February 10

Date:10 Feb, 2017

February 10

We Shine Daily News

jkpo;

gpg;uthp 10

தேசிய செய்திகள் :

10-1 india

 • விமானங்களில் தமிழ் உள்பட பிராந்திய மற்றும் மாநில மொழி பத்திரிக்ககைகள் விநியோகிக்க மக்களவையில் இன்று கோரிக்கை எழுப்பப்பட்டது. 

 

 • அதிமுக உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ உறுதியளித்தார்.

 

 • உத்திரப் பிரதேச சட்டபேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 12 பக்க தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜ்பப்பர் இதனை வெளியிட்டார்.

 

 • முதலமைச்சர் பன்னீர் செல்வம் அதிமுக பொதுச்செயலர் சசிகலா ஆகிய இருவரும் தனித்தனியாக ஆளுநர் வித்தியாசாகர் ராவை நேற்று சந்தித்தனர்.
                    பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பது குறித்தோ அல்லது ஆட்சயமைக்க சசிகலாவுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தோ எந்த முடிவையும் ஆளுநர் அறிவிக்க வில்லை.

 

 • சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

 

 • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. 2வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9ல் தொடங்கும்.

 

 • காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட மேலும் 2 அணு உலைகள் நிறுவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • நாடு முழுவதும் ஒரே நாளில் 34 கோடி சிறுவர் சிறுமியருக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம் பிப்ரவரி 10ல் இன்று செயல்படுத்தப்படுகிறது.
                ஆண்டுதோறும் பிப்ரவரி 10 தேசிய குடல்புழு நீக்க தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.
                உலக அளவில் குடல்புழு பாதிப்பு அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. கடந்த 2014 நிலவரப்படி இந்தியாவில் மட்டும் சுமார் 22 கோடி சிறுவர் சிறுமியர்கள் (1- 14 வயது வரை) குடல்புழு பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • ஆதி சங்கராச்சாரியாரின் போதனைகளை மக்களிடையே பரப்ப ஓம்காரேஷ்வரில் கல்விமையம் ஒன்று அமைப்பதற்கு மத்திய பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஒரே ராக்கெட்டில் 105 செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 15ல் விண்ணில் ஏவப்படுகிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) இயக்குநர் பி.வி.வெங்கட கிருஷ்ணன் கூறினார்.

 

 • தமிழக அரசியல் சூழல் விவகாரத்தில் கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

 

 • அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள 25 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணையதள வசதி கொண்டு வரப்படும் என மக்களவையில் பி.பி.சவுத்ரி தெரிவித்தார்.
                  ‘பாரத் நெட்’ திட்டத்தின் படி முதல் கட்டமாக 2017, மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை வழங்கப்படும். இரண்டாம் கட்டமாக 2018 இறுதிக்குள் மீதமுள்ள 1.5 கிராம பஞ்சாயத்துகள் உட்பட நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராமங்களுக்கும் இணையதள சேவை வழங்கப்படும்.

 

 • தெலங்கானாவில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் தெலங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

10-2 world

 • போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ரஷ்ய அதிபர் புதின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 • கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் வரும் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வரலாற்றில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்படுவது இதுவே முதன்முறை.

 

 • இனி சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர் அந்நாட்டிற்குள் நுழைவதற்குள் விமான நிலையத்தில் தங்கள் கைதேகைகளை பதிவு செய்ய வேண்டும் என சீன பொதுபாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
              இந்த நடைமுறையானது முதன்முறையாக பிப்ரவரி-10ல் இருந்து ஷென்ஸென் விமான நிலையத்தில் அமல் செய்யப்பட உள்ளது.

 

 • அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப்சசன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு செனட் சபையின் அங்கீகாரம் கிடைத்து விட்டது.
  நீதித்துறைக்கு பொறுப்பேற்ற ஜெப்சசன்ஸ் கீழ் 1 லட்சத்து 13 ஆயிரம் ஊழியர்களும் 93 அட்டார்னிகளும் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவார்கள்.

 

 • பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள சேர்போர் நகரிலிருந்து 25கிமீ தொலைவிலுள்ள பிலமான்வில்லே என்ற இடத்தில் அணு உலை வெடித்தது.

 

 • சிரியாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி அபுஹனி அல் மாஸ்ரி உள்பட அல் கொய்தா இயக்கத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர்.

 

 • உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான கென்யாவின் ததாப் முகாமை மூடும் அந்த நாட்டு அரசின் முடிவுக்கு ஐகோட் தடை விதித்துள்ளது. இங்கு 2 லட்சத்து 60 ஆயிரம் சோமாலியா அகதிகள் தங்கியுள்ளனர்.

 

 • ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஓட்டெடுப்பில் பிரதமர் தெரசாமே வெற்றி பெற்றார்.

 

 • சீனாவில் அரசுக்கு சொந்தமான கார் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சூ ஜியான்யிக்கு ஊழல் வழக்கில் 11½ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • சீன அதிபர் ஜின்பிங்குக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எழுதிய கடிதத்தில் சீனாவுடன் ஆக்கப்பூர்வ உறவை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 • இந்திய அரசு, ரகசிய அணு ஆயுத நகரை உருவாக்கி அதில் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதால் இந்த பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்தி மற்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக இந்திய அரசின் நடவடிக்கை உள்ளது என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

 • அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணினி வன்பொருள் தொழில் நுட்ப துறையை இன்டெல் நிறுவன தலைமை நிர்வாகி பிரையன் கிர்ஸானிச் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் புதிய சிப் தயாரிப்பு ஆலையை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
                    இந்த சிப் தயாரிக்கும் ஆலை உருவாக்கத்துக்கு 700 கோடி டாலர் (46000 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட உள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

10-2- sports

 • வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜ மாணிக்கம் நினைவு 2வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற பிப்ரவரி 3 முதல் 19 வரை நடக்கிறது. இதில் 18 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘நாக் அவுட்’ முறையில் போட்டி நடத்தப்படும்.

 

 • இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சேவை வரிஏய்ப்பு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஹைதராபாத் சேவை வரித்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

 

 • 1998ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் டிங்கோ சிங் புற்றுநோயால் அவதிப்படுகிறார்.

 

 • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

 

 • 11வது டெஸ்ட் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன், ஜூலை மாதத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகள் நேரடியாக தகுதி பெறுகிறது.

 

 • பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து அசார் அலி விலகினார்.

 

 • சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 130வது இடம் பிடித்துள்ளது.

 

 • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆதித்ய ஜோஷி காலிறுதிக்கு முன்னேறினார்.

 

 • திருச்சியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவில் கால்பந்து போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

10-2 econo

 • வாராக்கடன் ஒருக்கீடு அதிகரிப்பில் வங்கிகளின் லாபம் குறையும் என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா கூறினார்.

 

 • டெய்ம்லர் இந்தியா நடப்பு நிதியாண்டில் 9 டன்னுக்கும் குறைவான பிரிவில் புதிய சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்ய வுள்ளதாக டெய்ம்லர் டிரக்ஸ் ஆசியா தலைவர் மார்க் லிஸ்டோ செல்லா கூறினார்.

 

 • டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 2மடங்கிற்க மேல் அதிகரித்துள்ளது.

 

 • ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் கூட்டமைப்பு சார்பில் 5000 வர்த்தகர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் 20 பயிற்சி பட்டறைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

 • இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய தொலைத் தொடர்பு சேவையில் ‘ஏர்டெல்’ முதலிடத்திலும் ‘வோடபோன்’ 2வது இடத்திலும் ‘ஐடியா’ 3வது இடத்திலும் உள்ளது.

 

 • கேரளாவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.42 கோடியாக அதிகரித்துள்ளது.

 

 • பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் இருந்த 13 நிறுவனங்களின் ஒப்பந்தம் காலாவதி ஆனதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • பொதுத்துறையைச் சேர்ந்த 6 ஆலோசனை நிறுவனங்களை இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Call Now