February 19

Date:19 Feb, 2017

February 19

We Shine Daily News

jkpo;

gpg;uthp 19

தேசிய செய்திகள் :

19-2-17 india

 • பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆதார்எண் கட்டாயம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

 

 • சமூக சேவகி இரோம் சர்மிளாவின் கட்சிக்கு தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ரூ.50000 நன்கொடை வழங்கியுள்ளார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்துசெய்ய கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர் இரோம் சர்மிளா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேரனும், பிரியங்கா காந்தியின் மகனுமான ரைஹான் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

 

 • சரக்கு சேவை வரிவிதிப்பை (ஜிஎஸ்டி) அமல்படுத்தும் போது மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிப்ரவரி -18ல் ஒப்புதல் வழங்கப்பட்டது.
            இதனை முழுமையாக அமல்படுத்த தேவையான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ- ஜிஎஸ்டி), மத்திய ஜிஎஸ்டி (சி- ஜிஎஸ்டி) உள்ளிட்ட துணை சட்டங்களுக்கு அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கடந்த 4ம்தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

 • நாடு முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள 43 விமான நிலையங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பொது விமானப் போக்குவரத்து துறைச் செயலர் ஆர்.என்.சௌபே தெரிவித்துள்ளார். இன்னும் ஓராண்டுக்குள் அந்த திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது நாடு முழுவதும் 72 விமான நிலையங்கள் இயங்கி வருகிறது.

 

 • ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேருமாறு மூளைச்சலவை செய்துவந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளையும் மேலும் 9 பேரையும் போலிசார் கைது செய்தனர்.

 

 • பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு கடிவாளமிடும் வகையில் ‘சார்க்’ அமைப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.

 

 • நாகலாந்தின் தலைநகர் கோஹிமாவில் பிறந்த ‘நிம்பூ சாப்’. இவரது ஈடு இணை இல்லாத வீரத்திற்காகவும், உயிர் தியாகத்திற்காகவும் ‘மஹாவீர் சக்ரா விருது’ இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
  ASC   எனப்படும்  Army Services Corps  பிரிவில் இவ்விருதைப் பெற்ற ஒரே கார்கில் வீரர் இவராவார். இவர் 12-12-1998ல் ராணுவத்தில் ராஜபுதானா ரைஃபில்ஸ் படைப்பிரிவில் “ஜூனியர் கமாண்டர்” ஆகப் பணியில் சேர்ந்தார்.

 

 • ஹரியாணாவில் கடந்தஆண்டு இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் காயமடைந்தவருக்கு புதிய இழப்பீட்டை ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

19-2-17 world

 • தென்மேற்கு பசிபிக் கடலின் அடியில் மூழ்கிய கண்டம் ‘ஸீலாண்டியா’ என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மூன்றில் இரண்டு பங்கு உள்ள கண்டம் ஸீலாண்டியாகும். இதன் நிலப்பரப்பு 4.5 மில்லியன் சதுர கி.மீ ஆகும். இது 94% கடல் நீருக்கடியில் மூழ்கியுள்ளது.   இதன் வெளியே தெரியும் மேல்பகுதிகள் நியூசிலாந்து, நியூகேலடோனியா ஆகும்.

 

 • உலக சர்வதிகாரிகளில் ஒருவராக திகழ்ந்த அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய சிவப்பு நிறத்திலானதும் அவர் பெயர் பொறித்ததுமான தொலைபேசி ஏலத்துக்கு வருகிறது.
                      ஏலம் அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணம் செசர்பீக்கே நகரில் நடைபெறுகிறது. இதன் ஆரம்பவிலை 1 லட்சம் டாலர் (சுமார் ரூ 67 லட்சம்).

 

 • அமெரிக்காவிலுள்ள தெற்கு கரோலினா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நிக்கிஹாலி(45) கவர்னர் பதவி வகித்து வந்தார்.
                      புதிய ஜனாதிபதி அவரை தற்போது அமெரிக்க தூதராக நியமித்துள்;ளார். அமெரிக்க சரித்திரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கேபினட் மந்திரி அந்தஸ்தில் பதவி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.

 

 • திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமானவை புதிய கல்வியாண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுமாறு அழைக்க அமெரிக்கவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சாண்டிகோ) முடிவு செய்துள்ளது.

  செவான் வழிபாட்டுத் தலத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

 • மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரும் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயிது உள்பட 5பேரின் பெயரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு பட்டியலிட்டது.

 

 • புத்த பூர்ணிமா விழா, பௌத்த நாடுகளில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் முழு பௌர்ணமியை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை விசாக நாளாக ஐ.நா.சபை அங்கீகரித்துள்ளது. பௌத்த நாடுகளில் ஒன்றான இலங்கை அரசு முதன்முறையாக மே 12ம் தேதி கொண்டாடும் விழாவில் மோடி பங்கேற்கிறார்.

 

 • நேட்டோ- அமெரிக்க உறவு உறுதியாக உள்ளது என்றும் நேட்டோ அமைப்பின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது எனவும் அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

 

 • பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் திருமணம் தொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
                             ஹிந்துக்களின் திருமணம், திருமணப்பதிவு, மணமுறிவு, மறுமணம், வயதுவரம்பு ஆகியவை குறித்த மசோதா ஏற்கனவே அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

 

விளையாட்டுச் செய்திகள் :

19-2-17 sports

 • சையது முஷ்டாக் அலி தேசிய டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு மண்டல அணியை கிழக்கு மண்டல அணி வீழ்த்தியது.

 

 • கிளீவ்லேண்ட் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்ணா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • தில்லியில் பிப்ரவரி -18ல் நடைப்போட்டியில் சந்தீப்குமார் 3 மணி 55 நிமிடம் 59 விநாடிகள் இலக்கை எட்டி தேசிய சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார். இவர் 2014ல் சீனாவில் நடைபெற்ற உலக நடைபோட்டியில் 3மணி 56நிமிடம் 22விநாடிகளில் இலக்கை எட்டி படைத்த இவரது தேசிய சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • லாவ்ஸ் நகர் வியன்டியான் நகரில் நடைபெற்ற ஆசிய ரக்பி செவன் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்றது. இந்த போட்டியில் இந்தியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், லாவ்ஸ் என மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன.

 

 • திருச்சி பிஷப் ஹபர் கல்லூhயிரியில் நடைபெற்ற ஜி.எச்.லாண்டர் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டி பிப்ரவரி -15ல் தொடங்கியது. இதில் 12 கல்லூhகள் பங்கேற்றது.

 

 • இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத்கமல் அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

 • ஆசியா பாடமிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

 

 • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொது மேலாளர் ஆர்.பி.ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

19-2-17eccoo

 • ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 80 ரூபாய் குறைந்தது.

 

 • இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 4 வாரங்களாக ஏற்றம் கண்டன. குறிப்பாக மோட்டார் வாகனம், மருந்துத்துறை நிறுவனங்கள், நிதிநிலை அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் உள்ளன.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை பெரியார் நகரில் புதிய கிளையை ஆரம்பித்துள்ளது. நாடு தழுவிய அளவில் இது 709 கிளைகளையும், சென்னையில் 41 கிளைகளும் அமைந்துள்ளது.

 

 • ஜனவரி மாதத்தில் மின்னணுப் பொருட்கள் இறக்குமதி ரூ. 26757 கோடியாகும்.

 

Call Now