JULY21

Date:21 Jul, 2017

JULY21

                                                                                                                                                                                                   

                                         We Shine Daily News

                                                      தமிழ்

                                                 ஜூலை 21

                                               தேசிய செய்திகள் 

 • நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணயின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் வருகிற 25ம் தேதி பதவியேற்கவுள்ளர்.

 

 • புதுடெல்லியில் ரயில்வே துறை சார்பாக வழங்கப்படும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல அவை அசுத்தமானவை என     சிஏஜி அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

 

 • சாலைகளால் அமைக்கப்பட்டிருக்கும் வேகத் தடைகளால் இந்தியாவில் தினமும் 9 பேர் உயிரிழந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் விரைவில் டிஜிட்டல் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • தனிமாநிலமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவரும் டார்ஜீலிங்கில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இணையச் சேவையை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என்று கோரக்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்)கட்சியினர் வலியுறுத்தினர்.

 

 • தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2000 ரூபாய்கள் நோட்டுகள் புழக்கம் குறைந்து, வங்கி மற்றும் ஏடிஎம்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் 200 ரூபாய்கள் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 • பஞ்சாப் மாநிலத்தில் ஆன்லைன் பேங்கிங் மூலம் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.70 லட்சத்தை திருடிய ஹேக்கர்கள் அவற்றை தங்கள் கணக்கிற்கு மாற்றி அமைத்த செய்தி அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 • முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் ராமநாதபுரம் நேஷனல் அகாடெமி பள்ளிகள் சார்பில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

                                                                                             பன்னாட்டு   செய்திகள்

 • உலகையே அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோய்க்கு 2016ம் ஆண்டு உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. அறிக்கை மூலம் தெரியவருகிறது.

 

 • பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தாமல் இருந்தால் அதற்கு பணம் தருவதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் தகவல் வெளியிட்டு உள்ளார்.

 

 • இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அந்த நாட்டுக்கு 3.77 லட்சம் டாலர் (சுமார் ரூ.24 கோடி) நிதியுதவி அளிக்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.

 

 • மாயமான மலேசியா விமானத்தை (எச்ஹெச் 370) தேடும் பணியின் போது கடலுக்குள் புதைந்து கிடக்கும் புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் எரிமலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் உயரமான முகடுகள் இருப்பது போன்ற வரைபடத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

 

 • பிரிட்டனில் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்பன் தோஷி தனது 21 வயதில் மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு இந்திய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • சௌதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் நேரடி விமானங்களின் உள்ளே லேப்டாப் எடுத்து செல்ல கூடாது என விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சௌதி அரேபியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

 

 • இந்து தேசியவாதத்தால் இந்தியா சீனா இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது என்று சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

 

 

                                                                                                         விளையாட்டு செய்திகள்

 • டெர்பியில் நடைப்பெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி உலகக் கோப்பை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

 

 • இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. பயிற்சி ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது.

 

 • சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்படுவதாகவும், இனி ‘மகாராஷ்ட்ரா ஓபன்’ என்ற பெயரிலும் அழைக்கப்படும் என  ஐ.எம்.ஜி அமைப்பு அறிவித்துள்ளது.

 

 • புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 • ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய (ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற) இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் இந்திய அணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

 • டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

 

 • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ரன்கள் குவித்து அசத்திய இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுரை இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ஷேவாக் “நான் பார்த்த சிறந்த ஆட்டம்” இதுதான் என்று பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நான்காவது சீசனில் விளையாடவுள்ள சென்னையின் எஃப்.சி அணி.  பிரேசிலைச் சேர்ந்த மில்பீல்டரான ரஃபேல் அகஸ்டோவுடன் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

                                                                                        பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.9,108 கோடி லாபம் ஈட்டியதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 • நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.4 சதவீதம் வளர்ச்சி காணும் என ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.

 

 • கோடக் மஹெந்திரா வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 23 சதவீதம் உயந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 1.2 சதவீதம் உயர்ந்து ரூ.2,076.7 கோடியாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • தனியார் துறை வங்கிகளில் முன்னணியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மூலம் தனி நபர் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம் என்ற புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

 

 • மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 51 புள்ளிகள் குறைந்து 31.904 புள்ளிகளாக உள்ளது.

 

 • 100 கோடி பேருக்கு 4ஜி ஜியோ போன் இலவசமாக வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

Current Affairs

 

 • Telangana government has launched a portal “Janahitha” grievance redressal system.

 

 • Telangana reduces ‘education burden’ cap school bag weight
 1. 1.5 kg class I to II
 2. 2 to 3 kg for class III to V
 3. 4 kg for class VI to VII
 4. 4.50 kg for class VIII & XI

 

 • India among 5 countries that faced most terror attack in 2016

 

 • India on track to grow at 7.4 percent in 2017 Asian development Bank report

 

 • Reserve Bank of India will shortly issue bank notes of denomination 20 in Mahatma Gandhi series 2005

 

 • ICRA has launched a new system for rating of infrastructure project in association with the India Infrastructure finance company Ltd

 

 • Ramnath Govind elected as India’s 14th president

 

 • Nayanthara appointed as Brand Ambassador for Tata Sky

Call Now
Message us on Whatsapp