January 06

Date:07 Jan, 2018

January 06

 

We Shine Daily News

ஜனவரி 6

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று ஐஸ்லாந்து நாடு சட்டம் இயற்றியுள்ளது.  இதன்மூலம் பெண்களுக்கு சரிசமமான ஊதியம் வழங்கும் முதல் நாடு ஐஸ்லாந்து ஆகும் 

 

 • சீனா தனது 3வது விமானம் தாங்கிக் கப்பலை அதிநவீன அம்சங்களுடன் கட்டமைக்கத் தொடங்கியுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • மேற்குவங்க அரசின் லோகாவை முதல்வர் மம்தா பானர்ஜி வெளிட்டுள்ளார்.

 

 • பிராந்திய ராணுவத்தில் (டெரிடோரியல் ஆர்மி) பெண்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 • உலக வங்கியின் ரூ.3,000 கோடி நிதியுதவியுடன் இந்தியாவில் திறன்மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அருண் ஜேட்லி (மத்திய நிதியமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.5 சதவீதமாக சரியும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 • 7வது தேசிய ஆண்கள் குத்துச்சண்டை போட்டி புதுச்சேரியில் நேற்று (5-1-2018) துவங்கியது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சோபர்ஸீடன் இணைந்து ஸ்டீவ் ஸ்மீத் (ஆஸ்திரேலிய கேப்டன்) 2-ம் இடம் பிடித்துள்ளார்.

 

 • இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (5-1-2018) தொடங்கியது.

 

 • இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து (தொடர் தோல்வி காரணமாக) திசாரா பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.

 

 • சென்னை ஐ.பி.எல்., அணியின் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி (ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • 44-வது தேசிய சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்கள் இடையேயான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கஸிமா (தமிழகம்), மற்றும் சப்-ஜூனியர் மகளிர் ஒற்றையர் பிரிவில் ராதிகா (தமிழகம்) வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ரூ.24,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக அனந்த் குமார் (நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிளக்ஸி கட்டணம் (flexi fare scheme)  மூலமாக 2017ம் ஆண்டு நவம்பர் வரை ரூ.671 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ராஜன் கோகெய்ன் (மத்திய ரயில்வே இணை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி வரும் நிதி ஆண்டில் 63 கோடி டன்னாக அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • நடப்பு நிதி ஆண்டான 2017-18ல் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதம் குறையும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 • சேமிப்புக் கணக்கு பராமரிக்க வேண்டிய குறைந்த பட்ச சராசரி இருப்புத் தொகையை மேலும் குறைக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளதாக பிரவீன் குப்தா (நிர்வாக இயக்குநர்) தெரிவித்துள்ளார்.

 

 • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி முதல் தொடங்குகிறது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • ஜப்பானின் விவசாயிகள் தோலையும் சேர்த்து சாப்பிடக்கூடிய “மோங்கே” என்ற வாழைப் பழத்தை உருவாக்கியுள்ளனர்.

 

 • இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின்  மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப் நிறுவனம் (ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனி) தெரிவித்துள்ளது.

 

 • எலியின் உடலில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தினை இண்டியானா (அமெரிக்கா) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டையின் அளவு குறைந்து வருவதாக நாசா (அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்) தெரிவித்துள்ளது.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம் 

 

 • பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 115 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் (சுகாதாரம், கல்வி, அடிப்படை உள் கட்டமைப்பு, விவசாயம், நீர் மற்றும் நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் பின்தங்கியோரை மேம்படுத்துவதற்கான முயற்சி) மேற்கொள்ள இருக்கிறார்.

 

ஒப்பந்தம்

 

 • வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், இந்தோனேஷியாவும் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • Tamil Nadu(TN) has emerged as the leader in the country in terms of Gross Enrolment Ratio (GER) in higher education

 

 • The West Bengal Government has launched its official emblem in a programme at Nabanna two days after getting the approval from the Central Government.

 

 • The News Delhi World Book Fair (NDWBF) which has emerged as one of the most significant events in the publishing world will be held in the capital during January 6 -14 at Pragati Maidan

 

 • Shri Suresh Prabhu, Union Minister for commerce and Industry will chair the 3rd meeting of the council for Trade Development and promotion(CTDP) at Vigyan Bhawan in New Delhi

 

 • Nitin Gadkari, Union Minister of Road Transport & Highways in Singapore to inaugurate the ASEAN-India Pravasi  Bharatiya Divas on 6th January.

 

 • Goa will be hosting the third edition of the Science film festival of India between January 16 – 19

 

International News

 

 • The US has placed Pakistan on a ‘special watch list’ for severe violations of religious freedom.

 

Business

 

 • The Reserve Bank of India (RBI) will shortly introduce new Rs.10 currency notes under the Mahatma Gandhi series.

 

 • The advance estimates of the GDP growth stood at 6.5% for the current fiscal FY18, according to the Central Statistics Office (CSO)

 

Sports

 

 • The Meghalaya Government the Indian Olympic Association(IOA) and the Meghalaya State Olympic Association has signed the host city contract to hold the 39th National Games in the State in 2022.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube