January 21

Date:21 Jan, 2018

January 21

 

We Shine Daily News

ஜனவரி 21

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் (அமெரிக்காவின் விமானக் கட்டுமான மற்றும் பாதுகாப்பு நிறுவனம்) இந்தியாவில் எஃப்-35 ரக ஜெட் போர் விமானங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

 

 • காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (ஆஸ்திரேலியா), அடிலெய்டு பல்கலைக்கழகம், அபர்தீன் பல்கலைக்கழகம் (ஸ்காட்லாந்து) ஆகியவை இணைந்து தெற்கு ஆஸ்திரேலிய கடலுக்கு அடியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 26 எரிமலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

 • அரசுச் செலவுகளுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததால் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசுத் துறைகளும் மூடப்பட்டுள்ளன.

 

தேசிய செய்திகள்

 

 

 • சுவிட்சர்லாந்தில் நாளை நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

 

 • விமான பயணத்தின் போது பயணிகள் மொபைல் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்துள்ளது.

 

 • மத்திய பட்ஜெட்டில் சாலை திட்டப் பணிகளுக்காக 1.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி (மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகத்தை டெல்லியில் ஃபரூக் அப்துல்லா (ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்) வெளியிட்டார்.

 

 • புது டெல்லியில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை 2017-18 போட்டியில் கிரிஷ் ஆர்.கௌடா (கர்நாடகம்) தங்கப் பதக்கம் வென்றார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சார்ஜாவில் நடைபெற்ற பார்வை அற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

 

 • ஐபிஎல் போட்டியில் ஏலத்திற்கு வரும் வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று (20-1-2018) வெளியிட்டது. இதில் அஸ்வின் (தமிழகம்) உட்பட 16 பேர் முன்னணி வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

 • தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய ரயில்வேயை தமிழகம் வீழ்த்தியுள்ளது.

 

 • அமெரிக்க தடகள வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 60 மீட்டர் உள்ளரங்கு ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 

 • ஜீனியர் உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி கனடாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் மூன்று மடங்கு உயர்ந்தால், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி காணும் என்று அருணா சுந்தரராஜன் (மத்திய தொலை தொடர்பு துறை செயலர்) தெரிவித்துள்ளார்.

 

 • ஐடிசி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 16.75 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் 25 சதவீத நிகர லாபம் அடைந்துள்ளது.

 

 • பார்தி டெலிமிடியாவின் கீழ் உள்ள டிடிஎச் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை துணை நிறுவனமான நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்க இருப்பதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள 51.11 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் “புளுட்டோனியம் 238 ஆக்சைடு” என்ற அணுவின் மூலம் விண்வெளியில் இருக்கும் பொருட்களை இயங்க வைக்கலாம் என்று நாசா கண்டுபிடித்துள்ளது.

 

புதிய நியமனம்

 

 • அமெரிக்க வழக்கறிஞரான குர்பீர் எஸ் கிரேவால் (இந்திய வம்சாவளி) நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விருதுகள்

 

 • நிர்வாகத்தில் புதுமைகளை அறிமுகப்படுத்தியதற்காக, நாரா லோகேஷ்க்கு (ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்) “அப்துல் கலாம் விருது” வழங்கப்பட்டுள்ளது.

 

 • வெளிநாடுகளுக்கு கனரக வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிப்பதை பாராட்டி பி.ஆர். விஸ்வநாதாவுக்கு (பி.இ.எம்.எல். நிறுவனத்தின் கட்டுமானப்பிரிவு இயக்குனர்) தங்க விருதினை வெங்கையா நாயுடு (துணை ஜனாதிபதி) வழங்கினார்

 

 

English Current Affairs

 

National News

 

 • 25th Meeting of the Goods and Service Tax Council was held in New Delhi on Jan 18, 2018

 

 • Union Ministry of I/C for Housing and Urban Affairs Hardeep S Puri announced commencement of the Live ability Index Programme in 116 Indian cities. This programme would be funded by the World Bank.

 

 • Odisha State Government launched Odisha e – Hospital Management Information System (OeHMIS) an online platform which hosts clinical parameters of patients and reporting of performance criteria of hospitals

 

 • Rajnath Singh launches Bharat Ka Veer Anthem short film on India’s brave hearts

 

 • Maharastra State Government approved Rs.4000 crore – Nanaji Deshmukh Krishi Sanjivani Yojna

 

 • Telangana State Government announced that it had signed a MOU with the clean Authority of Tokyo for Municipal solid waste incineration facilities.

 

 • National conference on Improving accessibility Justice and Empowerment Minister Thaawarchand Ghelot launched 100 accessible websites for Divyangs to empower the disabled person in all over the country.

 

 • The Odisha Government has signed an agreement to selling up an incubator for promoting research with software Technology Park of India, Philanthropist Sushmita Bagchi and IIT Bhubaneswar in Bhubaneswar, Odisha.

 

International Affairs

 

 • Maitre – 2 a second passenger bus to Kolkata Via Dhaka was flagged off from Agartale Tripura.

 

Business

 

 • Amplus Energy Solutions announced entering into a pact with private sector lender Yes Bank for a Strategic tie up to co – finance projects in the solar energy space in India.

 

Sports

 

 • Jammu and Kashmir will host its first maiden International Martial arts games event in the summer capital Srinagar.

 

Obituary

 

 • Former MP Assembly Speaker Sriniwas Tiwari passed away

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube