February 05

Date:06 Feb, 2017

February 05

We Shine Daily News

jkpo;

gpg;uthp 05

தேசிய செய்திகள்

 • அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7மூ ஆக இருக்கும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

   

 • ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண்களை இணைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு மாநிலங்களவையில் தெரிவித்தார்.

   

 • சட்ட விவகாரங்களில் அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பதவியை பொது சொத்தாக கருத முடியாது. எனவே தகவலறியும் உரிமை சட்ட வரம்புக்குள் அட்டார்னி ஜெனரல் பதவியை கொண்டு வர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

   

 • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்கள் பலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பாதுகாப்புத் துறையில் 73 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 72000 கோடி என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரி கூறினார்.

   

 • ஆதார் தொடர்பான சேவைகளை சட்ட விரோதமாக வழங்கி வந்த 12 மோசடி இணையதளங்கள் மற்றும் 12 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டன. ஆதார் அட்டை வழங்கும் சேவையை செய்வதாக கூறி குடிமக்களின் அடிப்படை தகவல்களை திருடும் சில இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளை முடக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக ஆதார் அடையாள ஆணைய தலைமை செயலதிகாரி அஜய் பூஷண் பாண்டே கூறினார்.

   

 • ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் 150 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

   

 • ஆந்திர மாநிலம் ஸ்ரீ காள ஹஸ்தியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சிவன்கோவில் ராஜகோபுரம் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி இடிதாக்கி இடிந்து விழுந்தது. புதிய ராஜகோபுரம் கட்டி முடிந்து யாக சாலையில் நடந்த பூஜையின் போது தீ விபத்து ஏற்பட்டது.

பன்னாட்டு செய்திகள் :

 • வட கொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அந்த நாடு பேரழிவைச் சந்திக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   

 • அமெரிக்காவிற்குள் வருவதற்காக விமானத்தில் ஏற இருந்த ஏழு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த பயணிகள் அதிபரின் பயணத்தடை உத்தரவு காரணமாக தடுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த பயணிகளை விமானத்திற்குள் சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்குமாறு உத்தரவிட்டனர்.

   

 • மார்ச் மாத இறுதியிலிருந்து சர்வதேச கால்பந்து போட்டிகள் குதிரை மாற்று வேட்டை நாய் போட்டிகளில் பொது மக்கள் பந்தயம் வைத்து சூதாட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட உள்ளது.

   

 • பிப்ரவரி 4 இலங்கையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

   

 • அகதிகள் மற்றும் ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் விதித்த தடை ஆணையை அமெரிக்கா முழுவதும் தற்காலிகமாக தடை செய்வதாக அமெரிக்காவின் சீட்டல் மாகாண நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் உத்தரவிட்டார்.

   

 • கடந்த 2011, மார்ச் 11ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் புகுஷிமா அணுஉலை கடுமையாக சேதமடைந்தது. அங்கிருந்த அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு ஏற்பட்டது.
  தற்போது புகுஷிமா அணுமின் நிலையத்தின் 2வது அணுஉலையில் அபாய அளவைத் தாண்டி கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. இதனால் அங்கு யார் சென்றாலும் உடனடியாக மரணம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

   

 • அமெரிக்காவின் புதிய அதிபரான டெனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கான அமெரிக்க விசாவை தடை செய்ததற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் அமெரிக்கர்கள் நுழைவதற்கு ஈரான் தடை விதித்தது.

   

 • வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் ஆடை கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். பெண்கள் ஜூன்ஸ் அணிந்தாலும் அவர்களது தோற்றம் நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என டிரம்ப் விதித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • 4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் ஆகஸ்டு 3 முதல் ஆகஸ்ட் 6 வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 400 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

   

 • இலங்கை தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன ஸ்பெர்க்கில் பிப்ரவரி 4ல் நடந்தது.
 •  

  வங்காளதேசம் இந்தியா ‘ஏ’ கிரிக்கெட் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் ஐதராபாத்தில் தொடங்குகிறது. ஒரு டெஸ்ட் போட்டி முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேசஅணி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் ஒரே ஒருநாள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

   

 • ஐசிசி வருவாய்ப் பகிர்வில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றுவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை ரூ.2லட்சம் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

   

 • 2016ல் இந்தியாவில் தங்கத்தின் தேவை 21மூ குறைந்து 675 டன்னாக உள்ளது.

   

 • பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் உலகின் 500 பிராண்ட்களை வரிசைப்படுத்திய பட்டியலில் கூகுள் முதலிடத்தில் உள்ளது.
  டாடா குழுமம் -13 வது இடம்
  ஏர்டெல் நிறுவனம் – 190 வது இடம்
  எல்.ஐ.சி நிறுவனம் – 22 வது இடம்
  இன்போசிஸ் நிறுவனம் -251 வது இடம்
  அமேசான் நிறுவனம் -3 வது இடம்
  சீனாவின் அலிபாபா -23 வது இடம்

   

 • இண்டிகோ விமான நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் ஏலியேசன், விமான பாதுகாப்பு பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறது.
           இந்த விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் பலமாதங்களாக ஒரே செட் கேள்வித் தாட்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் தேர்வு எழுத்துத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
           இதை சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்;பு பணியகம் (பிசிஏஎஸ்) கண்டறிந்தது. பிசிஏஎஸ் தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா பயிற்சி மையத்தை தற்காலிக ரத்து செய்துள்ளார்.

Call Now