JULY15

Date:15 Jul, 2017

JULY15

                                             We Shine Daily News

                                                                       தமிழ்

                                                                  ஜூலை 15

                                                             தேசிய செய்திகள்

 •  மிசோரம் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக மழை நீர் சேகரிப்புத் தொட்டி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

 • பருவ மழைக் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் காஸிரங்கா தேசிய வன உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இங்குள்ள வன விலங்குகள் வெள்ளத்தில் போராடி வருகின்றன என தகவல்கள் வெளியாகின.

 

 • இரயில்வே சேவைக்களுக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு, இரயிலில் பயணிக்கும் போதே உணவு வகைகளைப் பெறுவது மற்றும் துப்புரவு பணிகளுக்கான ஒருங்கிணைந்த புதிய செயலியை “ரயில் சாரதி” என்ற (ஆப்)இரயில்வேத் துறை அமைச்சர் நேற்று தில்லியில் தொடங்கி தொடங்கிவைத்தார்.

 

 • சூரிய மின்சக்தியுடன் கூடிய இரயில் சேவையை இரயில்வேத்துறையினர்  தில்லியில் அறிமுகம்   செய்தனர்.

 

 • சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் – 2017(ஜிஎஸ்டி) குறித்த டிப்ளமோ படிப்பு வணிகவியல் துறையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

 • உத்திரப் பிரதேச மாநில அரசின் 4 விவசாயப் பல்கலைக்கழகங்களில் 43 சதவீதம் மாணவர் சேர்க்கை நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி கூறியுள்ளார்.

 

 • தமிழக்கத்தில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் புகழ் பெற்ற சங்ககால பெண்புலவரான ஒளவையாரின் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார்.

 

பன்னாட்டு  செய்திகள்

 

 • ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எண்ணெய் கிணறு அமைப்பதால் அங்குள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் இன்னும் அதிகமான ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவின் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர்  கூறியுள்ளனர்.

 

 • உலக அளவில் அதிக முகநூல் பயன்பட்டாளர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஏறத்தாழ 24.1 கோடி பேர் இந்தியாவில் முகநூலைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு  டிரம்ப்  ஈரான் ,லிபியா சோமாலியா ,சூடான், சிரியா  ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.

 

 • காஷ்மீர் தொடர்பாக நிலவும் பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

 • அமெரிக்காவுக்குள் மெக்ஸிக்கோ அகதிகள் வருவதை தடுக்க சூரிய மின்சக்தி சுவர் அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 • வடகொரியா மீது ஐ.நா சபை மேலும் தடைகளை கொண்டு வந்தால் அவற்றை எதிர் நடவடிக்கைகள் மூலம் சந்திப்போம் என்று அந்நாடு அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

 • சிங்கப்பூரில் 15 கிராமங்களுக்கு அதிகமாக ‘டயாமார்பின்’ போதைப்பொருளை கடத்திய தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்ற வாலிபர் அந்நாட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார் இந்நிலையில் நேற்று சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் அவர் தூக்கில் போடப்பட்டார்.  மரண தண்டனை விதிக்க அந்த நாட்டு சட்டம் வழி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  விளையாட்டு செய்திகள்

 • தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2- வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டி காக் மற்றும் அம்லா அரை சதம் எடுத்துள்ளனர்.

 

 • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஏர்வின் சதத்தால் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்துள்ளனர். கிரெய்க் இர்வின் 151 ரன்கள் எடுத்துள்ளார்.

 

 • பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றனர்.

 

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் குரோஷியாவின் மரின் சிலிக் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் சாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளர்.

 

 • தமிழ்நாடு கைப்பந்து சங்கம் மற்றும் சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி கைப்பந்து போட்டி வருகிற ஆகஸ்ட் 17ந் தேதி முதல் 20ம் தேதி வரை சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் எல்லா பள்ளி அணிகளும் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 • கனடா ஓபன் கிராண்ட் பாட்மிட்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் தோல்வியடைந்தார். அதே வேளையில் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனாக இந்தியாவின் மனு அட்ரி சுமித் ரெட்டி கால் இறுதிக்கு முன்னேறினர்.

 

  பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • ஹட்கோ கோல் இந்தியா ஹிந்துஸ்தான் காப்பர் போன்ற ஆறு நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 • பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்தனர். இதில் 5.56 லட்சம் நபர்கள் டெபாசிட் செய்த தொகைக்கும் அவர்கள் வருமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதற்கான தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

 • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 1.4 சதவீதம் உயர்ந்து ரூ.3843 கோடியாக உயர்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி 75 சதவீதம் அளவுக்குக் குறைவான கட்டணம் செலுத்தினால் போதும் என்று எஸ்பிஐ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

 • பங்கு சந்தையில் திடீர் சரிவு. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 16 புள்ளிகளை இழந்து 32020 புள்ளிகள் உள்ளது.

 

 • நாட்டின் பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு சென்ற ஜுன் மாதத்தில் 0.90 சதவீதமாக சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ ரூ.66 க்கும் சின்ன வெங்காயம் ரூ.45க்கும் விற்பனை செய்யப்படுவதால் அங்கு பொது மக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

Current Affairs

 • Mexican city named world’s best city in the world’s top 15 cities list compiled by famous Magazine “Travel + Leisure”.

 

 • Indonesian renaming part of South China Sea as North Matuna Sea.

 

 • Bilar Dar – 18 year old rag picker has been appointed trend ambassador of Srinagar Municipal Corporation.

 

 • New unique species of hermit crab called paragiopagurus atkinsonae.

 

 • Harinder Pal Sandhu wins Victorian open Squash title.

 

 • Asian champion Govindan Lakshmanan has won a gold medal in men’s 500m race of the National Inter – state Athletics

 

 • Iranian born mathematician Maryam Mirzakhani dies.

 

 • Haryana Govt. to set up ornamental fish hatchery in Thajjar.

 

 • MOU was singed for promoting regions air connectivity in Bihar.

 

 • Eighth meeting of SAARC Minister of law and order held in Colombo.

 

 

 

 

 

 

Call Now
Message us on Whatsapp