JULY17

Date:17 Jul, 2017

JULY17

                        

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 17

                                                   தேசிய செய்திகள்

 

 • இந்தியாவின் 14 வது ஜனாதிபதி தேர்தல் ஓட்டுபதிவு (17-07-17) இன்று துவங்கியது.

 

 • பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத தெருக்களாக திகழும் மயிலாப்பூர்.

 

 • ஆப்டிகல்ஸ் கடைகளுக்கான விதி முறைகளை வரையறை செய்து அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

 

 • தில்லி உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிம்பன்ஸி ஒன்று தனது 56 வது பிறந்த நாளை விரைவில் கொண்டாடவுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகளில் மிகவும் வயதான விலங்கு என்பதால் இந்த சிம்பன்ஸியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

 • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் கோவை – இலங்கை தலைநகர் கொழும்பு இடையே வாரத்திங்கு நான்கு நாள் விமான சேவை நேற்று தொடங்கியது.

 

 • ஜுலை மாத இறுதிக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட உள்ளது. அது போல் புதிய ஆதார் அட்டை பெறுவதற்கும் அங்கு விண்ணப்பிக்கலரம் என அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

 

 • மேற்கு வங்க மாநிலம்  டார்ஜீலிங் மலைப்பகுதியில் வசிக்கும் கோரக்கா சமூகத்தினர் தங்களுக்கு தனிமாநிலம் தரக் கோரி 32 வது நாளாக ஓயாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். எங்கள் கோரிக்கை வெற்றி பெறும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று ஜிஜேஎம் கட்சித் தலைவர் விமல் குரூக் கூறியுள்ளார்

 

 • அடுத்தடுத்த மிகப் பெரிய வெற்றிகளை கண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ). இந்த ஆண்டு மேலும் 2 செயற்கை கோள்களை ஏவ ஆயத்தமாகி வருகிறது.

 

 • செயல்படாத 245 வருமான வரித்துறை கமிஷனர்களின் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

                                                                                        பன்னாட்டு   செய்திகள்

 

 • அமெரிக்காவில் ஏடிஎம் எந்திரத்தினுள் தவறுதலாக மாட்டிக் கொண்ட டெக்ஸாஸ் நபர் ஒருவர் பண விவரம் வழங்கும் தாளில் உதவி குறிப்பு எழுதி அனுப்பி வெளியே வந்த வினோதமான செய்தி அங்குள்ள மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 • ஈரானில் பிறந்த கணிதவியலாளர்  ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வென்ற முதல் பெண்மணி கணித மேதை மார்யம் மிர்ஸாகாணி அமெரிக்காவில் காலமானார்.

 

 • அதிக வட்டியில் சிறு வணிக கடன் காரணமாக புதைக்குழிலில் சிக்கி கொண்டு வாழும் இலங்கை தமிழர்கள் – கடன் பிரச்சணையால் சிறுநீரகம் விற்க மற்றும் தற்கொலை செய்ய துணிந்துள்ளனர்.

 

 • பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆசிய பகுதிகளில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இதனால் உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் சீனா, இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற பெரு நகரங்;கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

 • ஜெருசலேமில் இரு இஸ்ரேல் வீரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட புனிதத் தலத்தில் முஸ்லிம்கள் மீண்டும் தொழுகை நடத்தலாம் என்று இஸ்ரேல் அரசு அனுமதி அளித்து உரிமம் வழங்கியுள்ளது.

 

 • இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கனக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இதன் காரணமாக இலங்கை கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 • செனேகல் நாட்டின் தலைநகரான டாகரில் கால்பந்து போட்டி – ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ரசிகர்கள் வெளியே செல்ல முயற்சித்த போது அங்குள்ள சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 • அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஷ் நகரில் உள்ள கம்பிரியன் பார்க்கில் பூனைகளை கொன்ற வாலிபருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

 

                                                                                   விளையாட்டு  செய்திகள்

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்(தொடர்ந்து 8 முறை)

 

 • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முன்னிலையில் உள்ளது.

 

 • இந்த ஆண்டுக்கான பார்முலர 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த 10 சுற்றுகளின் முடிவில் ஹால்மில்டன் முதலிடத்தில் உள்ளார்.

 

 • உலக கோப்பை சரிவிலிருந்து மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறியுள்ளார்.

 

 • 5 வது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் பெங்களுரு புல்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர ரைடர் ரோஹித் குமாரும் துணை கேப்டனாக பின்கள வீரர் ரவீந்தர் பாஹலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 • விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிசாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி முதல் ரூ.7.5 கோடி வரை சம்பளம் வழங்கப்படலாம்.

 

                                                                          பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • இலங்கையில் தொடர் வறட்சி காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சியையடுத்து ஆசிய நாடுகளிலிருந்து அவசரமாக அரிசியை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

 

 • பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

 • பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

 • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் வர்த்தகர்கள் ஜுலை 30ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • இரு சக்கர வாகன விற்பனையில் டிவிஎஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

 • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இண்டர்நெட் செயலிகளின் பங்களிப்பு ரூ.14 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என தொலை தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹொ தெரிவித்துள்ளார்.

 

 • ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டுள்ளதால் பின்னலாடைத் தொழில்த்துறை தடுமாறிய நிலையில் உள்ளது.

 

 • மூலப்பொருளின் கடுமையான விலையேற்றம் மற்றும் ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் அடியோடு நசியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

 • வங்கி அட்டை வாயிலான பணப் பரிமாற்றகள் 7 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.

 

 • ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் இதுவரை இல்லாத அளவு ரூ.64564 கோடி உயர்ந்துள்ளது.

 

Call Now