JULY 08

Date:08 Jul, 2017

JULY 08

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 08

                                                 தேசிய செய்திகள் :

 

 • இந்தியாவின் மீக நெருங்கிய நட்பு நாடு வங்கதேசம் தான் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

 • நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காப்பகங்களில் வசிக்கும் கணவரை இழந்த பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கான வரைவுத் திட்டம் தயார் நிலையில் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 •  இரயில்வேயில் பணி நியமனம் செய்வதற்கு ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டதால் 4 இலட்சம் மரங்கள் மற்றும் 319 கோடி தாள்கள் பாதுகாக்கப்பட்டதாக இரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 

 •  மத்திய அரசின் சமூகநலத்திட்டப் பயன்களை பெறுவதற்க்கு ஆதார் எண் கட்டாயம் மாக்கப்பட்டது.ஆதார் எண் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் அரசியல் சாசன அமர்வு முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

 •  இந்திய தொழிநுட்ப நிறுவனமான (ஐஐடி) மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

 

 •  இந்திய- பாகிஸ்தான் எல்லையை திறப்பது பஞ்சாப் மாநிலத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.

 

 •  மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்க்களுக்கு 85 சதவீதம் இடங்களை ஒதுக்கிய தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான மனுவை விசாரித்த சுப்பீம் கோர்ட்டு இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

 

 • தேசிய அளவில் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை நேரடியாக விற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பது அரசின் கடமையாகும் எனவே மத்திய மாநில அரசுகள் இதற்கான போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

 

                                                                                              பன்னாட்டு செய்திகள் :

 

 • ஐ.நா சபையின் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டன என அம்மாநாட்டின் தலைவர் அறிவித்துள்ளார்.
 •  ஐ.நா பாதுகாப்பு அவையில் ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் வட கொரியா மீது கூடுதல் தடைகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

 

 •  மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 4000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின.இதில் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் தொடங்கியது. இம்மாநாட்டில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளின் புகலிடங்கள், சர்வதேச அளவில் தகவல்கள் பரிமாறிக் கொள்வது, நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பது போன்ற தீவிரவாத செயல்கள் அழிக்கப்பட வேண்டும் என்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 •  இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் 70 வருடங்களில் இல்லாத புரட்சி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதார நிலை 7 சதவீதம் ஜிடிபி –யுடன் வளர்ச்சியடைந்து வருகிறது எனவும் ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

 •  பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன என பிரதமர் மோடி ஆக்கபூர்வமான கருத்துகக்களை ஜி-20 மாநாட்டில் வெளிகொணர்தார்.

 

 • பாகிஸ்தானில் மரண தண்டனைக்கு எதிரான தடை 2014ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு கடந்த இரண்டு வருடங்களில் 465 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிர்ச்சியான தகவல்களை பாகிஸ்தானின் அரசு சாரா தொண்டு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

 

 •  பிரிட்டனில் தீவிரவாதம் மற்றும் மத பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்படுபவர்களைத் தனிச்சிறையில் அடைக்கும் திட்டம் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

                                                                                        விளையாட்டு செய்திகள் :

 

 • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி.

 

 • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது இங்கிலாந்து அணி 458 ரன்கள் குவித்தனர்.

 

 • 17 வது ஜுனியர் உலக கோப்பை கால்பந்து (17 வயதிற்குட்பட்டோர்) போட்டி அக்டோபர் 6ம் தேதி முதல் 28ந்தேதி வரை இந்தியாவில் ஆறு இடங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று ஒரே நாளில் 4 தங்கம் தலா 1 வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று அசத்தி உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த லெட்மணன் என்ற வீரர் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான மாருதி சுசுகி விருது ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துக்கு வழங்கப்பட்டது.

 

 • ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சச்சின் சிவக் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

 

 • மகளிர் உலகக் கிரிக்கெட் தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி மோதுகிறது. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது.

 

 

                                                                            பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் தொடர்ந்து புரட்சி செய்து இருக்கிறது. ஆர் ஜியோ ரூ.500க்கு புதிய 4ஜி வோல்ட் ஸ்மாட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 • சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கேபிடல் மற்றும் ஐடிஎப்சி வங்கி ஆகிய இரு நிறுவனங்கள் இணைய திட்டமிட்டிருக்கின்றன.இதன் மூலம் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.60000 கோடிக்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சிறு தொழிலுக்கான கடன்களை அதிகரிப்பதங்கான முன்னுரிமையை அளித்து வருகிறது.சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது மற்றும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது போன்றவற்றிற்கு கடனுதவி வழங்கப்படும் என்று அவ்வங்கி கூறியுள்ளது.

 

 • தங்கத்திற்கான வரி விதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறையும் என்று தங்க கவுன்சில் கூறியுள்ளது.

 

 • பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆப் இந்தியாவில் கூடுதலாக 3.12 சதவீதம் பங்குகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.கையகப்படுத்தியுள்ளது என அவ்வங்கி கூறியுள்ளது.

 

 • அகர்வால் ஹெல்த்கேர் நிறுவனத்தின் கீழிலான கண் மருத்துவமனைகள் விரிவாக்கத்திற்க்காக ரூ.160 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • தேசிய பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து 9665 புள்ளிகள் நிலைத்தது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 8 புள்ளிகள் குறைந்து 31360 புள்ளிகளில் நிலைத்தது.

  Current Affairs

  12th – G20 Submit held in Hamburg (Germany). Theme : “ Shaping an inter connected world ”

  9th  BRICKS submit will be in September in  Xiamen, China

  India to join new global foreign exchange committee

  Nepal SBI launches first paperless banking service sbiINTouch in Kanthmandu

  A.R.Rahman shortlisted for World Soundtrack Award

  John Joseph to take charge as chief of GST Intelligence Agency

  Queen Elizabeth hires first ever black assistant major Nana Kofi Twumasi  –  Ankrah

  Raninder Singh re-elected as NRAI president

  Former Bengal cricketer Gour Gosh passes away

   

Call Now
Message us on Whatsapp