February 23

Date:27 Feb, 2017

February 23

We Shine Daily News

jkpo;

gpg;uthp 23

தேசிய செய்திகள் :

23-2-17 india

 • ரயில் தண்டவாளம் அமைத்தல், மின்தடம் அமைத்தல் ஆகிய உள்கட்டமைப்பு பணிகளை இரட்டிப்பு வேகத்துடன் செயல்படுத்த வேண்டுமென ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மித்தலுக்கு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா வலியுறுத்தினார்.

 

 •  தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘நீதித்துறை சீர்திருத்தங்கள் – தற்கால உலகின் வளர்ச்சி’ என்ற தலைப்பிலான புத்தக வெளியிட்டு விழா பிப்ரவரி -22 ல் நடைபெற்றது. புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பிரணாப் முகர்ஜி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

 

 •  நாட்டில் தற்போது 36 தீர்ப்பாயங்கள் உள்ளன. இந்த தீர்ப்பாயங்கள் வருமானவரி, மின்சாரம், நுகர்வோர் பாதுகாப்பு, நிறுவனங்கள் சட்டம் ரயில்வே விபத்துகள் தொடர்பான விவகாரங்களை கையாண்டு வருகிறது. இதனை 18ஆக பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் மசோதா கொண்டு வரவுள்ளது.

 

 •  தொழிற்சாலைகளில் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் கழிவுநீர் கலப்பதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகவும் அனைத்து தொழிற்சாலைகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.           இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

 

 •  சூரிய ஒளி மின்சார உற்பத்தியை 40ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 •  மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வுக்கு வழிமுறைகள் வகுத்து தருமாறு மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 •  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை தேர்வுசெய்து விருது வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது நெல்லை வண்ணதாசன் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.

 

 •  புதிய 1000ரூபாய் நோட்டு அச்சிடும் திட்டம் இல்லை என மத்திய பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

 

 •  நாகலாந்தின் புதிய முதல்வராக சுரோஜெலி லிட்சு பிப்ரவரி -22 ல் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

23-2-17 head

 • உரிய ஆவணங்களின்றி தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் சுமார் 3லட்சம் இந்தியர்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

 

 •  யேமனில் அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள கடலோர நகரமான மோகா மீது ஹமீது கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் ராணுவத் துணைத்தளபதி அகமது சயீஃப் அல்யாபியி உயிரிழந்தார்.

 

 •  இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு தப்பிவந்த இராக்கின் யாஜிதி இனத்தவர் 1200 பேரையும் அவர்களது குடும்பத்தினரையும் அகதிகளாக ஏற்க கனடா முடிவுசெய்துள்ளது.

 

 •  சோதனைக் குழாய்கள் மூலம் கருத்தரிக்கும் முறைக்கு பாகிஸ்தானின் இஸ்லாமிய நீதிமன்றம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 •  பிரான்சில் தீவிரவாதிகள் ஆளில்லா விமான மூலம் தாக்குதல் நடத்துவதை தடுக்க அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கழுகுக்கு வானில் பறக்கும் ஆளில்லா விமானங்களை பிடிக்கும் பயிற்சியை பிரான்ஸ் விமானபடை அதிகாரிகள் அளித்து வருகிறார்கள்.

 

 •  2030களில் பெண்களின் சராசரி ஆயுள்காலம் 90 வயதை எட்டக்கூடும் என லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வுகுழுவினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  இந்த ஆய்வுகள் 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களது முழு ஆய்வுக்கணிப்பு லான்செட் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

23-2-17 sports

 • ஈரானில் உலக பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக பிப்ரவரி -23ல் நடந்த போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் என அழைக்கப்படும் ஹரீசா துரோணவல்லி அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

 •  அடிலெய்டில் பிப்ரவரி -22ல் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

 

 •  உத்திரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் உத்திரப்பிரதேச விஸார்ட்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

 

 •  மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக மிதாலிராஜ் 2வது இடத்தையும், ஹர்மான்பிரீத் கௌர் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 

 •  17 வயதுக்குள் பட்டோருக்கான இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த லூயிஸ் நோர்டான் டி மத்தோஸ் நியமிக்கப்பட உள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

23-2-17 econo

 • இந்தியாவில் உடனடியாக வாராக்கடன் வங்கி அமைக்க வேண்டியது அவசியம் என தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

 

 •  ர்சர்வ் வங்கியின் நிதியை பொதுத்துறை வங்கிகளின் மறுமுதலீட்டுக்கு அளிப்பது சிறந்த யோசனை அல்ல என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

 

 •  கொரியாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்.ஜி –கே 2017 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தினார்.

 

 •  சூரிய மின்சக்தி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டங்கள் ஆகியவற்றுக்கான திறனை 20000 மெகாவாட்டிலிருந்து 40000 மெகாவாட்டாக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

 

 •  சிங்கப்பூர் சுற்றுலா துறை வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம் என சிங்கப்பூர் சுற்றுலா அமைப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் 7.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Call Now