February 20

Date:27 Feb, 2017

February 20

We Shine Daily News

jkpo;

gpg;uthp 20

தேசிய செய்திகள் :

20-2-17 india

 • ஏழுமலையானுக்கு 60ஆயிரம் பக்தர்களால் நெய்யப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள கின்னஸ் சாதனை படைத்த வேட்டி பிப்ரவரி- 18ல் நன்கொடையாக வழங்கப்பட்டது.

 

 • சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த நிகழ்வுகள் மற்றும் வாக்கெடுப்புகள் நடந்த விதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க சட்டப்பேரவை செயலர் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 • ரூ2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்கினால் கூடுதலாக 1% மூலவரி (டிசிஎஸ்) விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • நாகலாந்து முதல்வர் டி.ஆர்.ஜெலியங் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

 

 • தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் புதிய முறை அடுத்த மாதம் அமலுக்கு வரவிருக்கிறது.

 

 • நீதிமன்றங்களில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என சட்டம் மற்றும் பணியாளர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

 

 • உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் காலமானார்.

 

 • காற்று மாசுபாடு காரணமாக நிமிடத்துக்கு இரு இந்தியர்கள் மரணமடைவதாக பிரிட்டனின் ‘தி லான்ஸட்’ மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

20-2-17 world

 • புளோரிடாவில் மெல்போர்ன் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐ.எஸ்.இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கக் கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 

 • ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தற்காலிக தடை விதித்த டிரம்ப் உத்தரவு கோர்ட் உத்தரவுகளால் முடங்கி உள்ளது. இந்நிலையில் டிரம்ப் புதிய தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த உத்தரவால் கிரீன்கார்டு எனும் நிரந்தர குடியுரிமை வைத்திருப்போருக்கு பாதிப்பு கிடையாது.

 

 • ‘இந்து திருமண மசோதா -2017’ பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் பிப்ரவரி -18ல் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஆண், பெண் இரு பாலருக்கும் திருமண வயது 18 எனக் கூறப்பட்டுள்ளது.

 

 • அணுகுண்டு ஏவுகணை சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வடகொரியாவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர நிர்பந்திக்குமாறு சீனாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

 

 • சீன நாட்டின் தென்பகுதியில் உள்ள தென்சீனக் கடல் வழியே உலகின் மூன்றில் ஒருபகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
                           தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை பிப்ரவரி 18ல் ரோந்து பணியை தொடங்கி உள்ளது.

 

 • அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற பிறகு மைக்பென்ஸ் முதலாவது வெளிநாட்டு பயணமாக ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டகோவிலுள்ள நாஜி சித்ரவதை முகாமை பார்வையிட்டுள்ளார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

20-2-17 sports

 • ராட்டெர்டாம் உலக டென்னிஸ் போட்டியில் பிரான்சின் ஜோவில் பிரைட் சோங்கா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
  டெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சரத்கமலை ஜப்பானை சேர்ந்த 13வயது சிறுவனான டொமொகாசு தோற்கடித்தார்.

 

 • நியூசிலாந்து – தென்னாப்ரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹால்டனில் பிப்ரவரி -19ல் நடந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அணி வென்றது.

 

 • ஐபிஎல் 2017ம் ஆண்டுக்கான 10வது ஐபிஎல் ஏலம் பெங்களுரில் பிப்ரவரி 20ல் நடந்தது. இதில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அதிக மவுசு இருந்தது. 350க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கிறார்கள். ஓவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை வைத்துக்கொள்ளலாம்.
                   இந்த முறை வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ 10லட்சம் முதல் ரூ 2கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

20-2-17 econo

 • அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் தகவல்களை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.2500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 • பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கு 22 வாரங்களில் மத்திய அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டத்தை இறுதி செய்திருந்தது. ஆனால் அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். தகவலறியும் உரிமை சட்டம் மூலம் இச்செய்தி தெரியவந்துள்ளது.

 

 • மின்சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெவல்ஸ், லாய்ட் எல்க்ட்ரிக் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் டிரபிள் பிரிவை ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவெடுத்துள்ளது.

 

 • வருங்கால வைப்புநிதி பணத்தை எடுப்பது, இழப்பீடு செய்வது, ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்வது உள்ளிட்டவற்றை வரும் மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என பிஎப் ஆணையர் விபி ஜாய் தெரிவித்தார்.

 

Call Now