள்

 

 • அண்டார்டிக்கா – பனிப்பாறை பனித்தட்டில் இருந்து விலகியது இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • அமெரிக்காவில் இருந்து கொரியா டூர்ஸ் மற்றும் யங் பயோனீர் டூர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் வடகொரியாவுக்கு பயணம் செய்ய அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

 

 • பாகிஸ்தான், அமெரிக்கா கூட்டு நடவடிக்கை நிதிக்காக அமெரிக்கா தரப்பில் ஆண்டுதோறும் நிதி வழங்கப்படுகிறது. அதன்படி 2016 ஆம் ஆண்டு கூட்டு நடவடிக்கை நிதிக்கு சுமார் ரூ.2300 கோடி நிதியை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது தற்போது அந்த நிதி வழங்குவதை நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

 

 • இலங்கையில் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்காக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனை ஐ.நா பாராட்டியுள்ளது.

 

 • சந்திரனில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் உள்ள தூசி மற்றும் சிறு பாறைகளை ஒரு பையில் போட்டு எடுத்து வந்தார். தற்போது அந்த தூசிப்பை 11 கோடியே 70 இலட்சத்திற்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.

 

 • யேமனில் காலாரா நோயின் தாக்கம் கடுமையாக உள்ளது. உலகளவில் இல்லாத வகையில் அங்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களில் குறைந்தது இரண்டாயிரம் பேர் காலராவால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது.

 

 • வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருவதால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது, இருப்பினும் 2016 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்தில் 3.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 • ஆமெரிக்காவின் எஃப்-35 விமானத்தை ஐரோப்பாவில் இயக்க கூட்டணி நாடுகள் முடிவு செய்துள்ளனர்.

 

                                                                                                                  விளையாட்டு செய்திகள்

 • 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி, திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.

 

 • இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணி 187 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

 

 • ஆசிய தடகள போட்டியில் 2 தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் தியாகராஜன் ரூ.50 ஆயிரம் பரிசளித்து நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

 

 • யுஎஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிட்டேன் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்களான காஷ்யப், சமீர் வர்மா , பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

 

 • உலக ஜுனியர் ஸ்குவாஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சமீந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட தூத்துக்குடி ஆல்பர்ட் டியூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. நேற்று தூத்துக்குடி நீதிமன்றம் இத்தடையை நீக்கி தீர்ப்பளித்தது.

 

 • உலக பாரா தடகளத்தில் இந்திய வீராங்கனை கரம் ஜோதி வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

 

                                                                                              பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த நிதி மேலாண்மைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

 

 • இந்தியன் வங்கியின் நிகரலாபம் நிகழ் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.372.41 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

 • ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.111.23 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் தங்கம் இறக்குமதி இரட்டிப்புக்கும் அதிகமாகி 11.25 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

 

 • ரூ.1500 டெபாசிட்டில் விலையில்லா 4ஜி செல்லிடைப்பேசிகளை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

 

 • பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட 6 தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருவாயைக் (2014-2015)ஆண்டுகளில் ரூ.61.064.5 கோடி அளவுக்கு குறைத்து காட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Current Affairs

 

 • Kamala Hasan has been appointed brand ambassador of pro kabadi league franchise “Tamil Thalaivas”

 

 • Google has launched “Hire” a recruiting app for Small and Medium Sized businesses

 

 • Telangana will have eco-friendly bridges over a canal cutting across the tiger corridor linking the Tadoba Andhari Tiger Reserve in chadrapura district

 

 • TR  Zeliang Sworn in as Nagaland chief minister

 

 • The UIDAI (Unique Indentification Authority of India) has launched a new mobile app called in Aadhaar app

 

 • Shela Siddhi Prohatsan Yojana started in 25000 MP schools In order to provide quality education

 

 • India’s Amit Saroha clinches silver in world Athletics championship

 

 • Indians with gold and bronze at first global robotics Olympied. 

   

   

   

Call Now
Message us on Whatsapp