JULY05

Date:05 Jul, 2017

JULY05

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 05

                                                                                                      தேசிய செய்திகள் :

 

 • நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.

 

 • இந்த வருடம் இறுதிக்குள் புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

 • நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(64) மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பதவியேர்க்கவுள்ளார்.

 

 • நாடு முழுவதும் 18760 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

 

 • சுதந்திர தினத்தை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதற்கு முந்தைய நாளே (ஆக.14) கொண்டாடுவதைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆகஸ்ட் 14 ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக இச்செய்தி தொகுப்பு அமைந்துள்ளது.

 

 • மாவட்ட அளவில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) முறைப்படி அமல்படுத்துவதை கண்காணிக்க 200க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 • தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏதேனும் போலி காரணத்தைத் தெரிவித்து பொது மக்களுக்கு ஆதார் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தால் அது ஊழல் நடவடிக்கையாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதார் சேமை மையங்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                                                                          பன்னாட்டு செய்திகள் :

 

 • இலங்கை வடக்கு பகுதியில் குடியிருந்த தமிழர்களிடமிருந்து ஆக்கிரமித்த 187 தமிழர் குடும்பங்களின் 54 ஏக்கர் நிலத்தையும் அதன் உரிமையாளரிடம் நேற்று இலங்கை இராணுவம் ஒப்படைத்தது.

 

 • வட கொரியா மற்றும் அமெரிக்கா தத்தமது இராணுவ ஒத்திகை ஏவுகனை சோதனை அணு ஆயுத பரிசோதனை ஆகியவற்றை நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனா மற்றும் ரஷ்ய அரசு வலியுறுத்துகின்றது.

 

 • இலங்கை பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்திய ரத்னம் அவர்களை இலங்கை அரசு நியமனம் செய்துள்ளது.

 

 • வியட்நாம் தலைநகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதத்தில் மோட்டார் சைக்கிள் உபயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடை 2030 ம் ஆண்டுக்குள் முழுவதுமாக நிறைவடையும் என்று ஹனோய் மகாண சட்டமன்றம் தெரிவித்துள்ளது.

 

 • சிக்கிம் மாநில எல்லை பிரச்சனையில் சீனாவின் கருத்துக்களை இந்தியா ஏற்காவிட்டால் அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சீன பாதுகாப்பு துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • உகாண்டாவில் அரசு பணியாளர்கள் கன்னியமான உடையணிந்து வர வேண்டும். பெண்கள் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கும் விதமாகவும் ஆண்கள் தலை முடியை ஒட்டவெட்டி டை மற்றும் கோட் அணிந்தும் தங்கள் பணிகளுக்கு வர வேண்டும் என்று உகாண்டா அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 

 • முக நூலிலிருந்து லாக் அவுட் செய்த பிறகும் இணையத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பிற தேடல்களையும் முகநூல் பின் தொடரலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அதிர்ச்சியான தீர்ப்பு அளித்துள்ளது.

                                                                                                     விளையாட்டு செய்திகள் :

 

 • விம்பிள்டன் டென்னிசில் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச்   ஜெர்மனியின்   கெர்பரை வீழ்த்தி வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • தமிழ்நாடு தடகள சங்கத்தின் அனுமதியுடன் 21 கிலோ மீட்டர் 5 கிலோ மீட்டர் என்று இரு பிரிவுகளாக மிகப் பெரிய மரத்தான் போட்டி விருதுநகர் மாவட்டம் இராஜபாளயத்தில் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்   வீராங்கனைகளும் மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியை இராஜபாளையம் சுரன் நர்சிங் கல்லூரி நடத்துகிறது என்பது குறிப்பிடதக்கது.

 

 • 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியுற்றார்.

 

 • டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஜுலை 22ம் தேதி முதல் நடைபெற உள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் ரசிகர்கள் பூங்கா என்ற தலைப்பில் பிரமாண்ட திரையில் ஆட்டத்தை நேரலையாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 • பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

 

 • 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போடடி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்கி 9ம் தேதி வரை நடை பெறுகிறது.

 

 • யு-20 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு ஆர்வமுடன் இருப்பதாக அகில இந்திய கால்பந்து சம்மேளம் (ஏஐஎஃப்எஃப்) சர்வதேச கால்பந்து சங்கங்களுக்கான சம்மேளனத்திடம்(ஃபிஃபா) தெரிவித்துள்ளது.

 

                                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தியாவின் கடனை திருப்ப செலுத்தும் திறன் அதிகரிக்கும் என தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது.

 

 • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய உதவும் வகையில் ‘இலட்ஜர்ஸ்’என்ற மென்பொருளை ‘இந்தியாஃ பைலிங்ஸ்’ நிறுவன மேலாண்மை இயக்குனர் லயனல் சார்லஸ் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

 

 • சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்டப் பின்பு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.435லிருந்து ரூ.23 விலை உயர்ந்து ரூ.462 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • பொது துறையைச் சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பிரீமியம் சென்ற நிதி ஆண்டில் 18.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

 

 • இந்திய நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ஏப்ரல் மற்றும் Nமு மாத காலத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என நவரத்தின மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜி.ஜே.இ.பி.சி) தெரிவித்துள்ளது.

 

 • 4ஜி வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது என்று தொலை தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

 

 

Call Now
Message us on Whatsapp