February 08

Date:09 Feb, 2017

February 08

We Shine Daily News

jkpo;

gpg;uthp 08

தேசிய செய்திகள் :

8-2 india

 • தன்னை பதவி விலக கட்டாயப்படுத்தியதால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். மக்கள், தொண்டர்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

 

 • உலகிலுள்ள 257 நாடுகளின் பணம், நாணயங்கள், அஞ்சல் தலைகள் ஆகியவற்றை சேகரித்து ‘யுனிக் வேர்ல்டு ரெக்கார்டு’ சாதனையை பொறியியல் பட்டதாரி கே.பாலாஜி செய்துள்ளார். இவர் திண்டிவனத்தைச் சேர்ந்தவர்.

 

 • ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபாவை தன்னுடன் இணைந்து பணியாற்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 • சசிகலா முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்தார்.

 

 • காவிரி வழக்கில் மார்ச்-21 முதல் ஏப்ரல்-11 வரை தினமும் விசாரணை நடத்தப்பட்டு அடுத்த 3 வாரங்களில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது.

 

 • ரூ500, 1000 செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் ரூ.10000 அபராதம் என பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

 

 • டெல்லியை சேர்ந்த ஒரு கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு சிறுநீரகம் இல்லை என்பது 21வது வாரத்தில் நடந்த பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் 6மாத கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

பன்னாட்டு செய்திகள் :

8-2 world

 • உலக பொருளாதார வல்லரசு நாடுகள் பட்டியலில் வரும் 2050ல் சீனா முதலிடத்தையும் இந்தியா 2ம் இடத்தையும் பிடிக்கும் என பிரிட்டிஷ் BWC  ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
           பிரிட்டிஷ் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ளது; BWC ஆய்வு நிறுவனம்.

 

 • சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படாது என அமெரிக்க அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

 

 • முஸ்லீம்கள் குடியேற்ற தடை விதிக்கும் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவின் 16 மாகாணங்களை சேர்ந்த அட்டார்னி ஜெனரல்கள் கலிஃபோர்னியா மேல் முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

 

 • ஐ.நா விதித்த தடைகளுக்கு ஒத்துழைப்பு தந்து ஈரானுடனான வர்த்தகத்தை இந்தியா குறைத்து கொண்டதாக அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

 • பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நாவில் அமெரிக்கா நேற்று மேற்கொண்ட முயற்சியை சீனா தடுத்துவிட்டது.

 

 • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் மசோதா தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதத்தை முடக்கும் விதத்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பிக்கள் நடந்து கொள்ள கூடாது என பிரதமர் தெரசா மே எச்சரித்துள்ளார்.

 

 • சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 13000க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என அம்னஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

8-2 sports

 • டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 300 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை தில்லியை சேர்ந்த மோஹித் அலாவத் (21) படைத்துள்ளார்.

 

 • ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தில்லி வேவ்ரைடர்ஸ் அணியை பஞ்சாப் வாரியர்ஸ் அணி வென்றது.

 

 • ஓடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் அடுத்த ஆண்டு (2018)-ல் 14வது ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டியை நடத்த ஒடிஸா மாநில அரசு ஒப்புதல் வழங்கியது.

 

 • ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அலினா ரெஜி 500 மீ தூரத்தை 37.4 நொடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்றார்.

 

 • ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு போட்டியாக சகவீரர் ஜடேஜா வருகிறார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

8-2 econo

 • நேரடி விற்பனை மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக 1300 புகார்கள் வந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்காக இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார்.

 

 •  ஐடிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் 2% விற்றதன் மூலம் மத்திய அரசு ரூ.6700 கோடி நிதி திரட்டி இருக்கிறது.

 

 •  சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கான தேசிய அளவில் ஒருங்கிணைந்த கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார்.

 

 •  பஞ்சாப் நேஷனல் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 4 மடங்கு உயர்ந்துள்ளது.

 

 •  ஐடிபிஐ வங்கியின் நிகர நஷ்டம் அதிகரித்து ரூ.2255 கோடியாக உள்ளது.

 

 •  பொதுதுறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்து ரூ 64 கோடியாக உள்ளது.

 

 •  ராம்கோ சிமெண்ட்ஸ் மூன்றாம் காலாண்டு வருவாய் 18% அதிகரித்துள்ளது.

 

 •  முருகப்பா குழுமத்தை சேர்ந்த ஈ.ஐ.டி பாரி நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ 12 கோடி லாபம் ஈட்டியது.

 

                                                                  நியமனச் செய்திகள்:

 

 • மண்டலங்களுக்கிடையேயான சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் வடக்கு மண்டல அணிக்கு ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 வரலாற்றுப் பதிவுகள்:

 • டிமிட்ரி மெண்டலீப்:
           

                   முதன் முதலாக தனிம அட்டவணையை உருவாக்கிய ரஷ்ய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மெண்டலீப் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி- 8). இவர் ரஷ்யாவின் தோபோல்ஸ்க் பகுதியில் பிறந்தார். ஆசிரியர் பயிற்சி கல்லூhயில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

          ரஷ்ய மொழியில் 61 நாட்களில் ‘ஆர்கானிக் கெமிஸ்ட்ரி’ என்ற 500 பக்க பாடப்புத்தகத்தை தனது 27 வயதில் எழுதினார். ரஷ்யாவின் உயரிய டெரிடோல் பரிசு பெற்றார்.

          இவர் தனிம அட்டவணையை 1869ல் உருவாக்கினார். ‘ஆவர்த்தன விதி’யை உருவாக்கினார். பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி இவருக்கு காப்ளே பதக்கம் வழங்கியது.

             தனிம அட்டவணையின் தந்தை எனப் போற்றப்படும் இவர் 73 வயதில் (1907) மறைந்தார்.

Call Now