February 25

Date:27 Feb, 2017

February 25

We Shine Daily News

jkpo;

gpg;uthp 25

தேசிய செய்திகள் :

25-2-17 india

 • இந்தியா – இஸ்ரேல் நாடுகளுக்கிடையே ரூ.17000 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய ஏவுகணை ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும், இஸ்ரேல் ராணுவ விமானத் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து ஏவுகணையை வடிவமைக்க உள்ளன. இந்தியா – இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

 

 • ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ் (பி.எம்.ஜி.கே.ஒய்) கணக்கில் காட்டப்படாத பணத்தை டெபாசிட் தொகையாக பெற மறுக்கும் வங்கி கிளைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மத்தியஅரசு எச்சரித்துள்ளது.

 

 • தத்தெடுத்தல் தொடர்பான வழக்குகள் பெருமளவில் நிலுவையில் உள்ளதால் சிக்கலான சட்ட விதிகளைத் தளர்த்த வேண்டுமென மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

 • குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மார்ச் 2ம் தேதி சென்னைக்கு வருகிறார். சென்னை தாம்பரத்தில் பயிற்சி முடித்த இந்திய விமானப்படை வீரர்களின் நிகழ்வில் மார்ச் 3ம் தேதி பங்கேற்ற பிறகு தில்லி திரும்புகிறார்.

 

 • பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி மற்றும் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள் ஆகியவற்றை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டுமென மத்திய பள்ளிக் கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

 

 • கோவை அருகே வெள்ளங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு பிப்ரவரி -24 பிரமாண்ட இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 

 • காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பிப்ரவரி -23 அதிகாலையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகள் உள்பட 3 ராணுவ வீரர்கள் விரமரணம் அடைந்தனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

25-2-17 world

 • ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தினரிடமிருந்து மொசூல் நகரின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே ஈராக் படைகள் மீட்டனர். தற்போது மேற்கு பகுதியை முழுமையாக மீட்க கடும்சண்டையிட்டு வருகின்றன.

 

 • இலங்கையில் ராணுவப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் நிலங்களை அரசு உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தினார்.

 

 • இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் பிறநாட்டுக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார்.

 

 • இந்தியா – பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தலையிடும் எண்ணம் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செயல்படுத்தப்பட்டு வரும் சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் குறித்த கவலைகளுக்கு சீனா விளக்கமளித்துள்ளது.

 

 • உலகின் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ச்அப்பில் தற்போது புதிதாக ‘ஸ்டேட்டஸ்’ எனும் மேம்படுத்தப்பட்ட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனாளர்கள் ‘ஸ்டேட்டஸ்’ வசதியை பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் ஜிஐஎஃப் படங்களை தமது ஸ்டேட்டஸாக வைத்துக் கொள்ள முடியும்.

 

 • பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றும் லைவ் வீடியோவில் கூட 20 நொடி விளம்பர இடைவேளை ஓடும் என பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 • தகவல் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவில் திறமைகளை சீனா பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்சியம் காட்டி தவறிழைத்து விட்டது என சீன அரசிதழான ‘குளோபல் டைம்ஸ்’ கூறியுள்ளது.

 

 • அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக வசித்து வருபவர்களை ராணுவத்தின் உதவியுடன் பலவந்தமாக வெளியேற்ற மாட்டோம் என அமெரிக்க உள்துறை அமைச்சர் ஜான் கெல்லி கூறினார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

25-2-17 sports

 • சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் மகளிர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பூஜா கட்கர் வெண்கலம் வென்றார்.

 

 • துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • தமிழக வாள்வீச்சு வீராங்கனையான சி.ஏ.பவானி தேவிக்கு பிரான்சில் நடந்த உலககோப்பை போட்டி சிமக்சிகோவில் நடந்த கிராண்ட்ப்ரீ போட்டிகளில் பங்கேற்றதற்கான செலவுதொகையை ரூ 5.43 லட்சம் காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்தார்.

 

 • புணேவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதமடித்துள்ளார்.

 

 • சூப்பர் மிடில்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங்குடன் மோத சீன வீரரான ஜீல்பிகர் மைமைடியாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

25-2-17 econo

 • இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக ஐஎம்எப் (சர்வதேச செலவாணி நிதியம்) உயரதிகாரி பால் ஏ கேஷின் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டாலும் இந்தியாவில் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்தார்.

 

 • கொரியாவை சேர்ந்த ஹ_ண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 8 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஒய்.கே.கூ தெரிவித்தார்.

 

 • ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவின் துணைவங்கிகள் ஏப்ரல் 1ம்தேதி முதல் இணை இந்திய வங்கிகளுடன் இணைகிறது. வரலாற்றில் மிகப்பெரிய இணைப்பு இதுவாகும்.

 

 • குஜராத்தின் விட்டலபூர் பகுதியில் ஹோண்டா நிறுவனத்தின் கார்களை உருவாக்கும் புதிய அசெம்பிளி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவன தலைமை நிர்வாகி யோசி ரோ ஊனோ தெரிவித்தார்.

 

 • சோழமண்டலம் எம்.எஸ்.பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டு திட்டங்களை நிறுவன முகவராக விற்பனை செய்வது தொடர்பாக பொதுத்துறையைச் சேர்ந்த ஓரியண்டல் வர்த்தக வங்கியுடன் உடன்படிக்கை கையெழுத்தானது.

 

 • துபையில் பிப்ரவரி -26ல் தொடங்கவுள்ள ‘வளைகுடா உணவுத் திருவிழா 2017’ ல் இந்தியாவைச் சேர்ந்த 64 உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும்.

 

Call Now