February 09

Date:09 Feb, 2017

February 09

We Shine Daily News

jkpo;

gpg;uthp 09

தேசிய செய்திகள் :

9-2 india koodan-nuclear reactor

 • நாடு முழுவதும் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களில் ‘தேவ நாகரி’ எண்களை இடம் பெற்றிருக்கச் செய்வது ஹிந்தி பேசும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதையே காட்டுவதாக உள்ளது என மாநிலங்களவையில் திமுக கண்டனம் தெரிவித்தது.

 

 • மின்னணு முறையிலான பணப்பரிமாற்றத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

 

 • ஹிந்துஸ்தானத்தில் வாழும் அனைவரும், பாரம்பரியத்தை மதிக்கும் அனைவரும் ஹிந்துக்களே என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் போகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 81ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் மீது முடிவெடுக்கும் முதிர்ச்சியும் திறமையும் மாநில மக்களுக்கு நன்றாக உள்ளது என மாநிலங்களவையில் அதன் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார்.

 

 • ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதத்தை 6.25% நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது என ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு கூடத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

 

 • கிராமப்புற பகுதிகளில் ஏழை தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கூடுதலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது.

 

 • கூடங்குளம் 2வது அணுஉலையில் மார்ச் மாத இறுதிக்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார். 2வது அணு உலையில் இப்போது சோதனை அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும்.
                     1000 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 வரை 151.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

9-2 world

 • 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்திருப்பது குறித்து கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

 

 • இராக்கிலும் சிரியாவிலும் தொடர்ந்து போரிடுவதற்கு தேவையான நிதி வசதி இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகளிடம் இருப்பதாக ஐ.நா அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி பெல்ட்மேன் கூறினார்.

 

 • பாகிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானது.

 

 • பாகிஸ்தானின் எல்லையோரம் உள்ள பகுதிகளில் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதால் இந்திய துணைத் தூதர் ஜெபசிங்குக்கு தெற்காசிய மற்றும் சார்க் அமைப்புக்கான பாகிஸ்தான் பிரிவு பொது இயக்குநர் முகமது பைசல் அழைப்பாணை அனுப்பினார்.
  அதில் 2003ல் இந்திய- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்திய ராணுவம் மதிப்பளிக்க வேண்டும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் கூறினார்.

 

 • ஐ.நாவின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஹிந்தியை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக வெளிநாடுகளிடம் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

9-2 sports

 • சென்னையில் நடந்த மத்திய வருவாய் துறையினருக்கான தென் மண்டல விளையாட்டு போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

 • இந்தியா –வங்காளதேச அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. 2000ம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்காள அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

 

 • பெண்கள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி தாய்லாந்தை தோற்கடித்தது.

 

 • 19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இந்த ஆட்டம் டையில் முடிந்தது.

 

 • பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விஜயவாடாவில் நேபாளத்துடன் ஆடிய இந்திய அணி 8வது வெற்றியை சந்தித்தது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

9-2 eco ujala

 • பிப்ரவரி 20 முதல் சேமிப்பு கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் வாரம் ரூ.50000 வரை எடுக்கலாம் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 • அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள புதிய சவால்களை சமாளிக்கும் ஆற்றல் இந்திய தொழில் அதிபர்களிடமும், தொழில் முனைவோர்களிடமும் உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

 

 • ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’-ன் தேசிய தலைவர் கெதம்பர் ஆனந்த் மத்திய அரசு விரைவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் இத்திட்டத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு பாதிப்பு இல்லாத வகையில் வரிவிகிதம் இருக்கும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது.

 

 • மின் விநியோக நிறுவனமான டாடா பவர் டிடிஎல் நிறுவனம் அதிக எரிசக்தி திறன் கொண்ட எல்.இ.டி. பல்புகள் மற்றும் மின்விசிறிகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் ‘எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ்’ நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

 • ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவின் சிகாகோ வணிக பல்கலைக் கழகத்தில் நிதி துறை பேராசிரியராக 1991ல் இருந்து 25 ஆண்டுகளாக பணிபுரிந்தார். 2013- 16ல் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து தற்போது சிகாகோ வணிக பல்கலைக் கழக பேராசிரியர் பணிக்கு திரும்பியுள்ளார்.

 

 • முதன் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு எளிதில் கடன் கிடைப்பதற்கு வசதியாக ஐடிஎப்சி வங்கி இண்டியா லெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

 • உரத் தொழிலில் முன்னணியில் உள்ள இப்கோ நிறுவனம் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைந்து விவசாயிகளுக்கான தனியான டெபிட் கார்டுகளை வழங்க உள்ளது.
             கிராமப்புற விவசாயிகளும், ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை முறைக்கு மாற்றுவதற்கு வசதியாக இத்திட்டம் துவங்கப்படுகிறது. இதற்காக இப்கோ எனப்படும் இண்டியன் பார்மர்ஸ் பெர்டிவைசர் கோ ஆப்பரேடிவ் லிமிடெட் பேங்க் ஆஃப் பரோடாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.                             

Call Now