January 07

Date:07 Jan, 2018

January 07

We Shine Daily News

ஜனவரி 7

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • சவுதி அரேபியாவில் எரிபொருள் விலையேற்றம், வாட்வரி போன்றவற்றால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க அரசுப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரியால் உதவிப்பணம் அளிக்க சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்

 

 • சீனா தனது 2வது வெளிநாட்டு கடற்படை தளத்தை பாகிஸ்தானில் அமைக்க உள்ளது

 

 • தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு, ரூ.7,500 கோடி நிதியுதவியை பாகிஸ்தான் மீண்டும் பெறலாம் என்று அமெரிக்கா நிபந்தனை அளித்துள்ளது

 

 • தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது

 

 • ‘ஹவாயியன் ஏர்லைன் 446’ என்ற விமானம் 2018ல் பறக்க தொடங்கி 2017ல் தரையிறங்கிய விமானம் என்ற பெயரை பெற்றுள்ளது. (நியூசிலாந்தில் 2018ம் ஆண்டு புத்தாண்டு இரவு பறக்க தொடங்கி 2017ல் (31ம் தேதி இரவு 10.15 மணிக்கு) ஹோனோலு நகரை(அமெரிக்கா) வந்தடைந்தது. 23 மணி நேர இடைவெளியே இதற்கு காரணமாகும்)

 

தேசிய செய்திகள்

 

 

 • மாநில போலீஸ் டிஜிப்பிகள், ஐஜிக்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் குவாலியரில்(மத்தியப் பிரதேசம்) நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்

 

 • மொராதாபாத்(உத்தரப் பிரதேசம்) அருகே 100 ஆண்டுகள் பழமையான பாலத்தை வடக்கு இரயில்வே அதிகாரிகள் 8 மணி நேரத்தில் மாற்றி புதிய பாலத்தை நிறுவியுள்ளனர்

 

 • அனைத்து கட்சிக் கொறடாக்கள் மாநாடு உதய்ப்பூரில் (ராஜஸ்தான்) நாளை (ஜனவரி 8) தொடங்குகிறது

 

 • நாட்டில் ஆறு மாநிலங்களில் (உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, இராஜஸ்தான்) மட்டுமே மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான துறைகள் இருப்பதாக நாடாளுமன்ற குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(டெல்லி) தரையிறங்கும் மற்றும் புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் வானில் பறக்க, இந்திய விமான நிலைய ஆணையம் தினமும் 100 நிமிடங்கள் தடை விதித்துள்ளது

 

 • தமிழக சட்ட சபையில் 2018ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளை (ஜனவரி 8) தொடங்குகிறது

 

 • தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு 5வது மாதத்தில் இருந்து உதவித் தொகை வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘எலினா ஸ்விடோலினா’ சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ‘கில்லெஸ் சைமன்’ சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் ‘ஜுலியா ஜார்ஜர்ஸ்’ சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்

 

 • கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ‘கெய்ல் மோன்பில்ஸ்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • 2018ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 15ம் தேதி தொடங்குகிறது

 

 • இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ‘டேல் ஸ்டெயின்’ (தென் ஆப்பிரிக்கா) விலகியுள்ளார்

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ‘செரீனா வில்லியம்ஸ்’ விலகியுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • உலகிலேயே முதன் முறையாக தொடும் பொருள்களை உணரும் தன்மை கொண்ட செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலி அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்

 

விருதுகள்

 

 

 • நாட்டின் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 • பின்னணி பாடகர் ‘எஸ்.பி. பால சுப்ரமணியன்’, ,(எல்.வைத்தியநாதன்)வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்

 

 

புதிய நியமனம்

 

 

 • பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தராக ‘பி.மணிசங்கர்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக ‘பி. குழந்தைவேல்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு சென்ற 2017ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் 3.64 சதவீதம் அதிகரித்துள்ளது

 

 • இந்தியாவின் டாப் 30 பில்லியனர்கள் பட்டியலில் ‘முகேஸ் அம்பானி’ முதலிடத்தில் உள்ளார். 2 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

 • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு சரிய வாய்ப்புள்ளதால் நடப்பாண்டில் தனிநபர் வருமானம் குறையும் என மத்திய புள்ளியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது

 

 • நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுலா துறையில் வரிகுறைப்பு உள்ளிட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • சவுதி அரேபியாவின் கூட்டு பங்கு நிறுவனமான அர்மாகோ என்னும் எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது

 

இறப்பு செய்தி

 

 • பாகிஸ்தானின் முதல் விமானப்படை தளபதி ‘அஸ்கர் கான்’ காலாமானார்

 

 • இலங்கைக்கான, மொரிஸியஸ் நாட்டின் முன்னாள் தூதர் ‘தேசபந்து தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன்’ காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • Bengaluru has emerged as the most well read city in India, while Mumbai and Delhi stands at second and third position respectively.

 

 • Arunachal Pradesh would get its first film and Television Institute, being set up by the Union Government as part of tapping the potential of the North Eastern region.

 

 • 18th All India Whips conference to start from Jan 8 to the held in

 

 • Telangana Government has inaugurated country’s first National park of people with special needs (differently abled people) in

 

 • PM Narendra Modi will attend the Annual Conference of DGPs and IGPs after at the BSF Academy at Tekanpur in Madhya Pradesh

 

 • Income Tax department launched an online chat service on its national website WWW. Income tax India.gov.in

 

 • The Pension Fund Regulatory and Development Authority of India (PFRDA) announced that Atal Pension Yojana (APY) run by it has reached a subscriber base of 80 lakh

 

Business

 

 • Fin Tech startup Nearby Technologies has tied up with Yes Bank to provide Aadhaar – enabled card less and PIN-less ATM service by which customers can deposit or withdraw money at retailers place.

 

 • Paytm payments Bank has partnered Induslnd Bank to introduce a facility to create a fixed deposit when the customer balance exceeds 1 lakh at the end of day.

 

Appointment

 

 • India’s High Commissioner to Kuala Lumpur T S Tirumurti was appointed the Secretary (Economic Relations) in the External Affairs Ministry

 

Sports

 

 • Switzerland’s Roger Federer and Belinda Bencic beat Germany’s Alexander Zverev and Angelique Kerber to win the Hopman cup for the first time since 2001.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube