February 12

Date:13 Feb, 2017

February 12

We Shine Daily News

jkpo;

gpg;uthp 11

தேசிய செய்திகள் :

12-2-17 india

 • எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செய்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) காலை 7.45 மணியளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

 • பிப்ரவரி -11 புற்றுநோய் உயிர் பிழைத்தோர் தினம் டெல்லியில் கொண்டாடப்பட்டது.

 

 • இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா ‘தமிழ் ஐக்கிய மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

 

 • உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டையை ஒடிஷாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் உருவாக்கியுள்ளார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. உலக அமைதியை கருப்பொருளாக வைத்து எழுப்பப்பட்டுள்ள இந்த மணல் கோட்டை 48 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதாகும்.

 

 • மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ‘ஏரோ இந்தியா -2017’ என்ற பெயரில் சர்வதேச விமான கண்காட்சி பிப்ரவரி 14 முதல் 18 வயது வரை பெங்களுரிலுள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடைபெற உள்ளது.
  51 நாடுகளைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்கள் இடம் பெறுகின்றன. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தொடங்கி வைக்கிறார்.

 

 • எகிப்து நாட்டின் சினாய் தீப கற்ப பகுதியில் ராணுவத்துக்கு உதவிய 5 சிவிலியர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். சினாய் பகுதியில் கடந்த 2015 செப்டம்பரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கிய பிறகு 500 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

 • ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக்க வலியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இன்று முதல் குமரி மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளனர்.

 

 • ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதா அல்லது கருக்கலைப்பு செய்து கொள்வதா அல்லது கர்ப்பமடைவதைத் தடுப்பதா என்பதை முடிவு செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என உச்ச நீதிமன்ற நீதிபதி எ.கே.சிக்ரி தெரிவித்தார்.

 

பன்னாட்டு செய்திகள் :

12-2-17 world news

 • தென் அமெரிக்க நாடான பெருவில் 2001 முதல் 2006 வரை அதிபராகப் பதவி வகித்தவர். ஆலெஜாந்த்ரோ டொலிடோ, தென் அமெரிக்க வரலாற்றில் பழங்குடியைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற பெருமைக்குரியவர். அரசியலுக்கு எதிராக போராடி வந்த அவரே ஊழல் வழக்கில் சிக்கி தலைமறைவானார்.

 

 • கராச்சி நகரில் 8வது இலக்கிய திருவிழாவை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவதம் பாலே தொடங்கி வைத்தார்.

 

 • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐ.எஸ்.இயக்க போராளி கலீத் ஹெராப்பின்; குடியுரிமை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது.
          ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பறிக்கப்பட்ட முதல் ஐ.எஸ்.இயக்க போராளி இவர் ஆவார்.

 

 • ஆப்ரிக்க நாடான அங்கோலாவில், உய்கே நகரில் ‘ஜனவரி -4’ என்ற மைதானத்தில் சாண்டா ரிட்டா டிகேசியா – ரெக்டீவோ டி லிபோலா என்ற அணிகள் இடையோன உள்ளுர் லீக் கால்பந்து போட்டிகள் நடந்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி 17பேர் பலியாகினர்.

 

 • எகிப்தைச் சேர்ந்த உலகின் மிக பருமனான இமான் அகமது (36) என்ற 500 கிலோ எடையுள்ள பெண் எடைகுறைப்பு அறுவை சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஜப்பானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

12-2-17 sports

 • திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் “விளையாட்டில் மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் பேசிய இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் சர்வதேச போட்டிகளில் சாதிப்பதற்கு இந்திய விளையாட்டு துறையில் தற்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையை மாற்ற வேண்டும் என கூறினார்.

 

 • ‘மேட்ச் பிக்சிங்’ புகார் குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் உள்ளிட்ட 3 வீரர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தியள்ளது.

 

 • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி ‘பாலோ ஆணை’ தவிர்க்கப் போராடி வருகிறது.

 

 • இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 3000 ரன்களை எட்டினார் முஸ்பிகுர் ரஹிம். இந்த மைல்கல்லை எட்டிய 4வது வங்கதேச வீரர் இவர் ஆவார்.

 

 • ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது 6வது முறையாகும். தென் ஆப்ரிக்கா தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 19 ஆட்டத்தில் வெற்றி கண்டது.

 

 • இலங்கைக்கு எதிராக சதமடித்தன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய 7வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ஆம்லா.

 

 •  

  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது தென்ஆப்ரிக்கா.       தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பௌலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

12-2-17 econo

 • வங்கிகள் வட்டிக்கான கடன் விகிதங்களை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வலியுறுத்தியுள்ளார்.

 

 • மருத்துவ தொழிலுக்கு தேவையான கருவிகள் தயாரிப்பில் நிலவி வந்த வரிசார்ந்த வேறுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த குமார் பெங்களுரில் தொடங்கிய இந்தியா பர்மா 2017 மாநாட்டில் தெரிவித்தார். சர்வதேச அளவில் 6 நாடுகளை சேர்ந்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் இதில் பங்கேற்றுள்ளன.

 

 • கடந்த ஜனவரி மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 2 மடங்கு உயர்ந்து 1.66 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

 

 • நீண்ட கால திட்டங்களுக்கு கடன் வழங்கியதே வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளதன் காரணம் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறினார்.

 

வரலாற்றுப்பதிவுகள்:

12-2-17 histo

 • தலை சிறந்த ஆன்மீகத்தலைவரும் ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி- 12).
  மும்பை மாநிலத்தில் 1824ல் பங்காரா என்ற இடத்தில் பிறந்தார். இயற்பெயர் மூலசங்கர். 1875ல் ஆரிய சமாஜம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
                        ‘பிரதிமா பூஜன்’, ‘பஞ்சமஹாயக்ஞ விதி’, ‘பாகண்ட கண்டன்’, ‘வேதாந்த பிரகாஷ்’ உள்ளிட்ட நூல்களை இவர் மொழி பெயர்த்தார்.
                      1874ல் ‘சத்யார்ந்த பிரகாஷ்’ என்ற நூல்களை எழுதினார்.  மக்கள் இவரை ‘மகரிஷி’ எனப் போற்றினார்கள். 1883ல் 59வது வயதில் மறைந்தார்.

Call Now