January 11

Date:11 Jan, 2018

January 11

 

We Shine Daily News

ஜனவரி 11

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஆசியான் மாநாடு(2018) – ஜனவரி 25ம் தேதி டெல்லியில்(இந்தியா) நடைபெறவுள்ளது. (ஆசியான் – தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூணே ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு)

 

 • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு அளித்து வந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது

 

 • பாரீஸில் € 2, 200 க்கும் குறைவான வருமானம் பெறும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இனி டிராம், மெட்ரோ, பேருந்து, RER ரயில்களில் இலவசமாக பயணம் செய்யும் விதமாக அவர்களுக்கு Navigo பாஸ் வழங்கப்படும் என பாரீஸ் அரசு அறிவித்துள்ளது

 

 • கேமரா தயாரிக்கும் கோடக் நிறுவனம் புகைப்படக் கலைஞர்களுக்காக ‘கோடக் காயின்’ என்ற வலைத்தள கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • அமெரிக்காவில் தூக்கமின்மையால் ஆண்டுதோறும் 3500 குழந்தைகள் பலியாகி வருகின்றனர் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது

 

தேசிய செய்திகள்

 

 

 • ஆந்திர அரசு, எம்.எல்.ஏக்கள் மற்றும்  அமைச்சர்கள் ஆகியோர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளது

 

 • ஏர் இந்தியா நிறுவனத்தில் அன்னிய விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

 • தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டை மார்ச் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது

 

 • நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி) தொகுதி மேம்பாட்டுநிதித் திட்டம் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

 

 • லூதியாணா(பஞ்சாப்) நகரக் காவலர்களுக்கு இனி வார விடுப்பு வழங்கப்படும் என்று நகர காவல் துறை ஆணையர் ஆர்.என். தோக் தெரிவித்துள்ளார்

 

 • நாடு முழுவதும், கடந்த 24 ஆண்டுகளில் துப்பரவு பணியின் போது 324 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநிலங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய, சர்வதேச அளவிலான பாய்மர படகுப் போட்டியில் வேலூர் மாணவன் விஷ்ணு தங்கப் பதக்கம் வென்றார்

 

 • தென் ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக மித்தாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • 20வது தேசிய இளையோர் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை தமிழக அணி கைப்பற்றியுள்ளது

 

 • இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாக கவுன்சிலில்(பிஎஃப்ஐ), பெண் வீராங்கனைகளுக்கான பிரதிநிதியாக சரிதா தேவி(முன்னாள் உலக மற்றும் ஆசிய சாம்பியன்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • அயர்லாந்து மற்றும் இந்தியா கலந்து கொள்ளும் இரண்டு டி 20 போட்டிகளில் விளையாட இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு அயர்லாந்துக்கு செல்ல உள்ளது

 

 • சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து கார்பின் முகுருஸா(ஸ்பெயின்) விலகியுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • நாட்டின் 4வது ராக்கெட் ஏவுதளத்தை ரூ.1300 கோடி செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது

 

 • குண்டு துளைக்காத ஆடை தயாரிக்க பயன்படும் இழையை(பாலி எத்திலின் நேனோ இழை) அமெரிக்காவின் எம்.ஐ.டி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • விமானிகளுக்கு பயிற்சி தர உதவக்கூடிய, முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் சிறு விமானத்தை பிபிஸ்ட்ரெல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. முதல் முறையாக விமானிகளுக்கு பயிற்சி தருவதற்கென்று அரசு அனுமதி பெற்ற மின் விமானம் இது என்ற பெருமையை பெற்றுள்ளது

 

 • ஓசோன் வாயுப் படலத்தில் விழுந்திருந்த பெரும் துளையின் அளவு சற்று சிறிதாகி உள்ளது என அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா அறிவித்துள்ளது

 

 

விருதுகள்

 

 • தினமலர் செய்தியாளர் சித்ரா சிவகுமாரனுக்கு ‘ஹிந்த் ரத்தன் விருது’(இந்தியாவின் பொக்கிஷம்) வழங்கப்பட்டுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(இஸ்ரோ) தலைவராக கே.சிவன்(தமிழகம்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தமிழக தலைமை செயலாளராக ‘கிரிஜா வைத்தியநாதன்’ பொறுப்பேற்றுக்கொண்டார்

 

 • இங்கிலாந்தில் ரிஷி சுனக் மற்றும் சுயல்லா பெர்னாண்டஸ் என்கிற இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவருக்கு துணை மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 09NRI தினம் (அ) பிரவசி பாரதீஸ் திவாஸ்

 

 • ஜனவரி 10உலக சிரிப்பு தினம்

 

 • ஜனவரி 11லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • சீனா மற்றும் மலேசியாவில் இருந்து சோலார் பேனல் இறக்குமதியை தடுக்க அவற்றின் மீது 70 சதவீத வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • முதலீட்டாளர்களிடம் வீடு கட்டித் தருவதாக பணத்தைத் திரட்டி, திருப்பித் தராததால், ரூ.125 கோடி பணத்தை அபராதம் செலுத்த வேண்டும் என்று ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 • இயற்கை உணவுப் பொருள்களை விற்பனை செய்து வரும் மன்னா ஃபுட்ஸ் நிறுவனத்தில், மார்க்கன் ஸ்டான்லி பிரைவேட் ஈக்விட்டி ஆசியா நிறுவனம்  ரூ.152 கோடியை முதலீடு செய்துள்ளது

 

 • மாணவ விடுதிகளில் உள்ள மெஸ்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

ஒப்பந்தம்

 

 • மாயமான மலேசிய விமானத்தை தேட மலேசிய அரசு அமெரிக்காவைச் சேர்ந்த ஓசியான் இன்பினிட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • Cabinet has approved MOU between India and Canada for co-operation in science and Technology

 

 • Cabinet approves implementation of CCEA decision on closure of Tungabhadra steel Products Limited

 

 • Cabinet approves continuation of members of Parliament Local Area Development Scheme till the term of the 14th Finance Commission i.e till March 31, 2020.

 

 • Cabinet has approved proposal to amend section 4(1) and section 5(1) of the National Trust for the welfare of person with Autism, Cerebral Palsy, Mental Retardation and Multiple Disabilities Act 1999.

 

 • India and Indonesia held their first bilateral security dialogue in New Delhi during the dialogue, India and Indonesia agreed on operational co-operation in security and counter – terrorism.

 

 • Supreme Court of India stayed a Karnataka High Court order quashing 85% pictorial warnings on packets of cigarettes and other tobacco products.

 

 • Union Home Ministry has appointed a 12 – member inter – ministerial committee to recommend changes in the existing law of playing of the national anthem in cinema halls and public places. The committee is headed by R. Sharma Additional Secretary in the Ministry of Home Affairs.

 

 • The 3rd meeting of council of Trade Development and promotion was chaired by Suresh Prabha, Union Minister for commerce & Industry.
  • Suresh Prabhu unveiled a study named
  • “LEADS – Logistics Ease Across Different States”

 

 • The Rajasthan Government has started to digitise 10,000 pages every day, in order to preserve administrative and historical records of Rajputana’s States.

 

 • The Central Government insisted people not to use National Flag made of plastic ahead of Republic day celebration.

 

 • The UIDAZ launched “Virtual ID” which an Aadhaar – card holder can generate from UIDAI website

 

International Affairs

 

 • North Korea has agreed to conduct talk with South Korea to reduce Military tension to send a delegation to the upcoming winter Olympics 2018 in Pyeongchang, South Korea

 

Banking & Finance

 

 • According to 2018 Global Economics prospect released by the World Bank on January 9, 2018 Indian economy is projected to grow at 7.3% in 2018 and 7.5% in next two years.

 

 • South Korea and the Gujarat Chambers of commerce and Industry signed a MOU for co-operation between South Korea and industries in Gujarat.

 

Awards

 

 • Jeff Bezos surpasses Bill Gates not worth and becomes richest person as per bloom berg’s Billionaire Tracker.

 

Appointment

 

 • Sunny Verghese appointed as World Business Council for sustainable Development.

 

Sports

 

 • Indian Olympic Association appointed Harjinder Singh as chef De mission for the 23rd winter Olympic games

 

 • Aanchal Thakur becomes first Indian to win an International medal in skiing.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube