January 03

Date:03 Jan, 2018

January 03

 

We Shine Daily News

ஜனவரி 3

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • பிரம்மபுத்திரா நதி நீரை திசை மாற்றும் நோக்கத்தில் சீனா தற்போது 1000 கி.மீ சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை செயல் படுத்திவுள்ளது

 

 • குதிரைகளுக்கு பிறந்த நாள்(ஜனவரி 01) கொண்டாடும் நாடுஇங்கிலாந்து 

 

 • ஜெர்மனியில், டுவிட்டர், கூகுள், பேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய மற்றும் வெறுப்பூட்டும் பகுதிகளை நீக்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது

 

 • சுவிட்சர்லாந்தின் கடந்த 84 ஆண்டுகள் வரலாற்றில் மிக இளம் வயதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் – அலன் பெர்சட் 

 

 • சுவிட்சர்லாந்தில் C குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும், மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவோர், குற்றவாளிகளுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது

 

 • டச்சு நாட்டு விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான டூ 70யும், ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் என்ற இணையதள ஆய்வு நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இதில் பயணிகள் விமான விபத்து இல்லாத பாதுகாப்பான ஆண்டாக 2017ம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. 

 

 • முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 29வது(2017) இடத்தில் உள்ளது. துருக்கி, சைபரஸ் முதலிடத்தில்(1926) உள்ளது

 

 • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முதல் முறையாக அரசுமுறைப் பயணமாக சீனா செல்ல உள்ளார்

 

 • உலகம் முழுவதும் 2018 புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளள்ளதாக ‘யுனிசெப்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தில்(69,070 குழந்தைகள்) உள்ளது. சீனா(44,760) மற்றும் நைஜிரியா(20,210) 2, 3 வது இடத்தில் உள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • உள்நாட்டு பாதுகாப்புக்கு என ரூ.10,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஹன்ஸ்ராஜ் அஹிர் (மத்திய உள்துறை இணை அமைச்சர்) தெரிவித்துள்ளார்

 

 • தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் படி நாள் ஒன்றுக்கு உள்ளுர் பயணிகள் 40000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்(வெளிநாட்டவருக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை) இத்திட்டம் ஜனவரி 20ம் தேதி செயல்படுத்தப்படுகிறது

 

 • ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் மூலம் பால் விநியோகம் செய்ய பரிசலிக்க வேண்டும் என்று மாநில அரசை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது

 

 • அரசு ஊழியர்கள் இரத்த தானம் செய்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 • தமிழகத்தில் பதிவுத்துறையில் நிலுவை நிலையில் உள்ள பத்திரங்களுக்கு தீர்வு காண அறிவிக்கப்பட்ட ‘சமாதான் திட்டம்’ இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

 

 • பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது

 

 • அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது

 

 • மத்திய அரசு 2017ம் ஆண்டில் மட்டும் 4,842 தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்துள்ளது 

 

 • பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் அவசர உதவி பட்டன் செயல்படுத்தும் திட்டம் ஜனவரி 26ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப் படுகிறது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • அரபு நாடுகளில் 2017ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரராக எகிப்து கால்பந்து அணி வீரர் முகமது சாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 9 விளையாட்டு வீரர்களுக்கும், பயற்சியாளர்களுக்கும்(5 பேர்) ஊக்கத்தொகையை(ரூ.99 லட்சம்) முதல்வர் பழனிச்சாமி வழங்கினார் 

 

 • பெங்களுரு அணியின் பவுலிங் பயிற்சியாளராக நெஹராவும், பேட்டிங் பயிற்சியாளராக கிறிஸ்டினும் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், சூரியனில் ஆய்வு நடத்துவதற்காக ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது

 

 • விண்வெளியில் கண்டறியப்பட்ட நுண்ணுயிரி முதன் முதலாக விண்வெளியிலே, மின்யான் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டது

 

 • அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்

 

 

புதிய நியமனம்

 

 • அசாம், உல்பா பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் பிரதிநிதியாக ஏ.பி. மாத்தூர்(மாஜி உளவுத் துறை செயலர்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • இன்போசிஸ் தலைமை நிர்வாகியாக சலீல் பரேக் பொறுப்பேற்றார்

 

 • கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக டி.எச்.வகேலா(ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ராஜேந்திர் கண்ணா(முன்னாள் ரா உளவுத் துறை தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ஆங்கிலேயர் காலத்தில் அச்சடிக்கப்பட்ட, குறைந்த காலம் மட்டுமே புழக்கத்தில் இருந்த 2.5 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு(1918) 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது 

 

 • வங்கிக் கடனைத் திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் ‘திவால் சட்டத் திருத்த மசோதா’ மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது

 

 • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வங்கிகளிலும் கழிப்பறை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

 

 • 2017 டிசம்பர் மாதத்தில் இந்திய தயாரிப்பு துறையில் ‘நிக்கி இந்தியா எம்.பி.எம்’. குறியீடு 54.7 புள்ளிகள் உயர்ந்துள்ளது 

 

 • எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச தொகை இல்லாத சேமிப்பு கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தின் மூலம் ரூ.1,772 கோடி வருவாய் ஈட்டியுள்ளது

 

 • உலகத்திலேயே காட்சிப் பதிவுகளை இரு மடங்கு துல்லியமாய் காண்பிக்கும் 8K OLED திரையினை அறிமுகம் செய்யவுள்ளதாக LG நிறுவனம் அறிவித்துள்ளது

 

 

English Current Affairs 

 

National News

 

 • Union Minister for women and child development Maneka Gandhi launched a web portal, NARI which will provide information on all government schemes for women.

 

 • The Haryana tourism department disclosed that Uttar Pradesh would be the theme state for the 32nd Surajkund International crafts Mela, which would be organized at Surajkund Faridabad from Feb 2 to 15

 

 • Jharkhand CM launched “Saubhagya Yojana” a programme that would provide electricity to all the 29, 376 villages in the state.

 

 • The Animal Husbandry department of Gujarat government has banned all voluntary animal care and non-government organizations working under the ‘Karuna Abhiyan’ to operate in residential areas during the Uttarayan festival this year.

 

 • The Assamese and Manipuri language versions of Prime Minister’s official website pmindia.gov in were launched

 

International News

 

 • Saudi Arabia and United Arab Emirates (UAE) introduced value added tax. These are the first two countries in the Gulf which have introduced the VAT system.

 

Banking and Finance

 

 • HDFC Bank announced a partnership with Rajasthan Government to promote and nurture startups in the state.

 

 • No charges on debit card transaction charges for payments through debit card BHIM app and other payment Made for up to 2,000 from Jan 1, 2018.

 

Economy

 

 • Parliament has passed the National Bank for Agriculture and Rural Development Amendment Bill. The Bill allows the central government to increase the authorized capital of the Bank from 5 thousand crore rupees to 30 thousand crore

 

 • Reliance Industries Limited has successfully commissioned its refinery off-gas cracker (ROGC) complex of 1.5 million tonnes per annum (MTPA) capacity along with downstream plants and utilities in Jamnagar, Gujarat.

 

Sports

 

 • Sathiyan has surpassed the legendary Sharath kama to become India’s highest ranked player in the International Table Tennis Federation (ITTF) rankings.

 

Obituary

 

 • Eminent Urdu poet Anwar Jalapuri passes away at 71

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube