February 22

Date:27 Feb, 2017

February 22

We Shine Daily News

jkpo;

gpg;uthp 22

தேசிய செய்திகள் :


22twin

 • இந்தியாவில் காற்றில் மாசடைதலும், அபாயகரமான கிருமி நுண்துகள் காற்றில் அதிகரித்துள்ளதும் மரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வுகள் எடுத்துரைக்கிறது. இதனை மறுக்கும் வழியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செல்கிறது.

 

 • சர்வதேச அளவில் கடந்த 2012- 16 வரையிலான 5 ஆண்டுகளில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 • பிப்ரவரி 22ம் தேதி சர்வதேச இரட்டையர் தினம். திருப்பதியிலுள்ள ‘ஸ்பிரிங் டேல்’ தனியார் பள்ளியில் 74 இரட்டையர்கள் கலந்து கொண்டனர்.

 

 • சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த தனது அறிக்கையை ஆளுநர் வித்யாசாகர்ராவ் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

 • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 170 நாள்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் கட்டணம் தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

 

 • நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (ஹெலிபோர்ட்), தேசியத் தலைநகர் தில்லியில் பிப்ரவரி 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. ‘பவான்ஹன்ஸ்’ பொதுத்துறை நிறுவனத்தில் மத்திய விமானப் போக்குவரத்து துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.வடக்கு தில்லியின் ரோஹனி பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவில் பல்வேறு தொழில்களை நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த ஏராளமான பெறு நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 

 • ஜல்லிக்கட்டில் மிருகவதையை உறுதிப்படுத்தும் ஆதாரம் உச்சநீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என ‘பீட்டா’ பிராணிகள் நல அமைப்பின் இந்திய தலைவர் அபூர்வா ஜோஷிபுரா தெரிவித்தார்.

 

பன்னாட்டு செய்திகள் :

22-2-17 india

 • தெற்கு சூடான், நைஜீரியா, சோமாலியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் 14 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக ஐ.நா சபை கூறுகிறது. உள் நாட்டு போர்களும், மோதல்களும் தான் இதற்கு காரணம் என ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் ஜஸ்டின் போர்சித் கூறுகிறார்.

 

 • அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஊழலை கண்டுகொள்ளாமல் விட்டால் ஐ.எஸ் பயங்கரவாதிகளை தோற்றுவிக்க முடியாது என ‘டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல்’ எனும் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எச்.ஆர். மெக் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க ராணுவத்தின் துணை தளபதியாக பதவி வகித்தவர். இராக் போரில் முக்கிய பங்காற்றியவர்.

 

 • இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க இந்தியா சார்பில் 3 தண்ணீர் டாங்கர்கள், 100 மெட்ரிக் டன் அரிசி ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

 

 • லண்டன் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 சிறார்கள் பயங்கரவாதச் செயலுக்கு தயாராதல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வயது 15 முதல் 19 வயது வரையாகும்.

 

 • நெஞ்செரிச்சலுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் சிறுநீரகம் பழுதடையும் என வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் செயிண்ட் லூயிஸ் ஹெல்த்கேர் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

 

விளையாட்டுச் செய்திகள் :

22-2-17 sports

 • 11வது பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் தகுதிசுற்றின் இறுதி போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

 • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் இடம்பிடித்தார்.

 

 • இலங்கை கிரிக்கெட்வீரர் நிரோஷன் திக்வெல்லா அடுத்த 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

 

 • இந்திய குத்துச்சண்டை வீரர்களான திவாகர் பிரசாத், மதன்லால் ஆகியோர் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

 

 • ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் அந்த அமைப்பின் வர்த்தக மற்றும் தொலைக்காட்சிக் குழுவின் தலைவராகவும் அபிஜித்சர்கார் நியமிக்கப்பட்டார்.

 

 • விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தோனி ஜார்கண்ட் அணிக்கும், ஹர்பஜன் பஞ்சாப் அணிக்கும் தலைமை தாங்குகின்றனர்.

 

 • 2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

22-2 eco

 • டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர்கள் நலன் பாதுகாக்கப்படும் என டாடா சன்ஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற என்.சந்திர சேகரன் உறுதியளித்தார்.

 

 • வரும் 2020ம் ஆண்டுக்குள் பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு காணும் என மத்திய பட்டு வாரியத்தின் தலைவர் கே.எம். ஹனுமந்தராயப்பா நம்பிக்கை தெரிவித்தார். சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் சீனா 80மூ பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

 

 • இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, மத்திய அரசின் கொள்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வரும் 2025ம் ஆண்டில் இந்திய பொருளாதார மதிப்பு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கூறினார்.

 

 • டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பீம் செயலியை மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இதுவரை 1.7 கோடி நபர்கள் இதனை தரவிறக்கம் செய்திருப்பதாக நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

 

நியமனச் செய்திகள்: 

 • பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக கே.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

Call Now