February 21

Date:27 Feb, 2017

February 21

We Shine Daily News

jkpo;

gpg;uthp 21

தேசிய செய்திகள் :

21-2-17 india

 • ஒரே நேரத்தில் அதிக செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் தொழில் நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்திருப்பதாக சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.

 

 • தமிழகத்தில் மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

 

 • வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

 

 • விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.

 

 • அணு ஆயுத விபத்துக்கள் குறித்து முன்னெச்சரிக்கை தகவல்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் இந்தியா பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

21-2-17 world

 • விண்வெளிதுறை வர்த்தகத்தில் இந்திய விண்வெளி ஆய்வுமையம் (இஸ்ரோ) முந்திச் செல்கிறது என சீனஅரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

 

 • பூமியிலிருந்து 418கிமீ உயரத்தில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6லட்சத்து 10ஆயிரம் கோடி) மதிப்பில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 • தென்சீனக் கடலில் அமெரிக்காவின் 2 அதிநவீன போர்க்கப்பல்கள் புதிதாக ரோந்து பணியில் இணைந்துள்ளது. இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 • ருவாண்டா அதிபர் பால்ககாமே இந்திய குடியரசுத துணைத் தலைவர் ஹமீது அன்சாரி முன்னிலையில் விமானப் போக்குவரத்து, விசா நடைமுறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை தொடர்பாக 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 • ஐ.நா சபைக்கான ரஷ்ய நாட்டு தூதர் விடாலி சுர்க்கின் நியூயார்க் நகரில் காலமானார்.

 

 • அமெரிக்காவை சேர்ந்த மதபோதகர் பெதுல்லா குலென் நாடுகடத்தல் விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் அதிக புரிதல் மற்றும் உணர்வுபூர்வமுடன் செயல்படும் என துருக்கி தெரிவித்துள்ளது.

 

 • உலகளவில் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவே அதிக ஆயுதங்கள் வாங்குகிறது என ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

 

 • இஸ்ரேல், பாலஸ்தீனம் என இருதனி நாடுகள் அமைவதே அமைதி ஏற்படுவதற்கான சிறந்த வழி என சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங் கூறினார்.

 

 • இராக்கில் உள்ள எண்ணெய் வளத்தைக் காப்பாற்றும் உத்தேசம் அமெரிக்காவுக்கு இல்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்தார்.

 

 • இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருப்பது அவசியம் என சட்டவிதிகள் வகுக்க வேண்டும் என இலங்கை நாட்டு அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

21-2-17 sports

 • ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்சை அதிகபட்சமாக ரூ 14½ கோடிக்கு புணே அணி வாங்கியுள்ளது. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு போன வெளிநாட்டவர் என்ற சிறப்பை பென்ஸ்டோக்ஸ் பெற்றார்.
  இந்தியாவின் யுவராஜ்சிங் 2015ல் ரூ 16 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்சமாகும்.

 

 • ஐபிஎல் தொடரின் 10வது சீசனுக்கான ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இடது கைவேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜனை ரூ 3 கோடிக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

 

 • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷாகித் அப்ரிதி 21 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 • புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆடவர் கபடிப் போட்டியில் அரியலூர் மாவட்ட அணி சாம்பியன் ஆனது.

 

 • கொழும்பில் நடைபெற்ற மகளிர் உலககோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

21-2-17 econo

 • ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி, ஐஆர்சிஓஎன் ஆகிய நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

 

 • பருத்தி துணிகள் விற்பனையை அதிகரிப்பதற்காக காதி என்ற பெயரில் பிராண்டை பேப் இந்தியா நிறுவனம் பிரபலப்படுத்தி வந்தது.
                   பேப் இந்தியா நிறுவனம் தனது பிராண்ட்களில் இருந்து காதி பெயரை விலக்கிக் கொண்டுள்ளது.

 

 • அரசு காப்பீட்டு நிறுவனமான நியூஇந்தியா அஷ்யூரன்ஸ் பிரீமியர் மெடிக்ளெய்ம் என்ற புதிய மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்தது. இத்திட்டம் மூலம் ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி வரையில் மருத்தவ காப்பீடு செய்யலாம்.

 

 • ரயில்வே துறைக்கு சொந்தமான 3 பொதுத்துறை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான நடைமுறைகளை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியது.

 

நியமனச் செய்திகள்: 

 • டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

 

 • காவிரி நடுவர் மன்றத்தின் புதிய தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சாப்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Call Now