February 07

Date:09 Feb, 2017

February 07

We Shine Daily News

jkpo;

gpg;uthp 07

தேசிய செய்திகள் :

7-2 manavaimustab

 

 •  முதலீட்டாளர்களிடம் ரூ25 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள சஹாரா குழுமத்தின் ரூ39 ஆயிரம் கோடி சொத்தை முடக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 •  சசிகலா 9ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாராகிறது.

 

 •  அடுத்த ஓராண்டுக்குள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 •  காற்று மாசுபாடு காரணமாக 12லட்சம் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக பசுமை இந்தியா தெரிவித்துள்ளது. இந்த தகவல் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் வெளியிட்ட ஆண்டு அறிக்கை மற்றும் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்துள்ளது.

 

 •  கடந்த 2½ ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் சூரியசக்தி திறன் 4 மடங்காக அதிகரித்திருக்கிறது. ஒரு ஜிகாவாட் சூரிய மின்சார உற்பத்தி என்ற இலக்கில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

 

 •  தமிழகம் முழுவதும் ரூபெல்லா தடுப்பூசி திட்ட முகாம் பிப்ரவரி 6முதல் தொடங்கியது. இதில் 9 முதல் 15 வயது வரை உள்ள 16.3 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

 

 •  யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பின் முன்னாள் ஆசிரியரும் தமிழறிஞருமான மணவை முஸ்தபா சென்னையில் பிப்ரவரி- 6ல் காலமானார். இவர் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை மீதுள்ள பற்றினால் தனது பெயருக்கு முன் மணவையை சேர்த்துக் கொண்டார். 1967ல் தமிழில் யுனெஸ்கோ கூரியர் வெளியானது.
  தமிழக அரசின் கலைமாமணி விருது, திருவிக விருது, எம்.ஜி.ஆர் விருது, அறிவியல் தமிழ்ச் சிற்பி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
  எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களால் 5 விருதுகள் பெற்ற ஒரே தமிழறிஞர் முஸ்தபா.

 

 •  கடந்த 3 ஆண்டுகளில் 39 எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதை திருப்பியளித்தனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 •  டாடா குழும இயக்குநர் பதவியிலிருந்து சைரஸ்மிஸ்திரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ல் திடீரென நீக்கப்பட்டதை யடுத்து தற்காலிக தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.

 

 •  சிவப்பு நாடா முறையை ஒழிக்கும் விதமாக காலாவதியான 1159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

பன்னாட்டு செய்திகள் :

7-2 world

 • இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்ற சந்தேக அடிப்படையில் துருக்கியில் கடந்த 2 நாட்களில் 748 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 •  ஆப்கன் உள்நாட்டுப் போரில் 2016ல் மட்டும் அப்பாவி பொதுமக்கள் 11,500 பேர் பலியாகினர். இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மற்றும் சிறார்கள் ஆவர் என ஐ.நா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 •  இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் முதல்முறையாக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் ரியாத்தில் உள்ள கலாச்சார மையத்தில் 3 நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 •  இந்தியா ஜப்பான் 1000கி.மீ தொலைவு பாயக் கூடிய டி.எப் -16 ரக ஏவுகணைகளுடன் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் அதிநவீன ஏவுகணைகளுடன் சீனராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

 •  நேட்டோ உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் மே மாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார்.

 

 •  துருக்கியில் பிப்ரவரி -6ல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாக பதிவானது.

 

விளையாட்டுச் செய்திகள் :

7-2 sports

 • இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2012ல் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார்.

 

 • 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உள்ளிட்ட 7பேருக்கு அடிப்படை விலையாக ரூ2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா வீரர் மெனிஸ் ஷபோ வெலாவ் நடுவர் மீது பந்தை அடித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
  உலக குரூப் பிளே ஆப் சுற்றில் பிரிட்டன் அணி கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி குரோஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

7-2 eco

 • முகவர்கள் பதவியிலிருந்து விலகுவதை தவிர்க்கவும் அவர்களை மேலும் ஊக்குவிக்கவும் அவர்களுக்கான பணிக்கொடைத் தொகையை எல்.ஐ.சி நிறுவனம் ரூ 3 லட்சமாக அதிகரித்துள்ளது.

 

 •  டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இந்தியா நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ 27.47 கோடி லாபம் ஈட்டியது.

 

 • முருகப்பா குழுமத்தை சேர்ந்த கார்பரண்டம் யூனிவர்ஸல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 44% அதிகரித்தது.

 

                                                             நியமனச் செய்திகள்:

 

 •  இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஜோரூட் நியமிக்கப்பட உள்ளர்ர்.

 

Call Now