February 26

Date:27 Feb, 2017

February 26

We Shine Daily News

jkpo;

gpg;uthp 26

தேசிய செய்திகள் :

26-2-17 india

 • இந்தியா தனது சொந்த நலனுக்காக காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை கைவிட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹசைன் தெரிவித்துள்ளார்.

 

 • தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிக்கும் வரை நான் தமிழன் அல்ல என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறினார்.

 

 • இந்தியாவில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது வாட்ஸ்அப்பில் இனிநம் status களை யார் யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. வாட்ஸ் அப் status களாக படங்கள், வீடியோ, GIFsபோன்றவை வைக்கலாம்.

 

 • இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் ‘ஸ்டென்ட்’ உபகரணத்தின் விலை கடந்த வாரம் அதிரடியாகக் குறைக்கப்பட்டதால் அந்த உபகரணத்துக்காக நோயாளிகளிடம் கூடுதலாக வசூலித்த தொகையை மருத்துவமனைகள் திருப்பித்தர வேண்டும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 • தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 3 நாள் பயணமாக பிப்ரவரி- 26 ல் தில்லி செல்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.

 

 • முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் பிப்ரவரி 27, 28 ஆகிய நாள்களில் தில்லியில் நடைபெறவுள்ளது.

 

 • ‘நமது பாரம்பரியம்’ என்ற திட்டத்தின் கீழ் கலாசார நல்லிணக்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்.

 

 • கங்கை நதியை பாதுகாப்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவருமான நிதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

 

 • சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக இறக்குமதியாகும் பல அபாயகரமான பொருள்களில் பட்டையைப் போன்றே இருக்கும் காஸியாகவும் உள்ளது. இந்த காஸியா மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான பொருள்.

 

பன்னாட்டு செய்திகள் :

26-2-17 world

 • சிரியாவின் ஹோம்ஸ் நகரில் 2 ராணுவ மையங்கள் மீது பிப்ரவரி 25ல் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்களில் 42 பேர் உயிரிழந்தனர்.

 

 • ஜனவரி மாதம் பாகிஸ்தானில் இருந்து சவூதி அரேபியாவின் மதீனாவுக்கு பயணித்த பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில பயணிகள் நின்று கொண்டே பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 • இந்திய எல்லைக்குள் நுழைய முயன்று சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய பெண் ரஷ{தா பீபீ(53) மனநிலை பாதிக்கப்பட்டவர் என பாகிஸ்தானின் டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

 • தவறிழைக்கும் நபர்கள் தங்கியிருக்க அனுமதிக்கும் அளவுக்கு பிரிட்டனில் ஜனநாயகம் தாராளமாக உள்ளது என மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

 

 • ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிரியாவின் உள்நாட்டுப் போர் பற்றிய படத்தில் வெள்ளைத் தலைக்கவசம் என்ற படம் ஒளிப்பதிவாளர் காலித் கதீப்புக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் இவர் அமெரிக்காவுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

 

 • சீனாவில் ஹெனான் கிழக்கு ரயில்வே நிலையத்தில் ரோந்து பணிக்கு இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திர மனித போலீஸ் அங்கு மூண்ட சிறு தீயைக் கண்டறிந்தது.

 

விளையாட்டுச் செய்திகள் :

26-2-17 sports

 • இந்திய மண்ணில் 4502 நாட்களுக்கு பிறகு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி கிட்டியுள்ளது. இந்தியாவை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது.

 

 • நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

 • விஜய்ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

 

 • தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் தேசிய சீனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிப்ரவரி -26ல் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் 34 அணிகளை சேர்ந்த 600 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

 

 • திருச்சி பிஷப் ஹ_பர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

26-2-17 econ

 • ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ 23 ஆயிரத்தை நெருங்குகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், பங்குச் சந்தையில் வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் தங்கம், வெள்ளியின் விலை ஒரு சில நாள்களாக அதிகரித்து விற்பனையாகிறது.

 

 • மும்பை பங்குச்சந்தையில் ஐந்தாவது வாரமாக முன்னேற்றம் காணப்பட்டு சென்செக்ஸ் 424 புள்ளிகள் அதிகரித்தது.

 

 • டாக்சி சேவை தொடங்கும் திட்டம் எதுவும் தங்கள் நிறுவனத்திற்கு இல்லை என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டவட்டமாக கூறியது.

 

 • இந்தியா ஃபர்ஸ்ட் ஆயுள் காப்பீடு நிறுவனம் நடப்பு நிதியாண்டில் பிரீமியம் வருவாயாக ரூ 2000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான ஆர்.எம்.விசாகா தெரிவித்தார்.

 

நியமனச் செய்திகள்: 

26-2-17 appoint

 • ஆந்திர மாநில அரசின் துணைஆட்சியராக பிரபல பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

Call Now