February 27

Date:28 Feb, 2017

February 27

We Shine Daily News

jkpo;

gpg;uthp 27

தேசிய செய்திகள் :

27-2-17 indiaa

 • விவசாயிகளின் கடின உழைப்பில் உண தானிய உற்பத்தி அதிகரித்து உள்ளதாகவும் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும் 29வது ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

 

 • ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஆண்டு தற்கொலை செய்ததை தொடர்ந்து என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்க அனைத்து இந்திய தொழில் நுட்பக்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

 

 • ரெயில்வே அமைச்சகம் ‘ரெயில் 2018’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இது மணிக்கு அதிகபட்சம் 160கிமீ வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் திட்டமாகும்.

 

 • திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் 970கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டது. அதற்கான சான்றை வங்கி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரியிடம் வழங்கினர்.

 

 • ராஜஸ்தானில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருப்பவர் மணன் சதுர்வேதி. இவர் குழந்தைகளின் நலனுக்காக 24 மணிநேரத்தில் 50 ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். எந்த ஓர் இடைவேளையும் இல்லாமல் தொடர்ந்து 24மணி நேரம் ஓவியம் வரைந்து இதுவரை 14 இடங்களில் சாதனை படைத்துள்ளார். அவரது சாதனைக்கான 15வது நகரம் அஜ்மீர் ஆகும்.

 

 • மத்திய மந்திரி கிரெண் ரிஜிஜூ தேசியவாதத்தினை வரையறுக்க ஒருவருக்கும் முழு உரிமை இல்லை. ஆனால் இந்தியாவை உடைக்க விரும்பும் எவரும் அப்சல்குரு மற்றும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் தேசதுரோகிகள் என கூறினார்.

 

 • நாடு முழுவதும் ஒரே சீரான மறைமுக வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசால் ஜிஎஸ்டி என்னும் சரக்கு சேவை திட்டம் இயற்றப்பட்டது. இந்த சரக்குசேவை வரி கவுன்சில் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் வரிவிதிப்பு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதால் பிரதமர் மோடி நேரடியாக சுமூகமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.

 

 • கர்நாடக மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் வணிக நலன்களுக்காக பெண்களின் கருப்பைகளை எந்தவித முறையான மருத்துவ காரணங்களுமின்றியே அகற்றியுள்ளதால் 4 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. 30 மாதங்களில் 2258 கருப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை, நாட்டிலேயே பணக்கார நகரம் என “நியூவேர்ல்டு வெல்த்” எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு அடுத்து தில்லி 2வது இடத்திலும், பெங்களுரு 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவிலுள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.360 லட்சம் கோடி. இந்தியாவில் 264000 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

 

 • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாட்டுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சானாவை சந்தித்து பேசினார். அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு டிரம்பின் இந்திய தூதரின் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. புதிய குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் பரீசிலிக்கப்படுகிறது.

 

 • திருமலையில் பக்தர்கள் தாங்கள் விரும்பும் தேதியில் அன்னதானம் செய்யும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

27-2-17 world

 • சிரியாவின் ஒயிட் ஹெல்மெல்ட்ஸ் என்றழைக்கப்படுகிற சிவில் ராணுவக்குழு பற்றிய ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஏற்படும் இரவு விருந்து இந்த வருடம் ஏப்ரல்-29ல் நடக்க உள்ளது. இவ்விருந்தில் கலந்து கொள்ள டிரம்ப் மறுத்து தெரிவித்தார்.

 

 • வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் கொலை செய்யப்பட்ட கோலாலம்பூர் விமானநிலையம் பயணத்துக்கு பாதுகாப்பானது. அங்கு ரசாயன ஆயுதம் ஏதும் இல்லை என மலேசியா உறுதியாக அறிவித்துள்ளது.

 

 • கடந்த 2013ம் ஆண்டில் கூகுளின் தானியங்கி கார் திட்டத்தின் நட்சத்திர இன்ஜினியராக போற்றப்பட்ட அந்தோனி லெவன் டோஸ்கி தற்போது கூகுளில் முதல் எதிரியாகப் கருதப்படுகிறார். வேமோ நிறுவன தானியங்கி கார்திட்ட தொழில்நுட்பம் தொடர்பான 14000 பக்க ரகசிய ஆவணங்களை அந்தோனி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்க அரசியல் சாசனத்தை மீறும் வகையில் முன்னாள் அதிபர் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்வேhம் என அந்நாட்டு துணை அதிபர் மைக்பென்ஸ் கூறினார்.

 

 • ஈரான் எல்லையொட்டிய கடற்பகுதியில் ஈரான் கடற்பகுதியைச் சேர்ந்த கப்பல்கள் போர் பயிற்சியை தொடங்குகிறது. ஈரான் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஹபீபுல்லா சய்யாரியை மேற்கொள் காட்டி ஈரான் அரசு தொலைக்காட்சி இச்செய்தியை வெளியிட்டது.

 

விளையாட்டுச் செய்திகள் :

27-2-17 sports

 • விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டோனியின் சதத்தால் ஜார்கண்ட் அணி சத்தீஸ்கருக்கு எதிராக வெற்றி கண்டது.

 

 • டியூட்டி ப்ரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுவினா ஸ்விடோலினா (உக்ரைன்)- கரோலினா வோஸ்னியாக்கி இடையிலான போட்டியில் விடோலினா மகுடம் சூடினார். அவர் வென்ற 6வது பட்டம் இதுவாகும்.

 

 • ஹாக்கி இந்தியாலீக் போட்டியில் கலிங்கா லேன்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஆடவர் 56கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் முகமது ஹ_ஸாமுதீன் வெள்ளிப்பதக்கம் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்திலுள்ளார். பேட்டிங்கில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் உள்ளார்.

 

 • ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது.

 

 • 6 அணிகள் இடையிலான 5வது ஆக்கி இந்தியா லீக் தொடரில் மும்பையை வீழ்த்தி கலிங்கா ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

27-2-17eco

 • நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் ஐந்து துணை வங்கிகள் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் உலகின் மிகப்பெரிய 50 வங்கிகளின் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி இடம்பெறும்.
  பட்டியாலா ஸ்டேட் வங்கியானது பட்டியாலா சமஸ்தான அரசர் பூபிந்தர் சிங்கால் 1917ல் தொடங்கப்பட்டது.
  பாங்க் ஆஃப் மைசூர் 1913ல் மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ் உடையாரால் தொடங்கப்பட்டது.
  பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், பாங்க் ஆப் பீகாணீர் ஆகிய 2 வங்கிகளும் 1943ல் தொடங்கப்பட்டவை.
  ஹைதராபாத் ஸ்டேட் வங்கியானது ஹைதராபாத் சமஸ்தானத்தின் ரிசர்வ் வங்கியாக 1941ல் தொடங்கப்பட்டது.
  ஸ்டேட் பாங் ஆஃப் திருவாங்கூர் 1945ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மத்திய வங்கியால் திவான் சர்.சி.பி ராமஸ்வாமி ஐயரால் தொடங்கப்பட்டது.

 

 • கோவையில் திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

 

 • அனைத்து மக்களும் முறையாக வரியை செலுத்தும் பட்சத்தில் வரி விகிதத்தை குறைக்க முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

 • எல் அண்ட் டி ஹைட்ரோகர்பன் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ 1100 கோடி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அசாம் மாநிலத்திலுள்ள போன்கைகோன் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Call Now