January 12

Date:12 Jan, 2018

January 12

 

We Shine Daily News

ஜனவரி 12

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் டாக்ஸி ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

 

 • விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசேஞ்சேவிற்கு(ஆஸ்திரேலியா) ஈக்வடார் நாடு குடியுரிமை அளித்துள்ளது

 

 • வெளுத்த தோல், தோல் சுருக்கங்கள், அறுவை சிகிச்சை தழும்புகள் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடையாது என்று கானா அரசு அறிவித்துள்ளது

 

 • அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த ‘ரகுநந்தன் யண்டாமுரி’ என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் ஆவார்

 

 • அமெரிக்க நாடாளுமன்றத்தில், குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படும் ‘கிரீன் கார்டுதகுதி அடிப்படையில் வழங்கப்படவும், கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீதத்திற்கு அதிகரித்தும்  புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • சர்வதேச அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளது

 

 • சிறுவயதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேரிய 8 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை விதித்துள்ளது

 

 • உலகின் மிகவும் பரப்பரப்பான விமான வழித்தடங்கள் பட்டியலில், மும்பை – டெல்லி இடையிலான வழித்தடம் 3வது இடம் பிடித்துள்ளது. சியோல் ஜிம்போ – ஜெஜு வழித்தடம் (தென் கொரியா) முதலிடத்திலும், மெல்போர்ன் – சிட்னி வழித்தடம்(ஆஸ்திரேலி) 2வது இடத்திலும் உள்ளது

 

 • உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில்(2017) (நுழைவுவாயில், ஓய்வு அறைகள், வாடிக்கையாளர்களின் சேவை, பாதுகாப்பு, தூய்மை, உணவு வசதிகள் ) – ஜுபா விமான நிலையம்(சூடான்) முதலிடத்தில் உள்ளது

 

 • ஈரானில்  அடுத்தடுத்து  8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • கல்லப் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச நிறுவனம், உலகில் சிறந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 3வது இடத்தில் உள்ளார்

 

 • நாட்டில் தூய்மையான இரயில் நிலையங்கள் பட்டியலில் கோழிக்கோடு(கேரளா) இரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. டெல்லி நிஜாமுதீன் இரயில் நிலையம் கடைசி இடத்தில் உள்ளது

 

 • வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள்(4 பேர் – செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், சூரியன் ஜோசப், மதன் லோகூர்) செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்

 

 • சுற்றுச் சூழலுக்கு உகந்த டாக்சி(மெட்ரினோ) நாட்டில் முதல் முறையாக டெல்லியில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்

 

 • கேரள சிறையில் உள்ள கைதிகள், நெருங்கிய உறவினர்களுக்கு உறுப்புகளை நன்கொடையாக அளிக்க அனுமதி வழங்க கேரளஅரசு முடிவு செய்துள்ளது

 

 • பிளஸ் 1 வகுப்புக்களில் முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் மாணவர்கள் பிளஸ் 2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

 

 • மத்தியப் பிரதேசத்தில், தேசிய இளைஞர் தினமான இன்று அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்று காலை 9 மணிக்கு சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

 

 • பொள்ளாச்சியில் சர்வதேச அளவிலான பலூன் திருவிழா தொடங்கியது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஐபிஎல் 2018ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக ‘சுரேஷ் ரெய்னா’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை(ஜனவரி 13) தொடங்குகிறது

 

 • மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் நேசமணி கல்லூரி(மார்த்தாண்டம்) மாணவி ‘ஆர். திவ்யா ஸ்டெனி’ முதலிடம் பிடித்துள்ளார்

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்’ என்று வர்ணிக்கப்படும் முன்னாள் வீரர் ‘ராகுல் டிராவிட்’ கிரிக்கெட் வாழ்க்கை ‘காமிக் புத்தகம்’என்ற தலைப்பில் வெளிவரவுள்ளது

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் நடால் முதலிடமும், பெடரர் 2வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் பிரிவில் முகுருசா முதல் இடத்தில் உள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 

 • இஸ்ரோ தனது 100வது மற்றும் 2018ம் ஆண்டின் முதல் செயற்கைகோளை(கார்டோசாட் 2 சீரிஸ்) பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தியது

 

 

விருதுகள்

 

 

 • தமிழ் எழுத்தாளர் ‘மாலனுக்கு’ இலக்கிய விருதான ‘பாரதிய பாஷா’ விருது வழங்கப்பட்டுள்ளது

 

 • டெல்லியைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர் ஐஸ்வர்யா டிப்னிஸ்க்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே’ விருது வழங்கப்பட்டுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 

 • போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்தராக, பத்மநாதன் (ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 12 – தேசிய இளைஞர் தினம்(சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்)

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • கடந்த ஆண்டில் நாடு முழுவதும் ரூ.3,500 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

 

 • விமானத்தை போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகளை முதல் முறையாக தெற்கு இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • போயிங் நிறுவனம் உலக விமான உற்பத்தி சந்தையில் முதலிடத்தில் உள்ளது

 

 • 2017ம் ஆண்டில் முதல் முறையாக இந்திய சந்தைகளில் பயணிகள் வாகன விற்பனை 30 லட்சமாக அதிகரித்துள்ளது

 

 • சத்யம் நிறுவன முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனத்துக்கு, பங்குசந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • Committee of Governors submitted a report, titled Rajyapal – vikas ke Rajdoot; catalytic role of Governors as Agents for change in society to president Ramnath Kovind.

 

 • Union Ministry of Road Transport and Highways signed a MOU with ‘Transport for London’ (TFL) in New Delhi under this MOU expertise of TFL will be used to revamp the public transport system in India.

 

 • West Bengal panchayat and Rural Development and Public Health Engineering Minister Subrata Mukherjee announced the launch of water ATM project to ensure bacteria – free drinking water in schools.

 

 • A subcommittee of (CABE) Central Advisory Board of Education looking into the issue of girl education in India has recommended free and compulsory education for girls’ up to post – graduate level across India.

 

 • 25th Raising Day of Army Air defence – 10 Jan

 

 • World Hindi Day – 10 Jan

 

 • Bhopal Station has become the first railway station in the country to have sanitary napkin vending machine. The machine has been named ‘Happy Nari’

 

 • President Ramnath Kovind inaugurated 4th International Dharma – Dhamma conference on “State and Social order in Dharma – Dhamma Traditions at Rajgir in Nalanda district of Bihar.

 

 • The 5th Bilateral Technical Meeting on co-operation in the field of Traditional Systems of Medicine between Government of India and Malaysia was conducted at New Delhi.

 

International Affairs

 

 • United Nations (UN) Environment programme and World Health Organisation agreed to collaborate for accelerating action to curb environmental health risks.

 

 • Shanghai has set up the world’s first 3D printed bus stops in Fengjing, shanghai.

 

Banking and Finance

 

 • IndusInd Bank and Dynamics Inc announced plans to introduce the first battery – powered interactive payment cards in the Indian Market in 2018.

 

Business

 

 • Central Government has successfully divested 52% of paid-up in National Mineral Development Corporation (NMDC) for an amount of Rs.1200 crore.

 

 • Indigo airlines of India has been named the fourth most punctual ‘mega carrier’ in the world in OAGS list of the world’s most punctual ‘Mega Carriers’

 

Appointments

 

 • J. Mathew was appointed as chairman of Maritime Board

 

 • Sivan K has been appointed as the chairman of ISRO (Indian Space Research Organisation)

 

 • Retired Justice Shiv Narayan Dhingra has been appointed as head of a new committee to re – investigate 186 closed case related to the 1984 anti – sikh riots

 

Science and Technology

 

 • A State of the art patrol vessel of the Indian coast Guard ‘Charlie – 435’ was commissioned at Karaikal in the Union Territory of Puducherry.

 

 • Indian Railway has decided to introduce Modern Optical Character Recognition (OCR) Kiosk Machines for fast and east printing of tickets booked through UTS app

 

 • The Indian Institute of Technology (IIT) has set up its first food testing lab in IIt Kharagpur

 

Obituary

 

 • Satyendra Kushwaha, BJP MLC (Member of the Legislative Council) passed away.

 

 • Balder Raj, Director of National Institute of Advanced studies passed away.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube