January 30

Date:30 Jan, 2018

January 30

 

We Shine Daily News

ஜனவரி 30

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • பிரான்சில் பெண்களை கேலி செய்தால் € 350(ரூ.27ஆயிரம்) அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது

 

 • ஓமனில் அடுத்த 6 மாதத்திற்கு ஊடகம், ஐடி, மார்கெட்டிங், இன்சூரன்ஸ் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • பிரத்தானியாவில் தபால் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை 17சதவீதம் உயர்த்த(£72.50 இருந்து £85ஆக) அரசு முடிவு செய்துள்ளது.

 

 • எகிப்து, ஈரான், ஈராக், லிப்தா, மாலி, வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 11 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தடையை அமெரிக்க அரசு நீக்கியுள்ளது

 

 • சீனா, உலகின் மிக உயரமான கட்டிடத்தை மலேசியாவில் கட்டி வருகிறது. இதன் உயரம் 492 மீட்டர் உயரமாகும். இக்கட்டிடத்திற்கு ‘சிக்னேச்சர் டவர்’ என பெயரிடப்பட்டுள்ளது

 

 • பொலிவியாவில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் மிக நீண்ட தூர கேபிள் கார் சேவை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது

 

 • இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே முழுக்க, முழுக்க சூரிய சக்தியால் ஒளி வீசும் பாலம் என அறியப்பட்டுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • 2018 குடியரசு தின விழாவில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படை, சிறந்த அணிவகுப்புக்கான கோப்பையை வென்றுள்ளது

 

 • 2013-2014 முதல் 2016-2017 ஆகிய 4 நிதியாண்டில் நன்கொடை பெற்றதில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது

 

 • உத்திரப்பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி(சோலார்) நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில கூடுதல் மின்சார வளங்கள் துறை அமைச்சர் ‘விர்ஜேஸ் பதக்’ தெரிவித்துள்ளார்

 

 • கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக மின்சார பேருந்து பயணம்(கடம்பா) நேற்று தொடங்கப்பட்டது

 

 • இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ‘தலிமரன் ஆவின்’ 100வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த தபால் தலையை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ‘ஜெகதீஷ் முகி’ வெளியிட்டார்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • மெக்பரன் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து தொடரில் பெங்களுரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது

 

 • நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர்ஸ் விதித் குஜராத்தி சாம்பியன்ஆனார்

 

 • டெல்லியில் வரும் 31ம் தேதி தொடங்கும் ‘விளையாடு இந்தியா’ போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில். ‘குரு – சிஷ்யன்’ என்ற கருத்துருவின் அடிப்படையில் நட்சத்திர வீரர்களும், அவர்களது பயிற்சியாளர்களும் கூட்டாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

 • எஸ்.டி.ஏ.டி – ஏ.கே.ஜி டேபிள் டென்னிஸ் மையம் சார்பில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் பி.எஸ். சீனியர் பள்ளி மாணவி எஸ்.கிருத்திகா சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

 

 • சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 47வது இடத்தில் உள்ளார்

 

 • இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது

 

 • தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து கைதாகும் பிரச்சனையிலிருந்து விடுபட ‘நாவிக்’ என்ற புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

 

 • மருத்துவமனைக்கு வராமல் தொலைவிலிருந்து மருத்துவம் பார்க்கவும், தொலைத்தூரக் கல்வி பயிலவும் துணை புரியும் ‘ஜி-சேட் 11’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

 

 • நோய்களைக் கண்டறியக் கூடிய வகையில் சிறிய நாணய வடிவில் இலத்திரனியல் சிப் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த UB பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

புதிய நியமனம்

 

 

 • இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை செயலராக ‘விஜய் கேசவ் கோகலே’ நேற்று பதவியேற்றார்

 

 

விருதுகள்

 

 • அமெரிக்காவின் உயரிய விருதான 60வது கிராமிய விருதுகள் வழங்கும் விழா நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் அமெரிக்க பாடகர் ‘புருனோ மார்ஸ்’ 6 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார். இவரது ‘24 மேஜிக்’ என்ற பாடல் 2018ம் ஆண்டிற்கான சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 • புதுச்சேரியில் உள்ள ஹோலிபிளவர்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 30 – மகாத்மா காந்தி நினைவு(70வது) தினம்

 

 • ஜனவரி 30 – பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் பிறந்த நாள்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • இந்திய கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சுவிட்சர்லாந்தின், கூப் கூட்டுறவு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இயற்கை முறையில் இறால் வளர்ப்பு திட்டத்தை தொடங்க உள்ளது

 

 • ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் வாஷிங்டனில் உள்ள தனது தலைமை அலுவலகத்தை முழுவதும் பசுமையாக மாற்றியுள்ளது

 

 • வீட்டு வசதிக்கு கடனுதவிகளை அளித்து வரும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது

 

 • வேகமாக விற்பனையாகும் நுகர்வேர் பொருள்கள் துறையைச் சேர்ந்த இமாமி நிறுவனத்தின் வருவாய் மூன்றாவது காலாண்டில் ரூ.762.16 கோடியாக இருந்தது

 

 • தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த டெக் மஹிந்திரா நிறுவனம், டிசம்பர் காலாண்டில் ரூ.943.1 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • The Hindi word of the year as announced by oxford dictionaries for 2017 is ‘AADHAAR’

 

 • The third edition of International Spice Conference will be held at Jaipur

 

 • A three day international bird festival will be held at the Dudhwa National park in Uttar Pradesh from Feb 9

 

 • Assam Governor Jagdish Mukhi released a postage stamps on legendary footballer Talimeren Ao during his birth Centenary

 

 • India – Vietnam bilateral Exercise (VINBAX – 2018) was conducted at Jabalpur in Madhya Pradesh

 

 • US invites Punjab university Scientist to identify human skeletal remains from 9/11 terror attack

 

 • Maharashtra CM said the government had approved a plan of 750 cr for a law university at Nagpur.

 

Economy

 

 • Finance minister presented Economic Survey 2017-18 in parliament
  1. Real GDP Growth to clock 75% this fiscal and will rise to 7.0 to 7.5% in 2018 – 19
  2. During April – September 2017-18 Growth in services exports and services Imports Robust at 16.2% at 17.4% Respectively
   • Agriculture – 2.1%
   • Industry – 4.4%
   • Services Sectors – 8.3 respectively in 2017-18

 

 • According to a survey by Go Banking Rate ranked nations, India is ranked second only to South Africa as the cheapest country to live

 

Sports

Australian open 2018

 

 • Men’s singles – Roger Federer (Switzerland)

 

 • Women’s singles – Caroline Wozniacki (Denmark)

 

 • Men’s doubles – Oliver Marach (Austria) Mate Pavic (Croatia)

 

 • Women’s doubles – Kristina Mladenovic (France)

 

 • Mixed Dobles – Gabriela Dabrowski (Canada) Mate Pavic (Croatia)

 

Appointment

 

 • Vijay Gokhale assumed charge as the new foreign Secretary of India

 

Obituary

 

 • The first governor of Chhattisgarh V Tripura Dinesh Nandan passed away

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube