JULY12

Date:12 Jul, 2017

JULY12

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 12

                                              தேசிய செய்திகள்

 

 

 • மத்திய மாநில அரசுகள் சமூக நலத்திட்டங்களை பெறுவதற்க்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கியுள்ளது. ஆதார் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.

 

 • காற்றாடிகளை பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க தேசிய பசுமை தீர்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 • டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு ஏர்ஏஷியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.நடுவானில் விமானம் செல்லும் போது விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றார். அதிஷ்டவசமாக சில காயகளுடன் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

 

 • வருங்காலத்தில் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய்பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

 

 • சண்டீகரில் மதுவகைகளை விற்பனை செய்வதை அனுமதிக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 • உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தின் தென்கரை சாலைக்கு தமிழ் கேசந்த் திருவள்ளுவர் மார்க் (தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைப்பெற்றது.

 

 • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள எலும்பு வங்கிக்கு இரண்டரை ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்போது தான் ஒரு பெண்ணின் எலும்புகளும் தோலும் தானமாக கிடைத்துள்ளது என்று அம்மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன

 

                                                                                     பன்னாட்டு செய்திகள்

 

 • அமெரிக்காவும் கத்தாரும் தீவிரவாதத்தை எதிர்க்க உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளன. அண்டை நாடுகளின் தீவிரவாதத்தை தடுக்கவே இத்தகைய உடன்படிக்கை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனும் கத்தாரின் அயலுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகம்மது அல் தானியும் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

 

 • இந்திய பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை ஆகிய திட்டங்களை சீனாவின் அரசு ஊடகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

 

 • உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவான தவோலாரா ஆகும். இதன் பரப்பளவு ஐந்து சதுர கிலோ மீட்டர் தான் . இங்குள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். சாதாரண கால்சட்டை மற்றும் ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்து வரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது.

 

 • 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • லண்டனில் உள்ள ஸதபி சர்வதேச ஏல மையத்தில் பென்சிலால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய ஓவியம் ரூ.27 இலட்சத்திற்கு விற்பனையானது.

 

 • ஜுலை 11 – உலக மக்கள் தொகை தினம் . உலக அளவில் மக்கள் தொகை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக உருவாக்கப்பட்டது.

 

 • இந்தியா சீனா இடையே தற்போது எழுந்துள்ள எல்லைப் பிரச்சனையை இரு நாடுகளும் திறம்பட கையாளுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

                                                                                 விளையாட்டு செய்திகள்

 

 • பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் – இன்றைய ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

 

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு முகுருஜா வீனஸ் வில்லியம்ஸ் முன்னேறியுள்ளனர்.

 

 • 600 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சூட்டிங் ரேஞ்சில் நாளை துவங்குகிறது.

 

 • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை – பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட்கோலி முதலிடத்தையும் தோனி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அணியின் முன்னாள் இயக்குனரான ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.அதே வேளையில் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜாகீர்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • மகளிர் உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21 ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணி எடுத்துள்ளனார் .

 

 • காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு மின்வாரியத்தில் அரசுப்பணி வழங்கப்பட்டது.

 

                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • வருமான வரித்துறையினர் வரி செலுத்துவோரின் வசத்திக்காக ஆயகர் சேது எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.வரி தொடர்பான சந்தேகங்களுக்கு இச்செயலி மூலம் விடை கிடைக்கும். இதன் மூலம் நிரந்தர கணக்கு எண் மற்றும் ஆதார் அடையாள எண் இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கியில் லாபம் முதல் காலாண்டில் 26 சதவீதம் உயர்வு கண்டுள்ளது என அவ்வங்கி அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

 

 • எஸ்பிஐ லைஃப் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு பாரத் ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மத்திய நிர்வாகக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • கேரளத்தில் தலையிடத்தைக் கொண்டு இயங்கி வரும் சௌத் இந்தியன் வங்கி முதல் காலாண்டில் ரூ.101.47 கோடி ஈட்டியது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்

 

 • மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செஸ் குறியீட்டு எண் 31 புள்ளிகள் உயர்ந்து 31747 புள்ளிகளாக உள்ளது. பஜாஜ் ஆட்டோ டாடா மோட்டார்ஸ் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் 2.44சதவீதம் 2.28 சதவீதம் 1.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

 • நடப்பு நிதிஆண்டின் முதலாம் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை அந்நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியிட்டு உள்ளன. இந்தியப் பங்கு சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது சாதனை ஏற்றத்துடன் முடிவடைந்தன.

  Current Affairs

  • Sandeep chakravorty has been appointed as the Indian consulate in Newyork.

   

  • Debi Prasad Dash appointed as director – general of the directorate of Revenue Intelligence.

   

  • Kerala has proposed to open stray Dogs Zoos to keep them off the street.

   

  • The renowned cartoonist Magesh Tendulkar passed away.

   

  • Karnataka  state government has constituted a panel to design state flag

   

  • Six caves in South Western Germany’s Swabia Jura region were added to the world heritage list

   

  • Ravi Shastri is new coach of Indian cricket team.

   

  • Afghanistan batsman Shafiqullah Shafaq scores double century in T20 game.

   

  • Maharastra government has launched the “ Antara ” program on account of World Population day which involves giving women the Medroxy Progesterone Acetate(MPA) injection for free of cost.

   

  • Odisha to set up international standard sport city at Bhubaneswar.

   

  • CM  Arvind Kejrival launches e – RTI, Delhi becomes 2ndstate to accept online.

   

  • Union Finance Minister, Arun  Jaitly was the chief gust on the 36thfoundation day of National Bank for agriculture and rural development

   

   

Call Now
Message us on Whatsapp