February 15

Date:15 Feb, 2017

February 15

We Shine Daily News

jkpo;

gpg;uthp 15

தேசிய செய்திகள் :

15-2-17 india

 • சரக்கு சேவைவரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையின் விதிமுறைகளை முடிவு செய்யும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 10வது கூட்டம் தில்லியில் பிப்ரவரி -18ம் தேதி நடைபெறவுள்ளது.

 

 • காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக எல்லையில் பயங்கரவாதிகள் அமைத்த 65அடி நீள சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து ஊடுருவல் முயற்சியை தக்க நேரத்தில் முறியடித்தனர்.

 

 • பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு சார்பில் 11வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி தொடக்க விழா பெங்களுரு எலகங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி -14ல் நடைபெற்றது. ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

 

 • இதய நோயாளிகளின் உயிரைக் காப்பதற்கு அறுவை சிகிச்சை செய்து குழாய் வடிவத்திலான ‘கரோனரி ஸ்டென்டு’ பொருத்தப்படும். அதன் விலையை 85% அளவுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து உத்தரவிட்டது.
  ‘பி.எம்.எஸ்’ என்றழைக்கப்படும் வெறும் உலோக ஸ்டென்டு சில்லரை விலை ரூ.7623 ஆகவும், மருந்துகளில் கழுவி எடுத்த ‘டி.இ.எஸ்’ ஸ்டென்டு விலை ரூ.31080 ஆகவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி அனந்தகுமார் வெளியிட்டார்.

 

 • வங்கதேசத்தின் கடலோரக் காவல்படை கப்பலான ‘தாஜூதின்’ பிப்ரவரி 14ல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான ‘பகீரதர்’ சிறப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  தாஜூதின் கப்பலின் கேப்டன் தாரிக் அகமது தலைமையிலான வீரர்களும் இந்தியக் கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி சௌகான் தலைமையிலான முக்கிய அதிகாரிகளும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டனர்.

 

 • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-37 ராக்கெட் பிப்ரவரி-15 இன்று காலை 9.28 மணிக்கு 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது.
  320டன் எடை கொண்ட ராக்கெட் 44.4மீ உயரம் கொண்டது. 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோ சாட் 2 செயற்கைக் கோள்களை சுமந்து செல்கிறது.
                      2005ம் ஆண்டு மே-5ல் பி.எஸ்.எல்.வி.சி-6 ராக்கெட்டில் முதல் கார்ட்டோ சாட் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 • தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு மாநில சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் (அட்டார்னி ஜெனரல்) முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 • சிறு தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டத்தை அடுத்த நிதியாண்டில் அமல்படுத்த இதுவரை நிதிஒதுக்கீடு எதுவும் செய்யப்பட வில்லை.
                     கடந்த நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடியாக குறைக்கப்பட்டது.

 

 • ஒரு படத்தின் பகுதியாகவோ நியூஸ் ரீல் அல்லது ஆவணப்படத்தின் ஒரு பகுதியாகவோ தேசியகீதம் ஒலித்தால் அதற்கு எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

 • மேற்குவங்க மாநிலத்தில் வடக்கு பகுதியில் உள்ள கலிம்பாங் என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் அசன்சோல், ஜர்கிராமம் ஆகிய மேலும் 2 புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளது.

 

 • சொத்துக் குவிப்பு வழக்கில் வருவாய்க்கு மீறி 211% சொத்து குவிக்கப்பட்டு இருப்பது ஒன்றே சசிகலா உள்ளிட்ட 3பேரின் தண்டனையை உறுதி செய்ய போதுமானது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர்.

 

பன்னாட்டு செய்திகள் :

15-2-17 world

 • பாகிஸ்தானில் லாகூர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 83 பேர் காயமடைந்தனர்.
          இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு ஜமாத் உர் அக்ரார் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

 

 • அமெரிக்காவில் டிரம்பால் நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார்.

 

 • சீனா முதன்முதலாக விண்வெளிக்கு சரக்குகளுடன் கூடிய விண்கலம் ஒன்றை ஏப்ரல் மாதம் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது.

 

 • மூத்த பத்திரிக்கையாளர் டி.வி.பரசுராம்(93) உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் பிப்ரவரி -14 (நேற்;று) காலமானார்.
                 அமெரிக்காவில் 1950களில் பிடிஐ செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக தனது பத்திரிக்கை பணியை தொடங்கியவர். 20 ஆண்டுகளாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில பத்திரிக்கையில் அமெரிக்க செய்தியாளராக பணியாற்றியவர்.
                 பத்திரிக்கை துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக “ஹாவர்டு நீமேன்” உள்ளிட்ட பலவிருதுகளை பெற்றுள்ளார்.

 

 • அரசியலிலிருந்து விலகி நின்று ஜனநாயக மாண்பினைப் பாதுகாத்து வரும் இந்திய ராணுவத்திடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா அறிவுரை வழங்கினார்.

 

 • பிப்ரவரி 12ல் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 • இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை அழிப்போம் என அமெரிக்காவும் கனடாவும் கூட்டறிக்கை வெளியிட்டன.

 

 • சீனாவின் ஹ_னான் மாவட்டம் லியான்யுவான் நகரில் உள்ள ஜூபோ நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர்.

 

விளையாட்டுச் செய்திகள் :

15-2-17 sports

 • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான ஆடம்வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான போட்டித் தரவரிசையில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.    இந்திய அணியின் தீப்தி சர்மா 38வது இடத்திலும், திருஷ் காமினி 41வது இடத்திலும் உள்ளனர்.

 

 • மும்பையைச் சேர்ந்த குஷ்பகத்(7) என்ற சிறுவனுக்கு “கேன்டிடேட் மாஸ்டர்” பட்டம் வழங்கி உலக செஸ் சம்மேளனம் ‘ஃபிடே’ கௌரவித்துள்ளது.
                 குஷ்பகத் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் 3 தங்க பதக்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிர மாநில ‘சாம்பியன்ஷிப் -2016’ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • இந்திய ஹாக்கி வீரர் சந்தீப்சிங்குக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேஷ்பகத் பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் வழங்கியது.
                    ஹாக்கி முன்னாள் கேப்டன் திலீப் திர்கிக்குப் பிறகு கௌரவ டாக்டர் பட்டம் 2வது இந்திய ஹாக்கி வீரர் என்ற பெருமையை சந்தீப் பெற்றுள்ளார்.

 

 • எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் மகாராஷ்டிர மாநிலத்தின் ஒஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள தோஞ்சா கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.

 

 • மிஸ்பா சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

 • ஐலீக் கால்பந்தாட்ட போட்டியில் மும்பை – கொல்கத்தா, பெங்களுரு –ஐசால் அணிகள் மோதுகின்றன.

 

 • பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இந்திய அணிக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

15-2-17 economic

 • எஃகு, தாமிரம் உள்ளிட்ட சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள வேதாந்த நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 4 மடங்கு அதிகரித்து 1866 கோடியாக ஆனது.

 

 • மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸன் ஃபர்மா நிறுவனத்தின்; மூன்றாம் காலாண்டு லாபம் 4% சரிவடைந்தது.

 

 • பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆதித்ய பார்லா நூலோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் 8% அதிகரித்தது.

 

 • வோடஃபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னையில் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கியது. செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இதை அறிமுகம் செய்தார். உலகம் முழுவதும் 19 நாடுகளில் 4ஜி சேவை வழங்கி வருகிறது. இந்தியா 20வது நாடு ஆகும்.

Call Now