February 28

Date:28 Feb, 2017

February 28

We Shine Daily News

jkpo;

gpg;uthp 28

தேசிய செய்திகள் :

28-2-17 inda

 • மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கையின் படி ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியினை இந்திய ரயில்வே உணவுக்கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) மீண்டும் கையில் எடுக்க உள்ளது. இந்த புதிய கொள்கையை ரயில்வே துறை அமைச்சகம் சுரேஷ் பாபு அறிமுகப்படுத்தினார்.

 

 • இந்திய கடற்படையில் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விராட் கப்பல் மார்ச் 6ம்தேதி ஓய்வு பெற உள்ளதாக துணைத் தளபதி கிரீஷ் லுத்ரா தெரிவித்துள்ளார். ஐஎன்எஸ் விராட் கப்பல் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகாலம் சேவையாற்றியுள்ளது.     அதற்குமுன் பிரிட்டன் கடற்படையில் 27 ஆண்டுகள் இருந்தது. 1987ம் ஆண்டு முதல்நமது கடற்படையில் ஐஎன்எஸ் விராட் கப்பல் இணைக்கப்பட்டது.

 

 • பெங்களுரிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் சொகுசு வசதி கொண்ட (ராஜ ஹம்சா) புதிய பேருந்து சேவை மார்ச் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

 • கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஜாட்சமூக போராட்டக் குழுவினர் ஹரியானா அரசுக்கு எதிராக வரும் மார்ச் 1ம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

 • முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.சிவசங்கர் பிப்ரவரி 27ல் காலமானார். இவர் பிளவுபடாத ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 1980ல் எரிசக்தித் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

 

 • சென்னை தாம்பரம் விமானப்படை விழாவில் 25வது ஹெலிகாப்டர் படைபிரிவு மெக்கானிக்கல் பயிற்சி பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மார்ச் 3ல் சென்னை வருகிறார்.

 

 • ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிப்பதற்காக ஏர்டெல் நிறுவனம் கால் மற்றும் டேட்டாவுக்கான உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யவுள்ளது.

 

 • தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு ‘ஹைட்ரோ கார்பன்’ எடுப்பது விவசாயத்தையோ நிலத்தையோ பாதிக்காது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது.

 

 • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள். கண்ணிவெடிகள் ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்காக விரைவில் ‘ரோபோ படை’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

28-2-17 world

 • சூரியனுக்கு அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வுமையம் (நாஸா) திட்டமிட்டுள்ளது. சூரியனை நோக்கிய முதல் ஆய்வு இது. இதுவரை இல்லாத அளவு சூரியனுக்கு நெருக்கத்தில் சென்று மேற்கொள்ளவிருக்கும் இந்த ஆய்வில் அந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை தருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என நாஸா விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியன் கூறியுள்ளார்.

 

 • அமெரிக்க கடற்படை அமைச்சர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட பிலிப் பெல்டன் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பதவியை ஏற்க மறுத்துள்ளார்.

 

 • ஈரான் ‘விலாயத் 95’ என்ற பெயரில் தெற்கு கடல்பகுதியில் நிகழ்த்தப்பட்ட கடற்படைப் போர் பயிற்சியின்போது ‘நாஸர்’ என்ற ‘குரூஸ்’ வகை ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹ_சேன் டெக்ஹான் கூறியுள்ளார்.

 

 • ஆஸ்கர் விருதுக்காக 14 பிரிவுகளில் போட்டியிட்ட லாலேண்ட் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுகளை வென்றது. 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள டால்ஃபி தியேட்டரில் பிப்ரவரி-27 அன்று 5.30 மணிக்கு நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
  சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது மூன்லைட் படத்துக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது எம்மோஸ்டானுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது டெமின் கேஸிலிஸ்கும், சிறந்த பாடலுக்கான விருது சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ்க்கும், சிறந்த பிண்ணனி இசைக்கான விருது ஜஸ்டின் ஹார்விட்ஸ்க்கும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது லீனஸ் சான்ட்கிரீன்கும், சிறந்த காட்சிவடிவமைப்புக்கான விருது டேவிட் வாஸ்கோ, சாண்டி ரொனால்ட்சுக்கும் கிடைத்தது.

 

 • பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு ஹாலிவுட் திரைப்படத்துறைக்கு அவராற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் சிறப்பு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. 1960 ஆண்டுகளிலிருந்து நடித்து வரும் ஜாக்கிசான் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

 • இந்த ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான விருது மஹர்செலா அலிக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற முதல் முஸ்லிம் நடிகர் என்ற பெருமையை பெறுகிறார்.

 

 • சவுதி அரேபியாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனமான அரம்கோ, மலேசியாவில் சிங்கப்பூர் எல்லையை ஒட்டிய பகுதியில் அமையவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

 

 • சீனாவின் மூத்த தூதரக அதிகாரியான யாங் ஜூச்சி 2நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின் சீனாவின் உயரதிகாரி அமெரிக்கா சென்றிருப்பது இதுவே முதல் முறை.

 

விளையாட்டுச் செய்திகள் :

28-2-17 sports

 • உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆடவர் டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் அங்குர் டட்டெல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

 • திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற மாநிலஅளவிலான வாலிபால் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • டெல்லியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எப் உலககோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.

 

 • இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2016ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • பல்கேரியாவின் சோபியா நகரில் 68வது ஸ்டிரன்ட்ஜா நினைவு கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் முகமது ஹஸ்ஷமுதின் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

28-2-17 econo

 • பணப்பரிமாற்ற செயலியான பேடிஎம் வாலெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தொட்டுள்ளது.

 

 • ஸ்பெயினின் தலைநகர் பார்சிலோனாவில் சர்வதேச மொபைல் போன் மாநாடு நடைபெற்ற வருகிறது. நோக்கியோ நிறுவனம் தனது பிரபலமான 3310 மாடல் செல்போனை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 என்ற ஸ்மார்ட்போன்களையும் 3310 எனும் பிரபல கீபோர்ட் செல்போன்களையும் காட்சிப்படுத்தியுள்ளது.

 

 • தென்னிந்தியாவில் தனியார் வங்கியில் முன்னணியில் திகழும் லட்சுமி விலாஸ் வங்கியும் சொத்து நிர்வாகத்தில் முன்னணியில் உள்ள சென்ட்ரமும் குழுமமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

 

Call Now