February 24

Date:27 Feb, 2017

February 24

We Shine Daily News

jkpo;

gpg;uthp 24

தேசிய செய்திகள் :

24-2-17 indiaaa

 • நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேடு கேரளாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

 

 • சர்வதேச எல்லையில் 33வது பட்டாலியனைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பெண்ணை சுட்டுக் கொன்றனர்.

 

 • 2017- 18ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் மார்ச் 15ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பெங்களுரு விமான சௌதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

 • நாடு முழுவதும் உள்ள கேந்த்ரிய வித்யாலயாவில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

 

 • கருப்புப் பணத்தை மாற்றும் பொருட்டு அதிகளவில் ரொக்கப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

 

 • தமிழக சட்டப் பேரவையில் ஆளும் அதிமுகவிற்கு உண்மையிலேயே பெரும்பான்மை உள்ளதா என அறிய ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 • 2016ம் ஆண்டுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தில்லி தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

 

பன்னாட்டு செய்திகள் :

24-2-17 india

 • சூரிய குடும்பத்துக்கு அப்பால் பூமியைப் போன்ற 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றில் வேற்றுகிரகவாசிகள் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா அறிவித்துள்ளது.

 

 • இந்தியாவுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி 5 நாள் அரசுமுறை பயணமாக லண்டன் இந்திய பொருளாதார பள்ளியில் பங்கேற்பதாக பிப்ரவரி-24 இன்று இங்கிலாந்து செல்கிறார்.

 

 • உலக அளவில் இந்தியர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 • நோபல் பரிசுப் பெற்ற அமெரிக்க பொருளாதார மேதை கென்னத் ஜே ஆரோ தனது 95வது வயதில் காலமானார். பொருளாதாரத்துக்காக மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை கொண்டவர். சந்தை அபாயங்கள், புத்தாக்கம், சந்தை அடிப்படைக் கணிதவியல் ஆகியவை குறித்து கோட்பாடுகளை உருவாக்கியுள்ளார். 1772ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

 

 • அமெரிக்கப் பள்ளிகளில் திருநங்கை மாணவர்கள் ஆண் -பெண் கழிப்பறைகளையும் பொருள் வைக்கும் அறைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒபாமா அரசாணையை அதிபர் டிரம்ப் ரத்துசெய்து உத்தரவிட்டார்.

 

 • இருநாள் பயணமாக வங்கதேசத்துக்கு சென்ற இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய் சங்கர் தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

24-2-17 sports

 • இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி -23ல் தொடங்கியது.

 

 • சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 10வது இடத்தில் உள்ளார். பி.வி.சிந்து 5வது இடத்தில் உள்ளார்.
  சையத் மோடி கோப்பையை கைப்பற்றிய இந்திய வீரர் சமீர்வர்மா 23வது இடத்திலும், அஜய் ஜெயராம் 19வது இடத்திலும் உள்ளார்.

 

 • ஆசிய கண்டத்தில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ரென்ஷா படைத்தார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

24-2-17econo

 • நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், டெலிநார் இந்தியா நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. டெலிநார் நார்வே நாட்டு நிறுவனம் 5 கோடி வாடிக்கையாளர்கள் டெலிநாருக்கு உள்ளனர்.

 

 • டாடா மோட்டார்ஸ் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 • பொதுமக்களின் சேமிப்புக்கான நடப்பு நிதியாண்டின் கடைசி வாய்ப்பாக தங்கப் பத்திரம் விற்பனை பிப்ரவரி -27ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட தங்கபத்திரங்கள் விற்பனையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 • ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.22592க்கு விற்பனையானது.

 

 • நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி ஜனவரி மாதத்தில் 27% அதிகரித்தது.

 

நியமனச் செய்திகள்: 

24 shil

 • பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்ட விளம்பர தூதராக நடிகை ஷில்பா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

Call Now