JULY 07

Date:07 Jul, 2017

JULY 07

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 07

                                                 தேசிய செய்திகள் :

 

 • கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் காவிரியை மாசுபடுத்துகின்றன. இதனால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் மாசு கலந்து வருவதால் பயிர்கள் அளிக்கபடு கின்றன. இதுகுறித்து மாசு கட்டுபாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரிம் கோட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 • தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஜல்லிகட்டு சட்டத்துக்கு தடை விதிக்ககோரி ‘பீட்டா” அமைப்பு நேற்று சுப்ரீம் கோட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

 

 • விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் விதமாக விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோட் ஆணை பிறப்பித்துள்ளது.

 

 • நாட்டில் அடிப்படை கல்வியின் தரம் மோசமடைந்து வருவதால் அடுத்த கல்வி ஆண்டில் முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 • விமானக் கடத்தலின்போது யாருக்கு உயிரிழப்பு ஏற்பட்டாலும் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

 

 • ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறையை அமல்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

 

 • தமிழக விவசாயிகளை கட்டாயப்படுத்தி கடனை வசூலிப்பது கூடாது என்று வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

 

                                                                                                  பன்னாட்டு செய்திகள் :

 

 • 2040 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் – டீசல் வாகனங்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு தடைகளையும் மீறி அணுகுண்டு ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வட கொரியாவின் இராணுவத்தை தடை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கருத்திற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

 • பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடப்பு கொண்டுள்ள ஜமாத் உல் அஹார் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடைவிதித்து உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • உப்பு கலந்த அல்லது மாசு கலந்த நீரில் இருந்து உயர்தரமான குடிநீரை தயாரிப்பதற்காக நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் ‘கால்-மொபைல்’ சிறப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்திலிருந்து நாளொன்றுக்கு 20000 லிட்டர் கடல்நீரையும் 80000 லிட்டர் வண்டல் கலந்த கலங்கிய ஆற்று நீரையும் சுத்திகரிக்க முடியும் இவ்வியந்திரம் தற்போது இஸ்ரேல் நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தியா ஜோர்டான் இடையே தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரி விதிப்பு விசா வழங்குவதில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இருநாடுகளும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மேற்கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • ஐ.நா மற்றும் உலக நாடுகளின் எதிர்பை மீறி அணுகுண்டு ஆராய்ச்சி மற்றும் ஏவுகனை ஆராய்ச்சி செய்துவருகிறது வடகொரியா. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் வடகொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 • வடகொரியாவின் ஏவுகனை பரிசோதனையை சம்மாளிக்க தென் கொரியாவும் போர் விமானம் போர் கப்பல் ஹெலி காப்டர் மூலம் ஏவுகனைளை செலுத்தி ஒத்திகை செய்தனர். வடகொரியாவின் செயலுக்கு தென் கொரியாவும் அமெரிக்காவும் சேர்ந்து கூட்டு போர் மற்றும் பயிர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளன என தென் கொரியா கப்பல் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

                                                                                           விளையாட்டு செய்திகள் :

 

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் குடியரசின் பாவ்லஸ்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார் செர்பியாவின் கோவிச்.

 

 • கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 96 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

 

 • ஆசிய இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உலக இளையோர் சாம்பியனும் இந்தியருமான சச்சின் சிவச் 49 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

 

 • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கௌர் தங்க பதக்கத்தையும் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கௌடா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்கள்.

 

 • இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 வது லீக்கில் நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

 

 • ஜிம்பாவேக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் டிக்வெல்லா குணதிலகா ஆகியோரின் சதத்தால் இலங்கை அணி வெற்றி பெற்றது.

 

 

                                                                               பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் அடுத்த மாதம் முடிவு செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

 

 • பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்ஷீரன்ஸ் நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் வெளியிட (ஐபிஓ) திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

 

 • சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியே அடிப்படை என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

 

 • சர்வதேச இ-டெயில் நிறுவனமான அமெசான் இந்தியாவில் ரூ1680 கோடி முதலிடு செய்ய திட்டமிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • சூப்பர் பைக் கடன் பிரிவில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.

 

 • மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செஸ் குறியீட்டு எண் 36 புள்ளிகள் உயர்ந்து 31245 புள்ளிகளாக உள்ளது.

                                        Current Affairs

 

 • The Jammu and Kashmir Legislative Assembly has become the last state to adopt the Goods and services tax (GST)

 

 • Odisha Government signs Expression of Intent (EOI) with international Association of Athletics Federation and the athletics Federation of India to establish high performance Academy.

 

 • India OS has announced a partnership with YES BANK to launch the first OS integrated UPI payment platform.

 

 • Siemens has opened its first digital Factory in India & third globally after one, in Germany and china.

 

 • Kewal Handa appointed as Non-executive chairman of Union Bank.

 

 • Space x launches Super – Heavy intel sat  35e Satellite from Kennedy space centre florida.

 

 • India 96th in FIFA World Banking

 

 • 10th India – Jordan Trade and Economic Joint committee meeting was held in New Delhi.

 

 • India declares itself free from highly pathogenic Avian Influenza H5NI and H5N8

 

 • 5th meeting of BRICS education ministers was held at Beijing, China

 

 • The national Book Trust recently launched the har  haath Ek –Kithach Scheme in collaboration with Snapdeal.

 

 • The Canadian prime minister Justin Trudeau was awarded honorary degree by the university of Edinburgh to recognition of his/her commitment to equality and diversity.                                                                                                         

Call Now
Message us on Whatsapp