JULY11

Date:11 Jul, 2017

JULY11

                                          We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 11

                                                        தேசிய செய்திகள்

  

 • கீழ்கோர்ட்டு நீதிபதிகள் நியமிப்பதில் புதிய நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள யோசனை குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.

 

 • சட்டப்பேரவை விவகாரத்தில் அரசியல் சாசனப்படி நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி) மாணவர் சேர்க்கைக்கான நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இடைக்கால தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் அமர்சாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து ஜம்முவில் செல்போன் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

 

 • அரசியல் மோதல்கள் அதிகம் இருந்த கேரளா காவல் நிலையம் இன்று இசை நூலக வசதிகள் மரக்கன்று வழங்குவது என்று புதுமை படைத்து வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் காவல் நிலையத்தை மக்களுக்கு உகந்த இடமாக மாற்ற முடிவெடுத்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 • வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ அமைப்புகளில் (என்ஜிஓ) 18523 அமைப்புகள் கடந்த ஆண்டுகளாக வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாததை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது. நாட்டில் எப்சிஆர் சட்டத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தன்னார்வ அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் எப்சிஆர் இணைய தளத்தில் ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் என உள்த்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 • சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியிலிருந்து சீன படைகள் வெளியேறாவிட்டால் டோகாலா பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருக்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது.

 

                                                                                                 பன்னாட்டு செய்திகள்

 

 

 • வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கத்தார் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக தம்மை தனிமைப்படுத்தியமைக்கு எதிராக வளைகுடாவின் நான்கு நாடுகளிலும் இழப்பீடு கோரவுள்ளதாக கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

 • மொசூலில் ஈராக்கிய அரசு படைக்கு எதிராக தோல்வியை தழுவிவரும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தப்பிசெல்வதற்காக அங்குள்ள டைகரிஸ் நதியில் விழுந்தனர்  இராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் போய் நதியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவதாக தகவல்கள் வெளியாகின.

 

 • ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருநாட்டு விவகாரங்கள் குறித்தும் எவ்வித அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்று சீனா விளக்கமளித்து உள்ளது.

 

 • அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கேசி -130 ரக கற்படை விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்களில் 16 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 • மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பல அணு உலைகளை மூட பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுசூச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘மலபார் கூட்டு கப்பல் போர் பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன. சீனாவுடான எல்லைப்பிரச்சனைக்கும் மலபார் கூட்டுப்பிற்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இந்திய அமெரிக்க மற்றும் ஜப்பான் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 • பெண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லாத ஜப்பானின் வினோத தீவான ‘ஒகினோஷிமாவை’ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரமளித்து யுனோஸ்கோ அறிவிப்பு வெளியிட்டது.

 

 • இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீத் கூறியுள்ளார்.

 

                                                                                          விளையாட்டு செய்திகள்

 

 

 • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி ‘வாய்ப்புக்களை தவறவிட்டால் வெற்றி பெற முடியாது’ விராட்கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேற்று றேர்காணல் நடைப்பெற்றது.புதிய பயிற்ச்சியாளர் அறிவிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 • இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாவே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் கைப்பற்றியது.

 

 • ஆப்கானிஸ்தானில் உள்ளுர் டி20 போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்து ஆப்கான் வீரர் சாதனை படைத்துள்ளார்.

 

 • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீசந்திர ஜடேஜா 898 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும் 865 புள்ளிகள் பெற்று அஸ்வின் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அது போலவே ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா இரண்டாம் இடத்திலும் அஸ்வின் மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தையும் 20 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியா முதன்துறையாக பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • லார்ட்ஸ் டெஸ்ட் போடடியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்ரவுண்ட்க்கு முன்னேற்றம் பெற்றுள்ளார்.

 

                                                                                   பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • பரஸ்பர நிதி சார்ந்த பல்வேறு திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் நிதி திரட்டி அதனை பங்குகள் நிதி சந்தைகள் கடன்பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றன. இந்நிலையில் பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.16592 கோடி வெளியேறியுள்ளது என அவ்வமைப்பின் கூட்டமைபு தெரிவித்துள்ளது.

 

 • மும்பை பங்கு சந்தையில் வாரத்தின் முதல் நாள் நடைப்பெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 355 புள்ளிகள் அதிகரித்து வரலாற்றில் முதன்முறையாகப் புதிய உச்சம் தொட்டது.

 

 • இந்தியாவில் உணவுப் பொருள்களின் சில்லறை விற்பனைத் துறையில் அமேஸானின் ரூ.3250 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

 • உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற ஜுன் மாதத்தில் 11.31 சதவீதம் சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்நியாவின் உள்ளுர் விமான சேவையில் இனி அசைவ உணவு வழங்கப்படமாட்டாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • நடுத்தர கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சிண்டிகேட் வங்கி தெரிவித்துள்ளது.

 

Current Affairs

 • July 11 observed as World Population Day

 

 • Theme: Family Planning – “Empowering people developing nations “

 

 • Indian origin personality honoured  with “ Order of Australia ” for community work in Australia – Guruswamy Jayraman

 

 • City that hosted the first edition of wings 2017 – Sab Uden, Sab Juden to expand regional connectivity – New Delhi

 

 • The city in which the first Gharib Nawaz skill development center was recently inaugurated is – Hyderabad.

 

 • Former Indian ambassador to the US – Naresh Chandra passes away.

 

 • Cambodia’s Sambor Prei Kuk temple zone gets UNESCO world heritage status.

 

 • 14 years old amateur Thitikul has become the youngest known winners of a professional golf tour event at the ladies European Thailand championship.

 

 • A three day Babasaheb R. Ambedkar International conference on social justice will be held in Bangalore

 

 • India tops Asian athletics championship 29 medals including 12 gold

 

 • Valtteri Bottas won the 2017 Austrian Grand Prix

 

 • Iraq recently declared liberation to Mosul after three years of ISIL control.

Call Now
Message us on Whatsapp