JULY13

Date:13 Jul, 2017

JULY13

                                          We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 13

                                                    தேசிய செய்திகள்

 

 • செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தொடர் ந்து நடைபெற்று வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

 

 • நாட்டை பசுமையாக்கும் பணியில் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் ‘ஒரு மாணவருக்கு ஒரு மரம்’ என்ற திட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது.

 

 • முன்னாள் குடியரசுத் தலைவரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பெயரிலான அருட்காட்சியகம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று திறக்கப்படுகிறது.

 

 • பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • ஆகஸ்ட் 15ந் தேதிக்குள் அனைத்து வர்த்தகர்களும் ஜி.எஸ்.டி யின் கீழ் பதிவு செய்வதை உறுதிப்படுத்துங்கள் என்று மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

 

 • மின் கட்டணம் செலுத்துவதற்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் கூகுள் பிளேஸ்டோரில் சென்று ‘பஅசஎஉஈஇஞ அடட’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தமிழக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

 

 • காவிரி நதி நீர்ப் பங்கீடு தொர்பான வழக்கை நாங்களே விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 • தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஒழுங்குப்படுத்த சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு 4 வார அவகாசத்தை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

                                                                                      பன்னாட்டு      செய்திகள்

 

 • உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் காவிரி பிரச்சனையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த உதவி செய்ய தயாராக இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

 

 • வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்கு புதிய நிபந்தனை ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். புதிய நிபந்தனை என்னவெனில் அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலம் வரைக்கும் தங்கள் படிப்பிற்கான பதிவை ஆண்டுதோறும் மறு பதிவு செய்ய வேண்டும் என்பதாகும்.

 

 • அண்டார்ட்டிக்காவில் சென்னையை விட 13மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது. இதனால் கடல் மட்டம் உயரும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

 

 • பாகிஸ்தான் பிரதமர் ஆகிறார் நவாஸ் சதோதரர்.

 

 • அமெரிக்க அரசியல் சட்ட விதிமுறைகள் சீர்திருத்தத்துறை தலைவராக இந்திய வம்சாவழி வழக்கறிஞர் நியோமி ராவ் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க சென்ட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • ஜெர்மனியில் வசிக்கும் 72 வயது இர்மெலா மென்சா – வெறுப்புக்களை அழிக்கும் தேவதை என அழைக்கப்படுகிறார்.வித்தியாசமான முறைகளில் தெருக்களைச் சுத்தம் செய்துவருகிறார்.

 

 • பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீதான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

 • இலங்கையில் பாலித்தினுக்குத் தடை வருகிறது.

 

 

                                                                                விளையாட்டு      செய்திகள்

 • மகளிர் ஹாக்கி உலக லீக் அரை இறுதி தொடரில் இந்திய அணி சிலி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

 

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 23 வருடங்களுக்கு பிறகு மிகவும் வயதான வீராங்கனையான அமெரிக்காவின் வீன்ஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

 

 • ஸ்பெயினில் நடைப்பெற்ற சர்வதேச செஸ் போட்டியில் ஈரோடு மாணவர் ப.இனியன் மூன்றாமிடம் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கான முதல் தகுதியைப் பெற்றுள்ளார்.

 

 • கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அல்பெர்டாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் முதலாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் காஷ்யப் பிரனாய் ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

 • சர்வதேச மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்று உலக சாதனைப் படைத்துள்ளார் இந்திய அணியின் மிதலிராஜ்.

 

 • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்ததை தொடர்ந்து இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தினேஷ் சன்டிமாலும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான கேப்டனாக உபுல் தரங்காவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

 

 • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

 

 

                                               பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்துள்ளது . இந்திய ரூபாய் படி ஒரு டாலரின் மதிப்பு 64.54 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

 • காய்கறிகள் பருப்பு வகைகள் பால் பொருள்களின் விலை குறைந்ததால் சில்லறை பணவிறக்கம் 1.54 சதவீதமாக குறைந்துள்ளது.

 

 • பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்கிற வேதிப்பொருளால் விநாயகர் சிலைகள் தயாரிக்க பெங்களுருவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரிக்கும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 32000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்ஃடி 9879 புள்ளிகள் உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது.

 

 • ரிலையன்ஸ் ஜியோ புதிய அறிவிப்பை அறிவித்ததை தொடர்ந்து ரிலையனக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 9 ஆண்டு உச்சத்தில் உள்ளது.

 

 • வட மாநிலங்களில் கன மழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதி குறைந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.100 க்கு விற்கப்படுகிறது. பண்னை பசுமை கடைகளில் தக்காளி ரூ.50 க்கு விற்கப்படுகிறது.

 

 • நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ –  ஐஎம்பிஎஸ் என்கிற உடனடி பண பரிமாற்றத்துக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இதன்படி ரூ.1000 வரையிலான பரிமாற்றத்திற்கு ஐஎம்பிஎஸ் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Current Affairs

 • Subash Chandra Garg a senior bureaucrat recently took charge as the secretary of the department of economic affairs.

 

 • West Bengal government that signed MOU with union Ministry of Health to set up center of excellence in Transfusion Medicine.

 

 • Danfoss India was conferred with the Golden Peacock Environment Management award.

 

 • Indian Railways Organization for Alternate Fuel (IROAF) organization was awarded the converted National Level Golden Peacock award of the year 2017 for ECO – Innovation.

 

 • Zaheer Khan appointed as the bowling coach for Indian cricket team.

 

 • Rahul Dravid appointed as the battling consultant for specific overseas tours of the Indian criket team

 

 • Paris and Los Angeles will be hosting the 2024 and 2028 Olympic Games.

 

 • Mithali Raj Shatters record; becomes first player to score 6000 runs in women’s ODI cricket.

 

 • Rajesthan becomes first to fix minimum education qualification for co – operative body poll

 

 • Gopal Krishna Gandhi named as opposition candidate for vice presidential election.

 

 • Meghalaya CM launched the flagship programme titled “Livelihood Invention and Facilitation of Entrepreneurship” at Songsak in East Garo Hills.

 

 • Yes Bank launches “YES GST” program to assists Micro Small and Medium Enterprises.

 

 • Astrononer discover smallest star known as EBLM J0555 – 57Ab is almost 600 light years away from earth.

 

 • July – 12 celebrated as Malala Day in honour of Nobel Peace Prize and UN activist Malala Yousafzai

 

Call Now
Message us on Whatsapp