JULY14

Date:14 Jul, 2017

JULY14

      We Shine Daily News

தமிழ்

 ஜூலை 14

 தேசிய செய்திகள்

 

 • காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

 

 • நாடு முழுவதும் அரசுக்கு எதிராக 135060 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 369 வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் என்று மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

 • ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம்.

 

 • பிரதமர் நரேந்திர மோடியை இன்னொரு மகாத்மா காந்தியாக பார்க்கிறேன் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

 

 • அஞ்சல் துறையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளை கவரும் விதமாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவம் பதிக்கப்பட்ட லேபிள் வெளியிடப்பட்டுள்ளது.

 

 • 20 மில்லியன் அதிகமான சூரிய ஒளி போன்ற பெரிய விண்மீன் கூட்டத்தை  இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர் . தற்போது அவ்விண்மீன் கூட்டத்திற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர்.

 

 • கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் என்று பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.

 

 • பெண்களுக்கான மருத்துவ அட்டைகள் : ஆதார் அட்டையுடன் இணைந்த மருத்துவ அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

     பன்னாட்டு      செய்திகள்

 

 • சீனாவை இலக்காக இந்தியா தனது அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகிறது என அமெரிக்க நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

 • சூரியனின் மேற்பரப்பில் பெரிய கருந்துளைகள் தோன்றுகின்றன.

 

 • உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 39 வது இடத்தை பிடித்துள்ளது.

 

 • சீனாவின் மனித உரிமைப் போராளி ‘லியு-ஷியாவ்போ’ – புற்றுநோயால் மரணம்.

 

 • சவூதியில் பெண்களுக்கு எதிரான கட்டுபாட்டுகள் அதிகமாக நிகழ்கின்றன. அரேபியப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது தற்போது தான் அறிமுகம் செய்யப்படுகிறது. அதுவும் ஷரியா மதக்கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

 • பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ‘செயற்கை நுண்ணறிவு’ முறையில் செயல்படும் புதிய ‘ஆப்’ (சீயிங் ஏஐ) மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்வுள்ளது.

 

 • இத்தாலிக்கு அகதிகள் அதிக அளவில் வருவதால் பெரும் நெருக்கடி ஏற்படுவதாகவும் அகதிகளை ஏற்கும் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனி தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்க அதிபர் டெனொல்ட் டிரம்ப்பின் தீவிர ரசிகர் ஒருவர் வங்கதேசத்தில் தான் ஆரம்பித்த புதிய உணவகத்திற்கு டிரம்ப்பின் பெயரை வைத்துள்ளார். இச்செய்தி அந்நாட்டு மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    

விளையாட்டு      செய்திகள்

 • 2015 அம் ஆண்டு எழுந்த சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை இன்றுடன் நிறைவடைகிறது.

 

 • சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று மாநில கைப்பந்து போட்டி தொடங்குகிறது. இப்போட்டி வருகிற 16ந் தேதி வரைக்கும் நடைபெறும்.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணை நியமிப்பதற்காக தீவிர முயற்சி காட்டி வருகிறார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

 

 • மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாதித்துக் காட்டிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாவார்.

 

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

 

 • இலங்கை ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொழுப்புவில் இன்று தொடங்குகிறது.

 

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய செர்பியாவின் ஜோகோவிச் நீண்ட காலம் ஓய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

      பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • சர்வதேச சந்தையில் டிசிஸ் நிறுவனம் வளர்ச்சி கண்டு வருவதாக அந்நிறுவன இயக்குனர் ராஜேஷ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

 

 • மும்பை பங்கு சந்தையில் நடைப்பெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32000 புள்ளிகளை கடந்து புதிய சாதனைப் படைத்தது.

 

 • நாட்டின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் சரிந்திருக்கிறது.

 

 • கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

 

 • ஜிஎஸ்டி வரி விதிப்பை காரணம் காட்டி கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு ரூ.60 கூடுதல் கட்டணம் பொதுமக்களிடையே வசூலிக்கப்பட்டது.

 

 • வகுப்பு வாரிய நிர்வாக மானியம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

 

 • சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

        Current Affairs

 

 • “National Green Tribunal” (NGT) declares the area of 100 meters from the edge of the ‘river Ganga’ as a ‘no development zone’ for Ganga rejuvenation.

 

 • “J.P.Nadda” (Union Minister of Health and Family Welfare) launched the ‘National Strategic Plan for Malaria Elimination’ (2017 – 22) on July 12, 2017 in New Delhi.

 

 • “India’s Ist high speed rail training Centre” is set at “Gandhinagar, Gujarat”. India’s Ist bullet train is proposed to come up in 2023.

 

 • Maharashtra has become the Ist State in India to have law against social boycott.

 

 • India’s Ist “Technology & Innovation Support Center” (TISC) is to set up in “Punjab”.

 

 • S successfully tested “Intermediate range ballistic missile” (IRBM) target with “Terminal High Altitude Area Defense” (THAAD) on 11th July , 2017

 

 • India to host 8th  edition of Theatre Olympics from Feb, 2018 to Apr 2018.

  

Call Now
Message us on Whatsapp