JULY24

Date:24 Jul, 2017

JULY24

                                                                                                                                                                                                   

                                     We Shine Daily News

                                                 தமிழ்

                                              ஜூலை 24

                                         தேசிய செய்திகள்

 • நாடு முழுவதும் அறிவியல் ஆய்வுகளுக்கு சர்வதேச தரத்திலான கணிணிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான “சூப்பர் கம்ப்யூட்டரை” ரூ.4500 கோடி செலவில் இந்தியாவிலே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • பிரிவுசாரா விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி – ஒரு தாழ்மையான ஊழியராக மக்களுக்கு சேவையாற்றிய பரிபூரணமான உணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் “வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்” என்று உருக்கமாக கூறினார்.

 

 • புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்க உள்ளார்.

 

 • நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்தில் லோக் அதாலத் நீதிபதியாக, ஜோயிதா மோண்டல்(திருநங்கை) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • மருந்துகளின் பலன் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • மத்திய அரசு அறிமுகம் செய்த “புகையிலைப் பழக்கத்தைக் கைவிடும் திட்டம்” முதலாம் ஆண்டில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) தெரிவித்துள்ளது.

 

 • புகழ்பெற்ற விஞ்ஞானியும் இஸ்ரோவின் முன்னாள் சேர்மனுமான யூ.ஆர்.ராவ் இன்று காலமானார். இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆர்யப்பட்டா ஏவுதலில் முக்கிய பங்கு வகித்தார். 2017ம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • பணியிட மாறுதலுக்காக அரசியல் செல்வாக்கை நாடக்கூடாது என வருமான வரி இலகாவினருக்கு, நேரடி வரிகள் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • ‘நிதி ஆயோக்’ பரிந்துரையை ஏற்று மத்திய அரசு துறைகளில் தனியார் வல்லுனர்களை நியமனம் செய்ய மோடி அரசு முடிவு எடுத்துள்ளது.

 

 • அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

 

 • ராணுவ பீரங்கிகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களுக்கான உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது.

 

                                                                                                         பன்னாட்டு   செய்திகள்

 

 • எகிப்தின் மிகப் பெரிய இராணுவத் தளத்தை அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசி நாட்டுக்காக அர்பணித்தார். எகிப்தின் மத்திய கிழக்குப் பகுதியிலே இந்த இராணுவத் தளம் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • பாகிஸ்தானுக்கு அதிநவின ஹெலிகாப்டரை ரஷியா விற்பனை செய்துள்ளது. இந்த நிகழாண்டில் பாகிஸ்தானுக்கு ரஷியா விற்பனை செய்யும் இரண்டாவது ஹெலிகாப்டர் ஆகும். இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் மேலும் நெருக்கம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

 

 • ரஷியாவின் “மிக் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன” மிக் ரக விமானங்களை தயாரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத்தின் மிக் ரக போர் விமானங்களை இந்தியா கடந்த 50 ஆண்டுகளாக வாங்கி பயன்படுத்தி வருகிறது. எந்தவொரு தனது புதிய தயாரிப்பையும் இந்தியாவுக்கு சப்ளை செய்வதில் இந்த நிறுவனம் ஆர்வம் கொண்டுள்ளதாக மிக் ஏர்கிராப்ட் கார்பரேஷன் தலைமை செயல் அதிகாரி இல்யா தாராசெங்கோ தெரிவித்துள்ளார்.

 

 • நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தகர்ந்த ஜப்பானில், கடந்த ஆறு வருடங்களாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. “லிட்டில் கன்பிஷ்” எனும் ரோபாவின் உதவியுடன் ஆய்வு நடத்தியப் போது ஃபூகுஷிமா அணு உலையில் உறைந்த நிலையில் அணு எரிபொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தலையிட்ட விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

 

 • இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்க்காக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதில் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களை சுட்டுகொலை செய்வதற்கு உரிமை அளிக்கப்பட்டது.

 

 • இந்தியாவில்; அதிவேகமாக உயர்ந்த வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் 100 “பொலிவுறு நகரங்கள்”(ஸ்மார்ட் சிட்டி) அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் பயன்பாட்டுத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்தியாவின் “பொலிவுறு நகரங்கள்” திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரிட்டனில் உள்ள லிங்கன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 • சிரியா ராணுவம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே ரசாயன ஆயுதங்களைப் பயன்படத்தவில்லை, ரசாயன ஆயுதங்கள் யாவும் அழிக்கப்பட்டன எனவும் பென்டகனின் உயர்; அதிகாரிகளின் தலைவர் ஜோசப் டன்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

 

                                                                                                         விளையாட்டு செய்திகள்

 • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. தொடர்ந்து 4 ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 

 • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் சரத்குமார், வருண் பட்டி ஆகியோர் வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருவள்ளுர் வீரன்ஸ் அணிகள் இன்று மோதல்.

 

 • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் தொடரில் இலங்கை அணியுடன் மோதுகிறது.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

 • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 10 வீராங்கனைகள் இரயில்வேயில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

 

 • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் வீராங்கனை ஹர்மன்பீரித் கௌருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்க ஓபன் கிராண்ட்பிரி கோல்டு பேட்மிண்டன் போட்டி கலிபோர்னியாவில் உள்ள அனாஹெய்ம் நகரில் நடந்து வருகிறது. இறுதிப் போட்டியில் காஷ்யப், பிரனாய் மோதுகின்றனர்.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • முதலீட்டுக்கு சிறந்தது “கோல்டு ஈடிஎஃப்” எனவும், உலக அளவில் பார்த்தால் தங்கப் பயன்பாட்டில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 

 • காதி முந்திரையைப் பயன்படுத்தி பொருள்களை விற்க வகை செய்யும் பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனமான அரவிந்த் மற்றும் கதர் கிராமத் தொழில் நிறுவன வாரியம் (கே.விஐ.சி.) கையெழுத்திட்டுள்ளன.

 

 • கணக்கில் வராத பணம் ரூ.71941 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதி மன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

 • நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவால் மிகுந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பன கொரியா தெரிவித்துள்ளார்.

 

 • டாடா குழுமம், செயல்படாத நிறுவனங்களை விற்க திட்டம் செய்யப்பட்டுள்ளதாக டாடா சன்ஸ் தலைவர் என். சுந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

 • ஜப்பானின் ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது 10வது தலைமுறை ஹோண்டா அக்கார்ட் காரை அமெரிக்காவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.21,009.59 கோடி மதிப்பிலான வர்த்தகமும், தேசிய பங்கு சந்தையில் ரூ.1,36,048.72 கோடி வர்த்தகமும் நடைபெற்றது. இது பங்கு சந்தைகளுக்கான “புதிய சாதனை வாரம”என கருதப்படுகிறது.

 

 • வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளைத் தனியே கண்டறிவதற்கு 12 பண சோதனை இயந்திரங்களை ரிசர்வ் வங்கி குத்தகைக்கு எடுத்துள்ளது.

   Current Affairs

   

  • Pradhan Mantri vaya vandana new pension scheme with 8% Fixed rate to be launched by finance minister

   

  • Lok sabha passes IIIT public private partnership Bill 2017. The Bill provides to establish 20 IIT’s under public private partnership mode across the country.

   

  • Australia joins International solar Alliance

   

  • Lord Davies Appointed chair of the UK India Business council.

   

  • The centre and state Government of Haryana joined hands to

   

  • Brenda Hale appointed as UK Supreme Court’s first female president.

   

  • Ashok Malik has been appointed as the press secretary to president by the union cabinet.

Call Now
Message us on Whatsapp