February 06

Date:06 Feb, 2017

February 06

We Shine Daily News

jkpo;

gpg;uthp 06

தேசிய செய்திகள் :

fb

 • ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதாவுக்கு அடுத்து தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராக சசிகலா பதவியேற்கிறார்.
  முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் துணைவி ஜானகி 1988, ஜனவரி 7ல் தமிழக முதல்வரானார். 23 நாள்கள் மட்டுமே முதல்வர் பதவியிலிருந்தார்.
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 முறை முதல்வராக பதவி வகித்தார்.

 • அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். வரும் 9ம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21வது முதல்வராக சசிகலா பதவியேற்கிறார்.

 • இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

 • இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல விளையாட்டு இதழான விஸ்டன் புத்தகத்தின் அட்டை படத்தில் விராட் கோஹ்லி இடம் பெறுகிறார்.

 • கழுத்தில் மங்கல தாலி கட்டி நெற்றியில் குங்குமம் வைத்து விட்டாலே திருமணம் செய்து கொண்டதாக ஏற்றுக் கொள்ள முடியாது. 1955 இந்து திருமண சட்டப்படி இதை அங்கீகரிக்க முடியாது என மும்பை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

 • நவீன தொழில்நுட்பங்களுடன் அமராவதி வெலகபுடி பகுதியில் அதிநவீன சட்டப் பேரவை 230 இருக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி-10ல் புதிய சட்டப்பேரவை தொடங்கப்பட உள்ளது.

 • தேசிய கீதம், தேசிய பாடல் ஆகியவை தொடர்பான வரலாற்று உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

 • முகநூல் (ஃபேஸ் புக்) சமூக வலைதளத்தை அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி” ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இது சான்டியேரோ நகரின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஆய்வு. 52000 பேர் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பன்னாட்டு செய்திகள் :

derspiegel images

 • ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள வழக்கத்திற்கு மாறான கடும் பனிப்பொழிவால் 100 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

 

 • ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உள்பட பல்வேறு கிளர்ச்சி படைகள் செயல்படுகிறது. அதில் ஹெஸ்மி இஸ்லாமி அமைப்பு அரசுக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கனிக்கும் ஹெஸ்மி இஸ்லாமி தலைவர் குல்புதின் ஹெக் மத்தியாருக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 

 • டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் ஜெர்மனியின் பிரபல வார இதழ் ‘டெர் ஸ்பைஜெல்’ ஒரு பரபரப்பு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் வெட்டப்பட்ட சுதந்திர தேவி சிலையை ரத்தம் சொட்டும் நிலையில் ஒரு கையில் டிரம்ப் வைத்திருப்பது போலவும், மற்றொரு கையில் ரத்தம் தோய்ந்த கத்தி வைத்திருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
  அமெரிக்க பிணை கைதிகளை ஐ.எஸ்.பயங்கரவாதி ‘ஜிகாதி ஜான்’ துண்டிக்கும் படம் போல் இக்கார்ட்டூன் வரையப்ப ட்டுள்ளது.

 

 • காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாத வரையில் அங்கு வாழும் மக்களுக்கு அமைதியும் வளமும் கிடைக்காமலேயே இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார்.

 

 • வங்காளதேசத்தில் ஆளும் அலாமிலீக் கட்சியினர் எம்.பி.யாக திகழ்ந்து வந்த சுரன்ஜித் செங்குப்தா(72) பிப்ரவரி 5ல் மரணமடைந்தார்.
  இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். 1972ல் வங்காளதேசத்தின் முதல் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். அந்த நாட்டின் 2வது ரெயில்வே மந்திரி பதவியையும் இவர் வகித்துள்ளார்.

 

 • ரபேல் போர் விமான ஒப்பந்த கொள்முதல் தொடர்பாக இந்தியா – பிரான்ஸ் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் முழுவிவரங்கள் ரகசியமானது “பாதுகாப்பு ரகசியம் தொடர்பான விஷயங்கள் பொது நலன் கீழ் தெரிவிக்க முடியாது என விமானப்படை கூறியது. இந்திய விமானபடைக்கு பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016, செப்டம்பர் 3ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2½ ஆண்டுக்குள் விமானங்களை சப்ளை செய்யவும் கடைசி விமானத்தை 2022ம் ஆண்டு ஏப்ரலுக்குள் டெலிவரி செய்யவும் ஒப்பந்தமானது.

 

 • பிப்ரவரி 5ம் தேதி காஷ்மீர் ஒருமைப்பாடு தினமாக பாகிஸ்தானில் அனுசரிக்கப்படுகிறது.

 

 • ஈரான் கடந்த 29ம் தேதியன்று ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணையை டெஹ்ரானுக்கு கிழக்கு செம்னான் என்ற இடத்தில் சோதனை செய்தது. அந்த ஏவுகணை 1010கி.மீ தூரம் சென்று வெடித்தது.
  இதே போன்ற சோதனையை ஜூலை 2016லும் ஈரான் செய்தது. இந்த செய்கை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

 

 • நேபாளத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. நேபாளத்தில் கடந்த 2015, ஏப்ரலில் நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 9000 பேர் பலியாகினர். இந்நிலையில் நேற்று 476 முறையாக பிப்ரவரி 5ல் நில நடுக்கம் ஏற்பட்டது.

 

 • கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து வரை நிற்காமல் செல்லும் விமான சேவையை கத்தார் ஏர்வேஸ் பிப்ரவரி- 5ல் தொடங்கியது.
  தோகாவிலிருந்து புறப்பட்ட போயிங் 777ரக விமானம் 16 மணி நேரம் 20 நிமிட பயணத்துக்கு பின் விமானம் ஆக்லாந்தை சென்றடைந்தது. இது தான் தற்போது உலகின் நீண்ட தூரம் விமான சேவை.

 

 • இலங்கை சுதந்திர தின விழாவில் அதிபர் சிறிசேனா நாட்டில் வாழும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளதாக கூறினார்.

 

 • அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
  மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவுடனான அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்கும் என பாகிஸ்தான்; திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் ஆஸன் இக்பால் கூறினார்.

 

 • இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளை புகைப்படம் எடுத்த இந்தியாரை போலிசார் கைது செய்தனர்.

 

 • ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயிதை பாகிஸ்தான் அரசு கைது செய்ததையடுத்து அந்த அமைப்பு தனது பெயரை “தெஹ்ரீக் ஆஸாதி ஜம்மு- காஷ்மீர்” என மாற்றிக் கொண்டு வேறு பெயரில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

 

 • ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹெஸ்ப்-இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்பின் தலைவர் குல்பதீன் ஹெக்மதியரை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கி ஐ.நா.சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

squash im

 • 10 அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த லீக்கில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது. இது இந்தியாவின் 6வது வெற்றியாகும்.

 

 • இந்தியா ‘ஏ’ வங்காளதேசம் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.

 

 • இந்தியா நியூசிலாந்து இடையிலான ஆசிய- ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் புணேவில் 3 நாள் நடைபெற்றது. இந்திய 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது.

 

 • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி மலேசிய அணியைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.

 

 • ஹரியானா மாநிலம் மனேசரில் பிப்ரவரி-5ல் நடைபெற்ற தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான சரத்கமல் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

bank

 • ருபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு வங்கி கணக்குகளில் 5லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டு வருமான வரிதுறை எஸ்.எம்.எஸ், இமெயில் அனுப்பியுள்ளது.

 

 • பொது துறையை சேர்ந்த வங்கிகளில் 4 ஆண்டுகளில் கூடுதல் மூலதனமாக ரூ70000 கோடி மூலதனம் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘பேஸல்- 3’ எனும் சர்வதேச வங்கி மூலதன விதிமுறைகளை பின்பற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 • டாக்டர். ரெட்டீஸ் லேப்ரட்டரீஸின் மூன்றாம் காலாண்டு லாபம் 19% சரிந்ததாக இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அபிஜித் முகர்ஜி கூறினார்.

 

 • பொதுதுறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மூன்றாம் காலாண்டில் ரூ.130 கோடி நஷ்டத்தை கண்டுள்ளது.                                                                 நியமனச் செய்திகள்:
 • பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலராக அப்துல் பாசித்(58) நியமிக்கப்பட உள்ளார். இவர் தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக உள்ளார்.

 

 • ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு ஆய்வு பிரிவின் தலைவராக இந்தியாவின் அக்சம் குலங்கரே கோபிநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஐக்கிய நாடுகள் சபையின் பிற உறுப்பினர்களாக காம்பியாவின் ஜாக்சன், ஹைத்தியின் ஜூயன் வெஸ்லே, ரஷ்யாவின் நிக்கோலே லாஸின்கி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 • அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக ஐசாங் அகமது சௌதுரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலராக உள்ளார்.

Call Now